ஏபிசிடி: எனிபடி கேன் டான்ஸ்
ஏபிசிடி: எனிபடி கேன் டான்ஸ் (ABCD: Anybody Can Dance) என்பது 2013 ஆண்டைய இந்திய நடன நாடகத் திரைப்படமாகும். படத்தின் நடன இயக்கம் மற்றும் திரைப்பட இயக்கம் என இரண்டையும் ரெமோ டி சூசா செய்துள்ளார். படமானது சித்தார்த் ராய் கபூர் மற்றும் ரோனி ஸ்க்ரூவலா ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது.[2] இப்படத்தில் பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா மற்றும் கே கே மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் துணைப் பாத்திரங்களில் தோன்றியுள்ளனர்.[3] தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படமானது ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் மற்றும் ஏபிசிடி ஆகிய பெயர்களில் மொழிமாற்றும் செய்து வெளியிடப்பட்டது. 120 மில்லியன் ரூபாய்களில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், 2013 பிப்ரவரி 8, அன்று 3டியில் உலகளவில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[1][4] ஏபிசிடி 2 என்ற பெயரில் படத்தின் அடுத்தபாகம் 2015 சூன் 19 அன்று வெளியிடப்பட்டது.
ஏபிசிடி: எனிபடி கேன் டான்ஸ் ABCD: Any Body Can Dance | |
---|---|
இயக்கம் | ரெமோ டி சூசா |
தயாரிப்பு | சித்தார்த் ராய் கபூர் ரோனி ஸ்க்ரூவலா |
கதை | அமித் ஆரியன் (உரையாடல்) மயூர் பூரி (கூடுதல் உரையாடல்) |
திரைக்கதை | துஷார் ஹிரனந்தனி |
இசை | சச்சின் - ஜிகார் |
நடிப்பு | பிரபுதேவா கணேஷ் ஆச்சார்யா கே கே மேனன் லாரன் கோட்லிப் புனித் பாத் தர்மேஷ் யெலாண்ட் சல்மான் யூசுஃப் கான் |
ஒளிப்பதிவு | விஜய் குமார் அரோரா 3டி ஸ்டீரியோகிராபர்:- மனீந்தர் "இண்டி" சைனி 3டி ரிக் டெக்னீசியன்:- சந்தன் குப்தா |
படத்தொகுப்பு | மனன் சாகர் |
கலையகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ் |
விநியோகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 2013 பெப்ரவரி 8 |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தியா |
ஆக்கச்செலவு | ₹20 கோடி (US$2.5 மில்லியன்)[1] |
மொத்த வருவாய் | ₹76 கோடி (US$9.5 மில்லியன்) உலகளவில் |
கதை
தொகுவிஷ்ணுவும் (பிரபுதேவா) அவரது நன்பர் ஜஹாங்கீர் கானும் (கே கே மேனன்) மும்பையில் நடனப்பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தி அதைப் பிரபலமாக்குகின்றனர். ஒரு காலகட்டத்தில் நண்பர்கள் இருவருக்கும் இடையில் ஈகோவால் மனக்கசப்பு ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து நடனமே உலகம் என்றிருக்கும் விஷ்ணுவை நடனப்பள்ளி தனக்கே சொந்தம் என்று ஜஹாங்கீர் கான் வெளியேற்றிவிடுகிறார். இதையடுத்து விஷ்ணுவின் இன்னொரு நண்பர் கோபியின் (சகணேஷ் ஆச்சார்யா) குடியிருப்புக்குக் குடிபெயர்கிறார். நடனத்தை தவிர எதிலும் விருப்பம் இல்லாத விஷ்ணு முமபையைவிட்டு சென்னைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். கோபியும் இதற்கு முன்பே ஜஹாங்கீர் கானால் பாதிக்கப்பட்டவர் என்பதால், சென்னைக்கு செல்ல விரும்பும் பிரபுதேவாவை தடுத்து வேரொரு நடனப்பள்ளியை துவக்கத் தூண்டுகிறார். ஆனால் விஷ்ணு அதில் விருப்பமின்றி இருக்கிறார். இந்திலையில் சென்னைக்கு புறப்பட இருக்கும் முந்தைய தினம் இரவு நடனப் போட்டியொன்றில் அற்புதமாக நடனம் ஆடும் இளைஞர்களை விஷ்ணு பார்க்கிறார். அது அவர் சென்னை செல்லும் திட்டத்தை மாற்றுகிறது
இதையடுத்து விஷ்ணுவும், கோபியும் பணத்துக்காக நடணத்தைக் கற்றுத்தராமல் திறமை இருந்தும் பல்வேறு குழுக்களாக சிதறிக்கிடக்கும் அந்தக் குப்பத்து இளைஞர்களுக்கு நடணம் சொல்லிக்கொடுக்கிறனர். அதன்பிறகு அந்த இளைஞர்களின் பெற்றோரின் அவநம்பிக்கை, தடைகள், ஜஹாங்கீர் கானின் சூழ்ச்சிவலைகளில் போன்றவற்றில் இருந்தும், தப்பித்து அந்த இளைஞர் குழுவை மும்பையில் நடக்கும் சர்வதேச நடனப் போட்டியில் ஆட வைக்கிறார். விஷ்ணுவின் குழுவில் இருந்து ஒரு கருப்பு ஆட்டை விலைக்கு வாங்கும் ஜஹாங்கீர் கான், அவன்மூலமாக விஷ்ணு தன் குழுவுக்காக உருவாக்கி பயிற்சியளித்த நடன திட்டத்தை திருடி தனதாக்கி அவன் குழுவை போட்டியில் அந்த ஆட்டத்தை ஆடவைத்து பதற வைக்கிறார். கடைசி நேரத்தில் இதையும் தாண்டி அந்த இளைஞர்கள் பிள்ளையார் சதுர்த்தி விழாவில் ஆடும் நடனத்தை மையமாகக்கொண்ட ஆட்டத்தை கடைசி நேரத்தில் ஆடவைத்து அவர்களை வெற்றிபெற வைக்கிறார்.
வெளியீடு
தொகுஇந்தப்படமானது இந்தியாவில் 400 3டி திரைகள் மற்றும் 350 2.டி. திரைகளை உள்ளடங்கி மொத்த 750 திரையரங்குகளில் வெளியானது.[5][6]
வசூல்
தொகுஏபிசிடி முதல் நாளில் 45 மில்லியன் ரூபாயை இந்தியாவில் வசூலித்தது. இது தோராயமாக உள்நாட்டில் முதல் வார இறுதி நாட்களில் ரூ. 195 மில்லியன் சம்பாதித்தது. முதல் வார முடிவில், இந்த திரைப்படம் 312 மில்லியன் டாலர் தொகையை வசூலித்தது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Prabhudeva to hike his price post 'ABCD' success". The Times of India. 10 February 2013. பார்க்கப்பட்ட நாள் 17 February 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Remo's dream comes true, AnyBody Can Dance goes on the floor zeenews.india.com
- ↑ ABCD – AnyBody can Dance by Remo D'souza பரணிடப்பட்டது 15 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம் DanceIndiaDance.in
- ↑ "Didn't want to release ABCD with Akshay's Special Chabbis: Prabhu Deva | NDTV Movies.com". Movies.ndtv.com. 7 February 2013. Archived from the original on 12 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 17 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "ABCD first week collection at Box Office". oneindia.in. 15 February 2013. Archived from the original on 18 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 18 February 2013.
- ↑ "Initial reports on Special 26 and ABCD positive". The Times of India. 13 February 2013. Archived from the original on 27 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 17 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Boxofficeindia.com". Boxofficeindia.com. 13 February 2013. பார்க்கப்பட்ட நாள் 17 February 2013.