எஸ். தங்கராசு
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
எஸ். தங்கராசு (S. Thangarasu; 5 செப்டம்பர் 1949 – 6 சூன் 1994) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து 1984 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக, பெரம்பலூர் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
எஸ். தங்கராசு | |
---|---|
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1984–1989 | |
முன்னையவர் | கே. பி. எஸ். மணி |
பின்னவர் | அ. அசோக்ராஜ் |
தொகுதி | பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கொளத்தூர், பெரம்பலூர், தமிழ்நாடு | 5 செப்டம்பர் 1949
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் |
துணைவர் | இந்திராணி |
பிள்ளைகள் | மணிவண்ணன் மாரிசரத் சுபலட்சுமி |
பெற்றோர் | சுப்பிரமணியன் மாரியம்மாள் |
பிறப்பு
தொகுஇவர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள,கொளத்தூரில் 5 செப்டம்பர் 1949 ஆம் ஆண்டு சுப்ரமணியம் என்பவருக்கு மகனாக பிறந்தார்.அவரது தாத்தா ஆனைகுட்டி மேஸ்திரி(1892-1955) ஆனைமலை எஸ்டேட்டில் ஆங்கிலேயரிடம் கங்காணியாக பணிபுரிந்து வந்தார்.அவரது மகன் சுப்பிரமணியனுக்கும் மரியாயிக்கும் தங்கராசு மகனாக பிறந்தார்.இந்திய சுதந்திரம் அடைந்தபிறகு வெள்ளையர்கள் 1947 இல் வெளியேறியபோது போது ஆனைக்குட்டி மேஸ்திரியின் விசுவாசத்தை மனதில்கொண்டு அவருக்கு போதிய அளவிலான விவசாய நிலங்களை குளத்தூர் பகுதியில் வழங்கிவிட்டு சென்றனர் அதில் விவசாயம் செய்துவந்த தங்கராசுவின் பெற்றோர்கள் மற்றும் தாத்தா ஒரே ஆண்டில் (1955)அகாலமரணம் அடைந்ததை ஒட்டி தங்கராசு 1956 ஆண்டில் அரியலூரில் வசிக்கும் அவரது சிறிய தந்தை தீர்த்தப்பன் வீட்டிற்கு இடம்பெயர்ந்தனர்.
கல்வி
தொகுதொடக்க கல்வி மற்றும் மேல்நிலை கல்வியை அரியலூரில் முடித்தார். கல்லூரிக் கல்வியினை தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் பயின்றார். இவர் இளம் அறிவியலில் இயற்பியல் படித்து இறுதி தேர்வினை எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் வரும் முன்பே தமிழக வேளாண்மை துறை அறந்தாங்கி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தார்.
அரசியல் வாழ்க்கை
தொகுமாணவ பருவ காலகட்டம் திராவிடமுன்னேற்றக்கழகம் எழுச்சிபெற்ற காலம் அதன் தாக்கத்தில் இருந்தவரை MGR என்ற மூன்று எழுத்துகவர்ந்து இழுத்தது.படிக்கும் காலத்தில் பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி மற்றும் பூப்பந்தாட்ட விளையாட்டில் பெரும் ஆர்வம் கொண்டுஇருந்தார் திமுக 1957 ஆம் ஆண்டில் அரசியலிலும் குதித்தது.காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திலிருந்த மத்திய, மாநில அரசுகளின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், பிற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை திமுக நடத்தியது. மேற்கண்ட நிகழ்வுகள் மக்களிடையே மற்றும் மாணவர்களிடையே எழுச்சியுடன் பரவியது அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் மேலும் MGR என்ற மூன்று எழுத்து அவரை கவர்ந்து இழுத்து அதன்காரணமாக அவரின் மீது அளவற்ற பற்றுகொண்டுஇருந்தார். புரட்சிநடிகரை 1967 இல் காவல்காரன் படப்பிடிப்பில் சந்திக்கும் வாய்ப்பினை பெற்றபொழுது அங்கு தலைவருடன் இருந்த ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது இந்த அறிமுகம் தங்கராசுவை அரசியல் வாழ்க்கைக்கு அழைத்து சென்றது.புரட்சித்தலைவர் கட்சியை1972 துவங்கியபோது அதில் உறுப்பினராக இணைந்து கட்சி பணியினை செய்துவந்தார் இக்காலகட்டத்தில் 1973 அரசுப்பணிக்கிடைத்தது அன்றையகாலத்தில் அரசு ஊழியர்கள் நேரடியாக கட்சி பணியாற்றமுடியாது எனவே பொன்னரசன் என்ற புனை பெயரை வைத்துக்கொண்டு கழக பணியாற்றினார் 1980 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பினை பெற்றார் அதில் வெற்றி வாய்ப்பினை இழந்தார் புரட்சித்தலைவர் இவர் மீது கொண்ட பேரன்பால் மீண்டும் 1984 இல் போட்டியிட வாய்ப்பினை அதில் வென்று மக்கள் பணி ஆற்றினார். இவரது பதவி காலத்தில் 1985 பெரம்பலூர் அரியலூர் பகுதியில் நிலவிய குடிநீர் பிரச்சனைக்கு குரல்கொடுத்தார் இதுவே பின்னர் கூட்டுகுடிநீர் திட்டம் இப்பகுதியில் அமல்படுத்த காரணமாகியது.அரியலூர் பகுதி சுண்ணாம்பு சுரங்கம் செயல்பாடுகள் பற்றி பேசி மக்கள் அவையில் கவனம் ஈர்த்தார். புதியதாக அமைய இருந்த(1989 )கரவெட்டி பறவைகள் சரணாலயத்தில் குறுக்காக உயர்மின் அழுத்த கம்பிகள் செல்வதால் பறவைகள் அதில் மாட்டி உயிர் இழக்கின்றன எனவே உயர் மின் அழுத்த கம்பிகளை வேறு பாதையில் எடுத்து செல்ல வலியுறுத்தினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biographical Sketch Member of Parliament 8th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
{{cite web}}
: line feed character in|title=
at position 20 (help)