ஏக்நாத் கெயிக்வாட்
ஏக்நாத் கெய்க்வாட் (Eknath Gaikwad) (1 ஜனவரி 1940 - 28 ஏப்ரல் 2021) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், பதினான்காவது மக்களவையிலும், பதினைந்தாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார். இவர் 2021இல் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இறந்தார்.[1]
ஏக்நாத் கெயிக்வாட் | |
---|---|
இந்திய பாராளுமன்றம் நாடாளுமன்றம் தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | மோகன் ரவாலே |
பின்னவர் | ராகுல் செவாலி |
இந்திய பாராளுமன்றம் நாடாளுமன்றம் வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி | |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | மனோகர் ஜோஷி |
பின்னவர் | பிரியா தத் |
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1985–1995 | |
முன்னையவர் | பிரேமானந்த் ஆவாலே |
பின்னவர் | பாபுராவ் மானே |
தொகுதி | தாராவி சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | பாபுராவ் மானே |
பின்னவர் | வர்ஷா கெயிக்வாட் |
தொகுதி | தாராவி சட்டமன்றத் தொகுதி |
மகாராட்டிர அரசில் சுகாதாரம், மருத்துவக் கல்வி, சமூக நீதி, வீட்டுவசதி மற்றும் குடிசை மேம்பாடு மற்றும் தொழிலாளர் துறைகளின் அமைச்சர் | |
பதவியில் 1999–2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாத்தாரா, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா | 1 சனவரி 1940
இறப்பு | 28 ஏப்ரல் 2021 | (அகவை 81)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | இலலிதா |
பிள்ளைகள் | 2 மகன்களும் 2 மகள்களும் ( வர்ஷா கெயிக்வாட் உட்பட) |
வாழிடம் | மும்பை |
சொந்த வாழ்க்கை
தொகுகெய்க்வாட் ஒரு மராத்திய பௌத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.[2] [3] இவரது மகள் வர்ஷா கெயிக்வாட் மகாராட்டிர சட்டமன்றத்தில் நான்கு முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டர். மகாராட்டிராவின் தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராகவும் உள்ளார்.[2] [4]
தொழில்
தொகுஏக்நாத் ஹெயிக்வாட், தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2014இல் நடைபெற்ற தெர்தலில் ராகுல் செவாலியிடம் தோல்வியடைந்தார். இவர் தாராவியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு முறை மகாராட்டிர மாநில அமைச்சரவையின் மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். 1985 முதல், இவர் தாராவியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.freepressjournal.in/mumbai/covid-19-in-maharashtra-former-mp-eknath-gaikwad-passes-away
- ↑ 2.0 2.1 "जानिए- कौन हैं उद्धव कैबिनेट में शामिल हुईं तीन ताकतवर महिलाएं - Education AajTak". aajtak.intoday.in.
- ↑ "Tarun Bharat : महाविकास आघाडीचा मंत्रिमंडळ विस्तार". Tarun Bharat.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "उद्धव ठाकरे सरकारच्या ४३ सदस्यीय मंत्रिमंडळात २३ मंत्री मराठा समाजाचे". Divya Marathi.
- "39-year-old Varsha Gaikwad, the Congress candidate here". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
- "फडणवीस गेले, अजित पवार मात्र पुन्हा आले! उपमुख्यमंत्र्यासह २५ कॅबिनेट,१० राज्यमंत्र्यांना शपथ". Divya Marathi.