எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி (நூல்)


எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி ஒரு எளிய கணிதப் பார்வையென்பது கணிதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பினை வெளிப்படுத்தும் விதமாக தமிழில் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் 2016ஆம் ஆண்டு மதுரை தாசு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.[1]

எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி
நூல் பெயர்:எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி
ஆசிரியர்(கள்):மு. சுப்பையா தாஸ்
வகை:ஆன்மீகம்
துறை:அறிவியலும் ஆன்மீகமும்
மொழி:தமிழ்
பக்கங்கள்:147
பதிப்பகர்:தாசு பப்ளிகேசன்சு, மதுரை
பதிப்பு:சனவரி 2016
ஆக்க அனுமதி:ஆசிரியர்

நூலின் சிறப்பு

தொகு

கணித அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டிருப்பினும் கணிதத்திற்குத் தொடர்பில்லாதவர்களும் படித்து உணரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் தனது கருத்துக்களை 18 இயல்களில் பதிவு செய்துள்ளார். அறிவியலானது மனிதனை, உடல், உள்ளம், உயிர் என்ற மூன்று நிலைகளில் மட்டுமே ஆராய்கின்றது. ஏனெனில் இம்மூன்றினை மட்டுமே ஆய்விற்கு உட்படுத்தியறிய முடியும். இதுபோன்ற ஆய்விற்கு ஆன்மாவினை உட்படுத்த இயலாததால் ஆன்மாவினை அறிவியல் ஏற்பதில்லை. ஆன்மாவினை ஏற்றுக்கொள்ளாத அறிவியல் மனிதனின் முப்பரிமாணத்தினை உணர இயலாது என்பதை ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு என நான்கு பரிமாண நிலைகளில் இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மனிதன் தன்னை ”நான்” என்று கூறும் போது இந்த நான் எதை உரைக்கின்றது (உடலா? உள்ளமா? உயிரா? என வினா எழுப்பி, நான் என்பது ஆன்மாவினை குறிக்கின்றது என பகுத்தறிவு மூலம் விளக்கப்பட்டுள்ளது. உயிரியல் கருத்துக்களும் கணிதப் பார்வையில் கையாளப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு