சந்திரா லட்சுமண்
சந்திரா லட்சுமண் (Chandra Lakshman) இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர், 2002 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான மனசெல்லாம் படத்தில் அறிமுகமானார். பின்னர் பல மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார் . இவர் தொலைக்காட்சி தொடர்களில் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களான சந்திரா நெல்லிகதன், ரினி சந்திரசேகர், கங்கா மற்றும் திவ்யா முறையே சுவந்தம், மேகம், கோலங்கள் மற்றும் காதலிக்க நேரமில்லை தொடர்களின் மூலமாக நன்கு அறியப்படுகிறார்.
சந்திரா லட்சுமண் | |
---|---|
பிறப்பு | சந்திரா லட்சுமண் திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2002 முதல் தற்போது வரை |
தொழில்
தொகுதிருவனந்தபுரத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் லட்சுமன் குமார் மற்றும் மாலதிக்கு சந்திரா லட்சுமணன் பிறந்தார். பின்னர் குடும்பம் சென்னைக்கு மாறியது, அங்கு இவர் தனது பள்ளி மற்றும் பட்டப்படிப்பை முடித்தார்.[1] இவர், ஜே என் பள்ளியில் ஆரம்பக் கல்வியையும், சென்னையிலுள்ள , எம்.ஜி.ஆர். இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார்.[2] இவர், ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். இவர் "ஹோட்டல் நிர்வாக" பயிற்சியை செய்து கொண்டிருந்தபோது, இயக்குனர் சந்தோஷ் அவரைப் பார்த்து அவரது மனசெல்லாம் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்தார்.
2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான மனசெல்லாம் படத்தில் திரைப்படத்தின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்தின் சகோதரியின் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார், இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு அவரை மலையாளத் திரையுலகில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ஸ்டாப் வயலன்ஸ் (2002) படத்தில் பிரித்விராஜ் சுகுமாரனுடன் ஒன்று சேர்ந்து, கதாநாயகி பாத்திரத்தை ஏற்பதற்கு, சாத்தியமானது.[1] அதன்பிறகு, சக்ரம் , பலராம்-தாரதாஸ் மற்றும் காக்கி போன்ற பல மலையாள மொழிப் படங்களில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எனினும், அவர் தொலைக்காட்சித் தொடரில் அவரது தோற்றங்கள் மூலம் புகழடைந்தார். இவர் முதலில் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியான "சுவந்தம்" தொடரில் சந்திரா நெல்லிகதன் கதாபாத்திரத்தில் நடித்தார். இது ஒரு வில்லத்தனமான கதாபாத்திரம் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இத் தொடரில் நடித்ததின் மூலமாக நன்கு பிரபலமடைந்தார்.[1][3][4] பின்னர் இவர் தேவி போன்ற தொடரில் நடித்தார். இதில் குடும்பப் பெண் போலவும், ஜ்வாலாயாயி என்ற பெயரில் வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் இரு மனநிலை கொண்ட பெண்ணாக நெடுமுடி வேணுவுடன் இணைந்து நடித்தார்.[1] மேகம் தொடரில், ரினி சந்திரசேகர் வேடத்தில் நடித்ததற்காக, அவர் பல விமர்சனங்கள் மற்றும் பல விருதுகளையும் பெற்றார்.[3] தமிழில், கங்கா என்னும் பெயரில், எதிர்மறை கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற கோலங்கள் தொடரில் நடிகை தேவயானி உடன் நடித்துள்ளார். பிரபலமான தொடரான காதலிக்க நேரமில்லை", மற்றும் வசந்தம்" போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் திவ்யா மற்றும் அகிலா போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.[5] மேலும், சில விளம்பரங்களில் அவர் தோன்றியுள்ளார்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Change of image". Chennai, India: தி இந்து. 2007-01-19 இம் மூலத்தில் இருந்து 2007-05-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070509045400/http://www.hindu.com/fr/2007/01/19/stories/2007011900330400.htm. பார்த்த நாள்: 2009-11-12.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-05. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
- ↑ 3.0 3.1 "Cultural and award nite on Friday". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2007-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071209152723/http://www.hindu.com/2006/03/07/stories/2006030702840200.htm. பார்த்த நாள்: 2009-11-12.
- ↑ "The Bad and The Ugly". தி இந்து. Archived from the original on 2008-03-23. பார்க்கப்பட்ட நாள் 2009-11-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Stepping into the same shoes". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2009-11-12.[தொடர்பிழந்த இணைப்பு]