மாப்பிள்ளை (2011 திரைப்படம்)

சுராஜ் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாப்பிள்ளை 2011 இல் வெளிவந்த தமிழ் காதல், நகைச்சுவை திரைப்படம். இப்படத்தை இயக்கியவர் சுராஜ். இப்படத்தில் தனுஷ் மருமகனாகவும், மனிஷா கொய்ராலா மாமியாராகவும் மற்றும் ஹன்சிகா மோட்வானி மகளாகவும் நடித்துள்ளனர்.[1] இந்தத் திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளியான அதே பெயருடைய படத்தின் மறுவுருவாக்கம் ஆகும். சன் பிக்சர்ஸ் விநியோகித்தது, இது ஏப்ரல் 8, 2011 இல் வெளியிடப்பட்டது. இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.[2]

மாப்பிள்ளை
இயக்கம்சுராஜ்
தயாரிப்புநெமிசந்த் ஜபக்
ஹிதேஷ் ஜபக்
இசைமணிசர்மா
நடிப்புதனுஷ் (நடிகர்)
ஹன்சிகா மோட்வானி
மனிஷா கொய்ராலா
விவேக்
ஒளிப்பதிவுஎஸ். ஆர். சதீஷ் குமார்
படத்தொகுப்புகிசோர் (படத்தொகுப்பாளர்)
விநியோகம்சன் படங்கள்
வெளியீடு8 ஏப்ரல் 2011 (2011-04-08)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

சரவணன் (தனுஷ் (நடிகர்)) அனைவருக்கும் நல்லது செய்யும் மென்மையான குணம் கொண்டவன். அவனை அவ்வூரிலுள்ள அனைவரும் விரும்புகின்றனர். அப் பகுதியில் வசிக்கும் சின்னா (விவேக்) நடிகை நமீதாவின் தீவீர ரசிகன். இவ்விருவரும் காயத்ரியை (ஹன்சிகா மோட்வானி), விரும்புகின்றனர். காயத்ரி, தொழிலதிபர் ராஜேஸ்வரியின் (மனிஷா கொய்ராலா மகள். சின்னா பலமுறை முயன்றும் காயத்ரியுடன் நெருக்கமாகப் பழக முடியவில்லை. இதற்கிடையில் காயத்ரி, தன்னை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றிய சரவண்ன் மீது காதல் கொள்கிறாள். இதையறிந்த ராஜேஸ்வரி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறாள். ஏனெனில் தனக்கு அடங்கி, தான் சொல்லும் வேலைகளைச் செய்ய ஒரு மருமகன் வேண்டும் என நினைத்ததே காரணமாகும். பின்னர் சரவணனுடைய பின்னணி அறிந்து அதிர்ச்சியடைகிறாள். சரவணன் ஒரு முரடன் என்பதை அறிந்து மகளிடமிருந்து பிரிக்க நினைக்கிறாள். அவனைத் தடுப்பதற்காக செய்யும் வேலைகளை எல்லாம் சரவணன் எளிதில் சமாளிக்கிறான். இறுதியில் சரவணன் ராஜேஸ்வரி தனது பெற்றோரை (பட்டிமன்றம் ராஜா மற்றும் ஸ்ரீரஞ்சனி]]) அவமதித்ததை அறிகிறான். அதனால் கோபமடைந்து ராஜேஸ்வரியை பழி வாங்குவதற்காக சில ஏற்பாடுகளை ராஜேஸ்வரியின் சோதிடர் (மனோபாலா) மூலம் செய்கிறான். பின்னர் நடக்கும் சம்பவங்கள் கதையின் முடிவாகிறது.

நடிப்பு தொகு

வரவேற்பு தொகு

இத் திரைப்படம் "மாயாஜால்" திரையரங்கில் ஒரு நாளில் 33 காட்சிகளாக திரையிடப்பட்டு அந்த வார இறுதியில் 15.35 இலட்சம் ரூபாய் வசூலை ஈட்டியது.[3] சென்னையில் இத் திரைப்படம் வெளிவந்து முதல் மூன்று வார வருவாய் ரூபாய் 4.12 கோடியாகும்.[4] மேலும் இணைய தளங்களிலும் இப் படம் வரவேற்பை பெற்றுள்ளது.[5]

இசை தொகு

இப் படத்திற்கு இசை அமைத்தவர் மணிசர்மா. இசை வெளியீட்டு விழா மார்ச்சு 11, 2011இல் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. ஜெயம் ரவி மற்றும் பரத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இது சன் தொலைக்காட்சியில் மார்ச்சு 27, 2011இல் ஒளிபரப்பப்பட்டது.[6] "சோனி மியூசிக் இந்தியா" இதை சந்தைப்படுத்தியது.[7]

Track listing
# பாடல்பாடியவர்கள் நீளம்
1. "ஆறு படை"  விஜய் யேசுதாஸ் & முகேஷ் 04:56
2. "லவ் லவ் (படத்தில் வரவில்லை)"  ராகுல் நம்பியார் & ரீடா 04:41
3. "ஒன்னு ரெண்டு"  முகேஷ் & சைந்தவி (பாடகி) 04:23
4. "ரெடி ரெடியா"  ரஞ்சித் & சைந்தவி 04:31
5. "என்னோட ராசி"  ரங்சித் 04:26
6. "ரெடி ரெடியா"  ரங்சித் 03:45
7. "மாப்பிள்ளை"  வாத்தியம் 02:06
மொத்த நீளம்:
28:48

மேற்கோள்கள் தொகு

  1. "Manisha is Dhanush's mother-in-law". Indiaglitz. 20 January 2011 இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100122190142/http://www.indiaglitz.com/channels/tamil/article/53672.html. பார்த்த நாள்: 16 September 2011. 
  2. "Chennai Box Office - April 29 to May 1, 2011". Sify.com. 4 May 2011 இம் மூலத்தில் இருந்து 25 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160425110716/http://www.sify.com/movies/boxoffice.php?id=14968998. பார்த்த நாள்: 14 January 2016. 
  3. "Mappillai takes a super opening". 13 April 2011 இம் மூலத்தில் இருந்து 15 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110415003443/http://www.sify.com/movies/mappillai-takes-a-super-opening-news-tamil-lemlmLbbbcb.html. பார்த்த நாள்: 16 September 2011. 
  4. "Mappillai - Behindwoods.com - Tamil Top Ten Movies - Mappillai Ko Vaanam". Behindwoods.com. http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-may-02/tamil-cinema-topten-movie-mappillai.html. பார்த்த நாள்: 2011-09-16. 
  5. "Mappillai is a bad copy of the original". Rediff.com. 8 April 2011. http://www.rediff.com/movies/report/south-review-mappillai/20110408.htm. பார்த்த நாள்: 16 September 2011. 
  6. "audio launch telecasting". 23 March 2011 இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110407025911/http://www.w3newz.com/2011/03/sun-tv-to-telecast-mappillai2011-audio-launch-function/. பார்த்த நாள்: 16 September 2011. 
  7. "Dhanush's Mappillai audio launched". சிஃபி. 13 March 2011 இம் மூலத்தில் இருந்து 13 மார்ச் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110313012644/http://www.sify.com/movies/dhanush-s-mappillai-audio-launched-news-tamil-ldmkzufadda.html. பார்த்த நாள்: 16 September 2011. 

வெளி இணைப்புகள் தொகு