ச. இராஜாரெட்டி

இந்திய அரசியல்வாதி
(எஸ். ராஜா ரெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ச. இராஜாரெட்டி (S. Rajareddy)(பிறப்பு 21 சூன் 1952) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தருமபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆருபள்ளி கிராமத்தினைச் சார்ந்தவர். இராஜாரெட்டி இளம் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினைச் சார்ந்த இவர் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தளி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

References தொகு

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._இராஜாரெட்டி&oldid=3552506" இலிருந்து மீள்விக்கப்பட்டது