அ. ஜெ. வில்சன்
பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson, 1928 - 31 மே 2005) இலங்கைத் தமிழ் கல்விமானும், வரலாற்றாளரும், எழுத்தாளரும் ஆவார். இலங்கைப் பல்கலைக்கழகம், நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியவர்.
பேராசிரியர் ஏ. ஜெயரத்தினம் வில்சன் A. Jeyaratnam Wilson | |
---|---|
பிறப்பு | 1928 |
இறப்பு | 31 மே 2000 (அகவை 71–72) ரொறன்ரோ, கனடா |
இனம் | இலங்கைத் தமிழர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொழும்பு றோயல் கல்லூரி இலண்டன் பொருளியல் பள்ளி |
பெற்றோர் | கே. ஆர். வில்சன் |
வாழ்க்கைத் துணை | சுசிலி செல்வநாயகம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஅல்பிரட் வில்சன் 1928 ஆம் ஆண்டில் கே. ஆர். வில்சன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.[1] கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்..[2] இளங்கலைப் பட்டத்தை (இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை இலண்டன் பொருளியல் பள்ளியிலும் பெற்றார்.[3]
வில்சன் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகள் சுசிலி என்பவரைத் திருமணம் புரிந்தார்[3][4] இவர்களுக்கு மல்லிகா, மைதிலி, குமணன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[1]
பணி
தொகுவில்சன் "சிலோன் டெய்லி நியூஸ்" பத்திரிகையில் சில காலம் பணியாற்றினார்.[5] பின்னர் 1952 முதல் 1972 வரை 20 ஆண்டுகள் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[5] 1969 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக ஏ. ஜெ. வில்சன் நியமிக்கப்பட்டார்.[6] 1970 முதல் 1994 வரை கனடாவின் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் ஃபிரெடெரிக்டன் வளாகத்தில் அரசியல் அறிவியலில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[7] இளைப்பாறிய பின்னர் அதே பல்கலைக்கழ்கத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.[3]
1978 முதல் 1983 வரை இலங்கை சனாதிபதி, ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அரசமைப்புச் சட்டத்தில் ஆலோசகராக இருந்தார்.[8] அமெரிக்க அரசத் திணைக்களத்தில் தெற்காசியாவுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார்.[7] கனடியப் பன்னாட்டு அபிவிருத்தி ஆணையம், கனடிய அகதிகளுக்கான ஆலோசனைச் சபை, அமெரிக்காவின் பல்கலாசார அமைச்சு, மற்றும் குடிவரவுத் தீர்ப்பாயம் ஆகியவற்றிலும் பணியாற்றினார்.[7]
மறைவு
தொகுவில்சன் 2000 மே 31 இல் ரொறன்ரோவில் தனது 71வது அகவையில் காலமானார்.[1][4][7]
ஆக்கங்கள்
தொகுவில்சன் எட்டு நூல்களையும், நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்[2][7]
- Politics in Sri Lanka, 1947–1973 (1974, மாக்மிலன்)
- Electoral Politics in an Emergent State: the Ceylon General Election of May 1970 (1975, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்)
- The Gaullist System in Asia (1980, மாக்மிலன்)
- The States of South Asia: Problems of National Integration : Essays in honour of W.H. Morris-Jones (1982, Hurst)
- The Break-up of Sri Lanka: The Sinhalese-Tamil Conflict (1988, Hurst)
- S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, 1947–1977: a Political Biography (1994, அவாய் பல்கலைக்கழகம்)
- Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the 19th and 20th Centuries (2000, Hurst)
- The Post-Colonial States of South Asia: Democracy, Development and Identity (2001, Palgrave)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Obituaries". தமிழ் டைம்சு XIX (6): 30. 15 சூன் 2000. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/36/3590/3590.pdf.
- ↑ 2.0 2.1 Deen, Thalif (10 மே 2009). "Tribute to three "Golden Age" Dons with deep respect". சிறீலங்கா கார்டியன். http://www.srilankaguardian.org/2009/05/tribute-to-three-golden-age-dons-with.html.
- ↑ 3.0 3.1 3.2 Gooneratne, Brendon (4 சூன் 2000). "Alfred Jeyaratnam Wilson (1928–2000) "The Brahmin of Brunswick"". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2014-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819213308/http://www.island.lk/2000/06/04/feature.html.
- ↑ 4.0 4.1 "Death of Prof. A. J. Wilson". தி ஐலண்டு. 2 சூன் 2000 இம் மூலத்தில் இருந்து 2014-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819214205/http://www.island.lk/2000/06/02/islnews.html.
- ↑ 5.0 5.1 Philips, Rajan (15 சூன் 2000). "Professor Alfred Jeyaratnam Wilson (1928–2000): An Appreciation". தமிழ் டைம்சு XIX (6): 25–27. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/36/3590/3590.pdf.
- ↑ "General Informations". பேராதனைப் பல்கலைக்கழகம். Archived from the original on 2012-03-22. பார்க்கப்பட்ட நாள் 2015-04-26.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 "A. Jeyaratnam Wilson". University of New Brunswick.
- ↑ "One Hundred Tamils of the 20th Century – Alfred Jeyaratnam Wilson". Tamil Nation.