எவர்டன் வீக்ஸ்

சர் எவர்டன் டிகோர்சி வீக்ஸ் ( Sir Everton DeCourcy Weekes பிறப்பு: பிப்ரவரி 26, 1925) ஒரு முன்னணி மேற்கு இந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார்.. ஃபிராங்க் வொரெல் மற்றும் க்ளைட் வால்காட் ஆகியோருடன் சேர்ந்து, மேற்கிந்திய கிரிக்கெட்டின் "தி திரீ டபிள்யூ" என்று அழைக்கப்பட்டார்.இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.இவர் 48 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 4455 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

சர் எவர்டன் வீக்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு26 பெப்ரவரி 1925 (1925-02-26) (அகவை 99)
மட்டையாட்ட நடைவலது கை
பங்குஅவ்வப்போது இழப்புக் கவனிப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 59)21 சனவரி 1948 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு31 மார்ச் 1958 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1944–1964பார்படோசு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே முதது
ஆட்டங்கள் 48 152
ஓட்டங்கள் 4,455 12,010
மட்டையாட்ட சராசரி 58.61 55.34
100கள்/50கள் 15/19 36/54
அதியுயர் ஓட்டம் 207 304*
வீசிய பந்துகள் 122 1,137
வீழ்த்தல்கள் 1 17
பந்துவீச்சு சராசரி 77.00 43.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/8 4/38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
49/– 124/1
மூலம்: கிரிக் அர்சிவ், 8 சனவரி 2009

இளைஞர் மற்றும் ஆரம்பகால வாழ்க்கை

தொகு

கென்சிங்டன் ஓவலுக்கு அருகிலுள்ள பார்படோஸில் உள்ள செயிண்ட் மைக்கேல், வெஸ்ட்பரி நகரில் உள்ள பிக்விக் கேப் பில் பிறந்தார். ஆங்கில கால்பந்து அணி எவர்டனின் பெயரினை இவரது தந்தையால் பெயரிடப்பட்டது (வீக்ஸ் இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரரான ஜிம் லேக்கரிடம் இதைச் சொன்னபோது, லேக்கர் "இது ஒரு நல்ல விஷயம் உங்கள் தந்தை வெஸ்ட் ப்ரோம்விச் ஆல்பியன் ரசிகராக இல்லாமல் போனாரே. " என நகைச் சுவையாகப் பதிலளித்தார்) [1]

வீக்கஸின் குடும்பம் ஏழ்மையானது . அதனால் அவரது தந்தை தனது குடும்பத்தை விட்டு டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள எண்ணெய் வயல்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் பதினொரு ஆண்டுகளாக பார்படோஸுக்கு திரும்பவில்லை.[2] அவரது தந்தை இல்லாத நிலையில், வீக்ஸ் மற்றும் அவரது சகோதரி அவரது தாயார் லெனோர் மற்றும் அவரது அத்தை ஆகியோரால் வளர்க்கப்பட்டனர். அவர்கள் தன்னை சிறப்பாக கவனித்துக் கொண்டதாக வீக்ஸ் அவர்களைப் பாராட்டுகிறார். இவர் செயின்ட் லியோனார்ட் பாய்ஸ் பள்ளியில் பயின்றார், பின்னர் கற்றலில் மிகவும் மோசமான நிலையிலேயே இப்வர் இருந்தார். இவர் ஒருபோதும் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறினார். பின்னர் அவர் உணவு மேலாண்மையினை வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார் [3] மேலும் விளையாட்டில் கவனம் செலுத்த விரும்பினார்.[4] துடுப்பாட்டத்திற்கும் மேலதிகமாக, வீக்கஸ் பார்படாசுவின் ஒரு தீவிர கால்பந்து வீரராகவும் இருந்தார்.[5] சிறுவனாக இருந்த போது வீக்ஸ் கென்சிங்டன் ஓவலில் மைதான வீரர்களுக்கு உதவினார். பெரும்பாலும் துடுப்பாட்ட்டத்தினைக் கண்பதற்காக இலவச நுழைவுகளைப் பெற்று அதற்கு ஈடாக மாற்று களாத் தடுப்பாளராகச் [6] செயல்பட்டார், மேலும் முன்னணி சர்வதேச துடுப்பாட்ட வீரர்களை நெருக்கமான தூரத்தில் பார்க்கும் வாய்ப்பை பெற்றார்.[7] 13 வயதில் இவர் பார்படாஸ் கிரிக்கெட் லீக்கில் (பி.சி.எல்) வெஸ்ட்ஷயர் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடத் தொடங்கினார். அவர் தனது உள்ளூர் கிளப்பான பிக்விக் அணிக்காக விளையாடுவதை விரும்பினார்.ஆனால் அந்த சமயத்தில் அந்தச் சங்கத்தில் விளையாட வெள்ளை வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.[8]

இவர் 1939 ஆம் ஆண்டில் பள்ளியை விட்டு வெளியேறிய பின்னர் 14 ஆம் வயதில், வேலை கிடைக்காமல், துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து விளையாடுவதில் தனது நாட்களைக் கழித்தார். பின்னர் அவர் தனது துடுப்பாட்ட வெற்றியின் பெரும்பகுதியை பயிற்சிக்கு செலவிட்டார்.[9] 1943 ஆம் ஆண்டில் இவர் பார்படாஸ் ரெஜிமென்ட்டில் சேர்ந்தார் மற்றும் 1947 ஆம் ஆண்டில் அவர் வெளியேற்றப்படும் வரை லான்ஸ்-கார்போரலாகப் [8] பணியாற்றினார், மேலும் அவர் ஒருபோதும் சிறப்பாக அவர் வேலை பார்த்தது இல்லை.[7]

குறிப்புகள்

தொகு
  1. Walcott p. 14.
  2. Weekes p. 4.
  3. Walcott p. 18.
  4. Sandiford, K. (1995) Everton DeCourcey Weekes, Famous Cricketers Series: No 29, Association of Cricket Statisticians and Historians, Nottingham. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-947774-55-6
  5. Walcott p. 17.
  6. Spooner, P. (1998) "Sir Everton Weekes: My First Test", The Barbados Nation, 18 December 1998
  7. 7.0 7.1 Walcott p. 20.
  8. 8.0 8.1 Sandiford (1995) p. 6.
  9. Weekes, p. 5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எவர்டன்_வீக்ஸ்&oldid=3931632" இலிருந்து மீள்விக்கப்பட்டது