ஏணிப்படிகள் (தமிழ்த் திரைப்படம்)

பி. மாதவன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஏணிப்படிகள் (Enippadigal) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஷோபா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஏணிப்படிகள்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புகே. எஸ். சேதுமாதவன்
ரம்யா சித்ரா
கதைகே. விஸ்வநாத்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவகுமார்
ஷோபா
வெளியீடுபெப்ரவரி 16, 1979
நீளம்3995 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • சிவகுமார்- மாணிக்கம்
  • ஷோபா- செல்ல கண்ணு, (கமலா தேவி)
  • சத்யராஜ் - முத்து (செல்ல கண்ணுவின் சகோதரர்)
  • மனோரமா- ஜெயந்தி
  • வடிவுக்கரசி ராணி
  • டி. எம். சாமி கண்ணு- சாமிகண்ணு
  • ஏ. சகுந்தலா- சொக்கம்மா (முத்துவின் மனைவி)
  • பி.டி.சிவம் - ராமலிங்கம் -->
  • ஜி. சீனிவாசன்- செல்ல கண்ணுவின் தந்தை
  • மோகன் சர்மா

சிறப்புத் தோற்றங்கள் தொகு

  • வி.எஸ்.ராகவன்
  • கண்ணன்- சம்பத்
  • வி.கோபாலகிருஷ்ணன்
  • எஸ்.ராமராவ்- சிங்காரம்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றினார்.[1][2][3]

பாடல்கள்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "ஏனுங்க மாப்பிள்ள"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 4:49
2. "பூந்தேனில் கலந்து" (ஆண்)எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:41
3. "கண்ணிழந்த"  பி. சுசீலா 4:26
4. "பூந்தேனில் கலந்து" (பெண்)பி. சுசீலா 4:35

மேற்கோள்கள் தொகு