எசு. ஆர். இராதா

தமிழக அரசியல்வாதி
(எஸ். ஆர். இராதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எஸ். ஆர். இராதா (S. R. Radha) ஓர் தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையின் முன்னாள் அமைச்சரும் ஆவார்.[1] 1934-ல் கும்பகோணத்தில் பிறந்தவர்.[2]

எஸ். ஆர். இராதா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1934
இறப்பு8 டிசம்பர் 2020
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

1972 அக்டோபர் 17 அன்று அ.தி.மு.க துவக்ககப்படபோது அதன் முதவாலாவது உறுப்பினாராக எம்.ஜி.ஆர் பதிவு செய்ய மூத்த உறுப்பினர்கள் வரிசையில் ஆறாவதாக உறுப்பினராக கையொப்பமிட்டவர் எசு. ஆர். இராதா ஆவார். 1977 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] அப்போது சுற்றுலா வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார் என்றாலும் இவரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஆக்கினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் மீன்வளத் துறை அதையடுத்து கைத்தறி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராகவும், சிலகாலம் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.[4] 1989இல் அதிமுக சார்பில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அதிமுகவின் ஜா,ஜெ அணிகளின் இணைப்பிற்கு பின் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில்,நடைபெற்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.[5][6] பின்னர் 1989-1991ல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1977 கும்பகோணம் அஇஅதிமுக 32%
1989 மதுரை கிழக்கு அஇஅதிமுக 48.88%

இறப்பு

தொகு

வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவின் காரணமாகவும் எஸ். ஆர். இராதா தனது 86வது வயதில் 8 டிசம்பர் 2020 அன்று சென்னை மருத்துவமனையில் மறைந்தார்.[7] [8][9][10]

மேற்கோள்கள்

தொகு
  1. 1980 Tamil Nadu Legislative Assembly election - Minister for Environmental Pollution control from 1st July 1983
  2. தமிழ்நாடு சட்டமன்ற இணையம் பக்கம் 63
  3. "187. KUMBAKONAM S.R. ERADHA" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-02-20.
  4. "எஸ்.ஆர்.இராதா: அதிமுகவின் ஆறாவது கையெழுத்து". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  5. Madurai East (Tamil Nadu) Election Results
  6. 144 - MADURAI EAST
  7. தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா மறைவு
  8. தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா மறைவு: முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
  9. அதிமுக இரங்கல்
  10. Former Minister S.R. Radha dead

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._ஆர்._இராதா&oldid=3926540" இலிருந்து மீள்விக்கப்பட்டது