எஸ். ஆர். சதீஷ்குமார்
எஸ். ஆர். சதீஷ் குமார் (S. R. Sathish Kumar) ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
எஸ். ஆர். சதீஷ்குமார் S. R. Sathish Kumar | |
---|---|
பிறப்பு | திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா |
பணி | ஒளிப்பதிவாளர் |
தொழில் வாழ்க்கை
தொகுசதீஷ்குமார் ஆரம்பத்தில் பி. செல்வகுமார், ஏ. இரமேஷ்குமார் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். பின்னர், மூத்த ஒளிப்பதிவாளராக தனது முதல் வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, தனது நண்பரும் சக ஒளிப்பதிவாளருமான என். கே. ஏகாம்பரத்துடன் பணியாற்றினார்.[1] ஏ. ஐ. இராஜா இயக்கிய தீக்குச்சி திரைப்படத்தில் முக்கிய ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கல்யாணகிருஷ்ணனின் பூலோகம் திரைப்படத்தில் பணிபுரிய கையொப்பமிடுவதற்கு முன்பு, எஸ். பி. ஜனநாதனுடன் இணைந்து பேராண்மை (2009) திரைப்படத்தில் பணியாற்றினார்.[2] படத்தின் தாமதம் காரணமாக இவர் மாப்பிள்ளை (2011) மீகாமன் (2014) ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். மீகாமன் திரைப்படத்திற்காக குறிப்பிட்ட காட்சிகளுக்காக தொலைபேசி ஒளிப்படக்கருவியைப் பயன்படுத்தினார். [3][4] பின்னர் பூலோகம் (2015) இறுதியாக வெளியிடப்படுவதற்கு முன்பு இந்தித் திரைப்படமான தேசி கட்டே (2014) இல் பணியாற்றினார்.
திரைப்படவியல்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2008 | தீக்குச்சி | தமிழ் | |
2009 | பேராண்மை | தமிழ் | |
2011 | மாப்பிள்ளை | தமிழ் | |
2013 | ஸ்டோரி கதே | கன்னடம் | |
2014 | தேசி கட்டே | இந்தி | |
2014 | மீகாமன் | தமிழ் | |
2015 | பூலோகம் | தமிழ் | |
2016 | வாகா | தமிழ் | |
2017 | கடம்பன் | தமிழ் | |
2018 | நானு கி ஜானு | ஹிந்தி | |
2019 | அறிவான் | தமிழ் | |
2020 | பங்கர் | இந்தி | |
2022 | ராஜா பீமா | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ayngaran International". Archived from the original on 27 June 2018.
- ↑ Naig, Udhav (12 July 2013). "'Colossus' in Kollywood". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/colossus-in-kollywood/article4906678.ece. பார்த்த நாள்: 26 June 2018.
- ↑ "- YouTube". YouTube.
- ↑ "Meaghamann". Archived from the original on 26 March 2015.