ஏணி கோட்டுரு
கோட்டுருவியலில் ஏணி கோட்டுரு (ladder graph) Ln என்பது 2n முனைகளும் 3n-2 விளிம்புகளும் கொண்ட சமதளப்படுத்தக்கூடிய திசையற்ற கோட்டுருவாகும்.[1]
ஏணி கோட்டுரு | |
---|---|
ஏணி கோட்டுரு - L8. | |
முனைகள் | 2n |
விளிம்பு | 3n-2 |
நிற எண் | 2 |
நிறச் சுட்டெண் | 3 for n>2 2 for n=2 1 for n=1 |
இயல்புகள் | அலகு தொலைவு கோட்டுரு அமில்தோன் கோட்டுரு சமதளபடுத்தக்கூடிய கோட்டுரு இருகூறு கோட்டுரு |
Notation | Ln |
இரு பாதை கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலனாக ஏணி கோட்டுருவை உருவாக்கலாம். அவ்விரு பாதை கோட்டுருக்களில் ஒன்று ஒரேயொரு விளிம்புடையதாக இருக்க வேண்டும்: Ln,1 = Pn × P2.[2][3]
பண்புகள்
தொகு- ஏணி கோட்டுரு Ln, n படிகள் கொண்ட ஏணிவடிவத் தோற்றமுடையது.
- Ln, கட்டக் கோட்டுருவான G2,n உடன் சமவளவைவுடையதாக இருக்கும்.
- அகலம் 4 (n>1) மற்றும் நிறக் குறியீட்டெண் 3 (n>2) கொண்ட அமில்தோன் கோட்டுருவாக அமையும்.
- ஏணி கோட்டுருவின் நிற எண் 2;
- நிற பல்லுறுப்புக்கோவை .
-
ஏணி கோட்டுருவின் நிற எண் 2.
வட்ட ஏணி கோட்டுரு
தொகுவட்ட ஏணி கோட்டுருவை (CLn) n≥3 நீளமுள்ள சுழற்சி மற்றும் ஒரு விளிம்பின் கார்ட்டீசியன் பெருக்கற்பலனாக அல்லது இரு படிகொண்ட நான்கு முனைகளை "நேராக" இணைப்பதன் மூலம் உருவாக்கலாம்.[4] வட்ட ஏணி கோட்டுருவை குறியீட்டில் CLn = Cn × P2 எனக் எழுதலாம். இது 2n முனைகளும் 3n விளிம்புகளுமுடையது.
ஏணி கோட்டுருவைப் போலவே வட்ட ஏணி கோட்டுருவும் இணைப்புள்ள கோட்டுரு; சமதளப்படுத்தக் கூடியது; அமில்தோன் கோட்டுரு. ஆனால் n இரட்டை எண்ணாக இருந்தால் மட்டுமே இருகூறு கோட்டுருவாக இருக்கும்.
பட்டகங்களின் பன்முகக் கோட்டுருக்களாக அமைவதால் வட்ட ஏணி கோட்டுருக்கள் பட்டகக் கோட்டுருக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
வட்ட ஏணி கோட்டுருக்கள்:
CL3 |
CL4 |
CL5 |
CL6 |
CL7 |
CL8 |
மோபியசு ஏணி
தொகுஇரு படிகொண்ட நான்கு முனைகளை குறுக்காக இணைப்பதன் மூலம் உருவாகும் [முப்படிக் கோட்டுரு]] மோபியசு ஏணி என அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Weisstein, Eric W., "Ladder Graph", MathWorld.
- ↑ Hosoya, H. and Harary, F. "On the Matching Properties of Three Fence Graphs." J. Math. Chem. 12, 211-218, 1993.
- ↑ Noy, M. and Ribó, A. "Recursively Constructible Families of Graphs." Adv. Appl. Math. 32, 350-363, 2004.
- ↑ Chen, Yichao; Gross, Jonathan L.; Mansour, Toufik (September 2013). "Total Embedding Distributions of Circular Ladders". Journal of Graph Theory 74 (1): 32–57. doi:10.1002/jgt.21690.