எலினா கார்னரோ பிசுகோபியா

எலினா கார்னரோ பிசுகோபியா (Elena Cornaro Piscopia; 5 சூன் 1646 – 26 சூலை 1684) ஓர் இத்தாலிய மெய்யியலாளர். இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி.

எலினா கார்னரோ பிசுகோபியா
Elena Cornaro Piscopia
பிறப்பு(1646-06-05)சூன் 5, 1646
பலாசோ லோரிடான், வெனிசு
இறப்புசூலை 26, 1684(1684-07-26) (அகவை 38)
பதுவா
கல்லறைசாந்தா கியசுதினா திருச்சபை
தேசியம்இத்தாலியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பதுவா பல்கலைக்கழகம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • லோரா பாசி

இவர்தான் உயர்கல்விப் பட்டம்பெற்ற முதல் பெண்மணி ஆவார். சில முன்னெடுத்துக்காட்டுகளாக பீட்ரிசு கலின்டோ, யூலியானா மோரெல் ஆகியோரைக் கூறலாம்.[1] இக்காலத்தில் முனைவர் பட்டம்பெற்ற சிலராக கணிதவியலாளர் சோஃபியா கோவலெவ்சுகாயா, வரலாற்றியலாளர் சுடெபானியா வோலிக்கா ஆகியோரைக் கூறலாம். இவர்கள் இருவரும் 1875இல் பட்டம் பெற்றனர்.[2]

எலினா ஒரு சிறந்த இசைக் கலைஞர். இசைப் பற்றிய அக்கால மரபின் முழுப் பலமையையும் பெற்றுத் திகழ்ந்தார். இவர் கிளாவேசீன், கிளாவிகோர்டு ஆகியவற்றிலும் யாழ், வயலின் ஆகிய அனைத்திலும் வல்லமை பெற்றிருந்தார். வாழ்நாள் முழுவதிலும் அவற்றைப் பயன்கொண்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. Paul F. Grendler (1988). John W. O'Malley. ed. Schools, Seminaries, and Catechetical Instruction, in Catholicism in Early Modern History 1500-1700: A Guide to Research. Center for Information Research. பக். 328. 
  2. Schwartz, Agata (2008). Shifting Voices: Feminist Thought and Women's Writing in Fin-de-siècle Austria and Hungary. McGill-Queen's Press - MQUP. பக். 248. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780773532861. 

வெளி இணைப்புகள் தொகு