எஸ். சிவானந்தராஜா
|
எஸ். சிவானந்தராஜா சங்கீத வித்தகர், கவிஞர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், இசை, இலக்கிய ஆய்வாளர் என பல தளங்களில் ஈடுபட்டு முத்திரை பதித்தவர் கலாபூஷணம் எஸ். சிவானந்தராஜா.
சங்கீத விற்பனராக
தொகுஆரம்ப வகுப்பினை யா/அளவெட்டி சதானந்த வித்தியாலயத்தில் பெற்றபோது வேதாரண்யம் மறைக்காடதேசிகன், காஞ்சிபுரம் மெய்கண்டார் ஆதீனம் பி.ஏ.எஸ். இராஜசேகரன் ஆகியோரிடம் கற்றும் ஆசி பெற்றும் யா/அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் க.பொ.சாதாரணத்தில் கர்நாடக சங்கீதம் செல்வி .செ. யோகாம்பிகையிடம் கற்றும் வட இலங்கைச் சங்கீத சபையில் 1965-1967 இல் சங்கீதபூஷணம் திரு வி.கே. நடராஜன் அவர்களிடமும் அளவை இசைக் கலாமன்றத்தில்சங்கீத பூஷணம் செல்வி மல்லிகாதேவி நடேசு, சங்கீத வித்துவான் திரு. அ. திலகேஸ்வரன் இசைமணி திரு பொன்.முத்துக்குமாரு ஆகியோரிடமும் கற்று ஆசிபெற்றார். அக்காலங்களில் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வாய்ப்பாட்டு திருமுறை மெல்லிசைக் கலைஞனாக 1975-1983 இல் பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றினார். இசைச்சித்திரங்கள், பக்தரஞ்சினி பாமாலை, விந்தைச் சுவைக் கலைகள் கிராமியப் பாடல்கள் என பல நிகழ்ச்சிகளில் கலந்துசிறப்பித்தார். 1973-1983 காலப்பகுதியில் பல பரதநாட்டிய நிகழ்வுகளிலும் அரங்கேற்றங்களிலும் பின்னணிப் பாடல் இசைத்தார். இலங்கை ரூபவாகினியில் கண்ணுக்குள் நுழைந்த கள்வன் (1983), தசாவதாரம் (1983) ஆகிய நாட்டிய நாடகங்களின் பின்னணி பாடகராக பங்குகொண்டார்.
சங்கீத ஆசிரியராக, எழுத்தாளராக
தொகு1990-2020 காலப்பகுதியில் இசைப் பயிற்சி வகுப்புகளுடன் நூல்கள் கட்டுரைகள் கவிதைகள் எழுதுவதில் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார். சுழிபுரம் வடக்கு யோகி கார்த்திகேசு அறநெறிப்பாடசாலையில் பண்ணிசை சமயம் கற்பித்தார். இவரிடம் இசைப் பயிற்சி பெற்ற மூன்று மாணவர்கள் வட இலங்கை சங்கீத சபை இறுதிப்பரீட்சையில் சித்திபெற்றனர், மேலும் அறுவர் யாழ் இராமநாதன் பல்கலைக்கழ நுண்கலைப்பீடத்தின் மாணவர் பயிற்சி பெற்று இறுதிப் பரீட்சையில் சித்தி பெற்றார் இருபது வருடங்கள் சேகரித்த மலர்கள், சஞ்சிகைகள், நூல்கள் என்பவற்றைக்கொண்டு இசையுடன் தொடர்பான நூல்கள் கட்டுரைகள் எழுதியதுடன் மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்தார்.
வெளிவந்த சமய நூல்கள்:
தொகு- சிவதரிசம் - 2006
- தித்திக்கும் திருமுறை அமுதம் பாகம் 1 -2010
- தித்திக்கும் திருமுறை அமுதம் பாகம் 2 - 2014
- சைவசமய தகவற் களஞ்சியம் - 2017
- வழிபாட்டுத் தெய்வங்களில் ஐயப்பன் -2018
வெளிவந்த கலைத்துறை சார்ந்த நூல்கள்
தொகு- இலக்கிய இசைச்சாரல் - 2000
- ஈழத்துக் கலைத்துறைப் பதிவுகள் - 2004
- கலைமுகங்கள் ஓர் அறிமுகம் - 2007
- சுவாமி விபுலாந்தரும் இசையும் - 2010
- கலையரங்க அன்றும் இன்றும் - 2015
- பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் - 2008
- ஈழத்து தமிழ்க் கலைஞர்கள் - 2019
வெளிவந்த கவிதை நூல்கள்
தொகு- அருளிசைப் பாடல்கள் - 2002
- பழையதும் புதியதும் - 2018
- புதுமையும் பழமையும் - 2023
பொதுவான நூல்கள்
தொகு- புலவர் வை. க. சிற்றம்பலம் அவர்களின் வாழ்க்கை வரலாறு -2015
- வலிகாமம் மேற்குப் பிரதேச செயலர் பிரிவு மக்களின் வாழ்வும் வளமும் - 2019
பதிப்பாசிரியராக வெளிவந்த நூல்கள்
தொகு- சுவாமி விபுலானந்தர் நான்மணி மாலை -ஆசிரியர் வை.க.சிற்றம்பலம் -2015
- நல்லைக் கலம்பகம் -ஆசிரியர் வை.க.சிற்றம்பலம் - 2020
- இணுவை சிவகாமி அம்மை பிள்ளைத்தமிழ் - 2020
- யாழ்ப்பாணத் திருத்தலங்களின் திருவூஞ்சல் - 2018
- முதுபெரும் புலவர் வை. க. சிற்றம்பலம் இயற்றிய பாடல்கள் -2018
பெற்ற விருதுகள் :
தொகு- கலைவாரிதி வலிமேற்கு கலாசாரப் பேரவை - 2008
- சங்கீத கலாவித்தகர் வடஇலங்கை சங்கீதசபை - 1991
- கலாபூஷணம் இலங்கை கலாசார அமைச்சு - 2012
- ஆளுநர் விருது வடமாகாண ப. அ. அமைச்சு - 2013