ஏ. கே. சாஜன்

இந்தியத் திரைப்பட இயக்குநர்

ஏ. கே. சாஜன் (A. K. Sajan) ஓர் இந்திய திரைக்கதை எழுத்தாளரும், இயக்குநரும் ஆவார். இவர் மிகவும் பிரபலமான ஸ்டாப் வயலன்ஸ் (2002) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[1] இந்த படத்தில் அறிமுக கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் , சந்திரா லட்சுமண் ஆகியோர் நடித்திருந்தனர்.[2] இவர் தொழில்துறையில் பல வெற்றிகரமான படஙகளுக்கு திரைக்கதை அமைப்பதில் மிகவும் பிரபலமானவர். இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் துருவம் (1993), பட்டர்பிளைஸ் (1993), காஷ்மீரம் (1994), கிரைம் பைல் (1999), சிந்தாமணி கொலகேஸ் (2006), நதியா கொல்லப்பட்ட ராத்திரி (2007) , புதிய நியாயம் (2016) ஆகியவை அடங்கும்.[3] இவரது சகோதரர் ஏ. கே. சந்தோஷும் ஒரு திரைக்கதை எழுத்தாளர். அவர் சூரியபுத்திரன், மின்னாமினுகினும் மின்னுகெட்டு, தமிழ் - மலையாளம் இருமொழி திரைப்படமான வந்தே மாதரம் போன்ற பல்வேறு திரைப்படங்களை எழுதியுள்ளார்.[4]

ஏ. கே. சாஜன்
பிறப்புகேரளா, இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1989 – தற்போது வரை
உறவினர்கள்ஏ. கே. சந்தோஷ் (சகோதரர்)

1980களின் பிற்பகுதியில் சில திரைப்படங்களுக்கு கதை எழுத்தாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1990 களின் முற்பகுதியில் இவர் துருவம் (1993) என்ற கதை யோசனையை உருவாக்கி அதற்கான திரைக்கதையை எழுதத் தொடங்கினார்.[5] 1991 நடுப்பகுதியில் முடிக்கப்பட்ட வரைவுடன் இவர் தயாரிப்பாளர் ஜோஷியை அணுகினார். மேலும் படம் உருவாகத் தொடங்கியது. மோகன்லாலுடனான இவரது அடுத்த படமான பட்டர்பிளைஸ் (1993 படம்) ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது. 1994இல், சுரேஷ் கோபியுடனான காஷ்மீரம் (1994) படம் பெற்றி பெற்றது. இது சுரேஷ் கோபிக்கு நட்சத்திரத் தகுதியை மீண்டும் உறுதிப்படுத்தியது. இதன் பின்னர், இவர்கள் இருவரும் ஒரு ஜோடியாக நிறுவப்பட்டனர். பின்னர் பல படங்களில் ஒன்றாக வேலை செய்தனர். காஷ்மீரம் (1994), கிரைம் பைல் (1999), சிந்தாமணி கொலகேஸ் (2006) , நதியா கொல்லப்பட்ட ராத்திரி (2007) ஆகியவை இவர்களின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள். 2002 ஆம் ஆண்டில் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்த ஸ்டாப் வயலன்ஸ் படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். கொச்சி நகரில் நிலவிய நிழலுக இருண்ட வாழ்க்கையை இந்த படம் சித்தரித்தது. அதன் வெளியீட்டில் அதன் தைரியமான மற்றும் யதார்த்தமான அணுகுமுறைக்கு விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது.

சான்றுகள் தொகு

  1. "Gangster Movies In Malayalam That Stayed Loyal To The Genre!". www.filmibeat.com (in ஆங்கிலம்). 2016-05-04. பார்க்கப்பட்ட நாள் 2019-07-11.
  2. "Malayalam Cinema News | Malayalam Movie Reviews | Malayalam Movie Trailers - IndiaGlitz Malayalam". IndiaGlitz.com. Archived from the original on 2014-08-13. பார்க்கப்பட்ட நாள் 2019-07-11.
  3. "Mammootty-Nayanthara film begins filming - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-11.
  4. "It's a new genre in M-Town: G Kamaraj - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-11.
  5. thomas, elizabeth (2015-10-26). "Dhruvam, my favourite Malayalam movie: Vikram". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-11.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._சாஜன்&oldid=3684604" இலிருந்து மீள்விக்கப்பட்டது