ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏனநல்லூரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.[1] இத் தலம் ஒரு தேவார வைப்பு தலம். [கு 1]
தேவார வைப்புத்தலம் பாடல் பெற்ற ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | எயினனூர் |
பெயர்: | ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஏனநல்லூர், (மருதாந்தநல்லூர் அருகில்) |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரம்மபுரீசுவரர் |
தாயார்: | கற்பகாம்பாள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவார வைப்புத்தலம் |
தற்போது ஏனநல்லூர் என்றழைக்கப்படும் எயினனூர், ஏனாதி நாத நாயனார் பிறந்த தலம்.[1]
அமைவிடம்
தொகுகருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மருதாந்த நல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது இத் தலம். கும்பகோணம் -மன்னார்குடி சாலையில் கருவளர்ச்சேரி பிரிவில் மருதாந்தநல்லூரைத் தாண்டியும் நாச்சியார் கோயிலுக்கு மேற்கில் மூன்று கி.மீ தொலைவில் திருமலைராயன் ஆற்று வடகரையில் உள்ளது. [1]
குறிப்புகள்
தொகு- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், (தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009) நூலில், வைப்புத்தலங்கள் பட்டியலில் இவ்வூரைப் பற்றிய பதிவோ, இக்கோயிலைப் பற்றிய கட்டுரையோ காணப்பெறவில்லை. பிற சான்றுகளில் தேடும்போது இவ்வாறாக வைப்புத்தலம் உள்ளதாகக் குறிப்பு காணப்பெறவில்லை. அவ்வாறு கிடைப்பின் சேர்க்கப்படும்.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- எயினனூர்-ஏனாதிநாத நாயனாரின் அவதாரத் தலம் பரணிடப்பட்டது 2014-10-13 at the வந்தவழி இயந்திரம்