அனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வு முறை

(ஐஈஎல்டிஎஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐஈஎல்டிஎஸ் (பலுக்கல் ஐஎல்ட்ஸ்) என்று சுருக்கமாக அறியப்படும் அனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வு முறை (International English Language Testing System) என்பது ஆங்கில மொழியில் ஒருவருக்கு உள்ள திறனை சோதிப்பதற்கான சர்வதேச அளவில் தர நிலைப்படுத்தப்பட்ட தேர்வு ஆகும். 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதான இது கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக ஈஎஸ்ஓஎல் தேர்வுகள், பிரித்தானிய கவுன்சில், ஐடிபி எஜுகேஷன் பிரைவேட் லிமிடட் ஆகியவற்றால் இணைந்து நிர்வகிக்கப்படுகிறது.

ஐஈஎல்டிஎஸ் சின்னம்

இத்தேர்வு முறைக்கு இரண்டு வகையான வடிவங்கள் உள்ளன: ஒன்று கல்வி சார்ந்த வடிவம், மற்றது பொதுப் பயிற்சி வடிவம்.

  • கல்வி சார்ந்த வடிவம், பல்கலைக் கழகங்கள், பிற கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உயர்க் கல்வி பெறுவதற்காக சேர விரும்புபவர்கள், ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் படிக்கவோ அல்லது பணியாற்றவோ விரும்பும் மருத்துவர்கள், செவிலியிர்கள் போன்ற தொழில்முறையாளர்களுக்கானது.
  • பொதுப் பயிற்சி வடிவம், பணி அனுபவம் பெறுவதற்காகவோ அல்லது குடியேற்றம் பெறும் நோக்கம் போன்றவற்றிக்காகவோ அல்லது கல்வி சாராத பயிற்சியை மேற்கொள்ள விரும்பும் நபர்களுக்கானது.

எழுதுவது, வாசிப்பது ஆகியவற்றிற்கான தேர்வுகள் பொதுப்படையான பயிற்சி வடிவத்தை விட கல்வி சார்ந்த வடிவம் கடினமாக உள்ளன என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டவொன்றாகும். இதற்குக் காரணம், இந்த இரண்டு வடிவங்களுக்கும் இடையில் உள்ள அறிவார்ந்த மற்றும் கல்வி சார்ந்த கடினங்களின் வேறுபாடுகளேயாகும்.

ஆசுத்திரேலியா, பிரித்தானியா, கனடா, ஐரிஷ், நியுசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்களாலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களாலும், மற்றும் பல்வேறு தொழில் முறை நிறுவனங்களாலும் ஐஈஎல்டிஎஸ் ஏற்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்குக் குடியேற்றம் பெறுவதற்கும் இது தேவையாகும். ஒரு ஐஈஎல்டிஎஸ் தேர்வு முடிவு அல்லது தேர்வு அறிக்கைப் படிவம் இரண்டு ஆண்டுகளிற்கு செல்லுபடியாகும்.

2007 ஆம் ஆண்டில், முதன் முறையாக 12 மாதங்களில் ஐஈஎல்டிஎஸ் தேர்வை ஒரு மில்லியனிற்கு் மேப்ற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதனால், உயர்க் கல்வி மற்றும் குடியேற்றத்திற்காக நடைபெறும் தேர்வுகளில் உலகிலேயே மிகப் பிரபலமான தேர்வாக இது விளங்கலானது.[1]

பண்புத் திறன்கள்

தொகு

அனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வு முறை கீழ்க்காணும் அம்சங்களை உள்ளீடாகக் கொண்டுள்ளது:

  • மொழி சார்ந்த பாகுபாடுகளைக் குறைந்த பட்ச அளவிற்கு கொண்டு வருவதற்காக புத்தகப் பொருட்களில் வழங்கப்படும் பல தரப்பட்ட உச்சரிப்புகள் மற்றும் எழுதும் முறைமைகள்.
  • ஐஈஎல்டிஎஸ், ஆங்கில மொழியில் கேட்டுப் புரிந்து கொள்வது, படிப்பது, எழுதுவது மற்றும் பேசுவது ஆகிய திறன்களை சோதனை செய்கிறது.
  • ஒவ்வொரு மொழியின் துணைத் திறனுக்கும் ஒருங்குக் கூட்டு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன (கேட்பது, படிப்பது, எழுதுவது மற்றும் பேசுவது). இந்த ஒருங்குக் கூட்டு மதிப்பெண்கள் சுழியத்திலிருந்து ("தேர்வை மேற்கொள்ளவில்லை") 9 வரையிலான ("நிபுணப் பயனர்") அளவுகோல்களில் உள்ளன.
  • பேச்சுப் பயிற்சிக்கான பிரிவு ஐஈஎல்டிஎஸ்சில் ஒரு முக்கியமான அங்கமாகும். இது தேர்வை நாடுபவர் தேர்வாளருடன் நேருக்கு நேராகக் கலந்து கொள்ளும் ஒரு நேர்முகத் தேர்வு முறையில் நடத்தப்படுகிறது. தேர்வு நாடுபவர் பேசும் முறைமையைத் தேர்வாளர் மதிப்பிடுகிறார். இருப்பினும், ஆங்கிலம் பேசுவதை மதிப்பிடும் இந்தத் தேர்வானது கண்காணிப்பிற்காகவும், தேர்வு நாடுபவர் தமக்குக் கொடுக்கப்பட்ட ஒருங்குக் கூட்டு மதிப்பெண்ணை எதிர்த்து மனுத் தாக்கல் செய்கையில் அதற்கு மறு மதிப்பெண் இடுவதற்காகவும், ஒலிப்பதிவும் செய்யப்படுகிறது.
  • உலகெங்கும் உள்ள குறிப்பெழுத்தாளர்கள் பலரிடமிருந்தும் கிடைக்கப் பெறும் உள்ளீடுகளைக் கொண்டு ஐஈஎல்டிஎஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான குழுக்கள் யூஎஸ்ஏ,கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் ஆங்கில மொழி பேசப்படும் இதர நாடுகள் ஆகியவற்றில் அமைந்துள்ளன.

ஐஈஎல்டிஎஸ் தேர்வுக் கட்டமைப்பு

தொகு

ஒருங்குக் கூட்டு மதிப்பெண்களைப் பெறுவதற்கு, ஐஈஎல்டிஎஸ் தேர்வு அறிக்கைப் படிவத்தில் (டிஆர்எஃப்) குறிப்பிடப்பட்டுள்ள வண்ணம், அனைத்து தேர்வு நாடுபவர்களும் கேட்பது, படிப்பது, எழுதுவது மற்றும் பேசுவது ஆகிய நான்கு பகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். கேட்பது மற்றும் பேசுவது ஆகிய பிரிவுகளைப் பொறுத்தவரை அனைத்து தேர்வு நாடுபவர்களும் ஒரே மாதிரியான பகுதிகளைத்தான் பெறுகிறார்கள்; எழுதுவது மற்றும் படிப்பது சார்ந்த பிரிவுகளை நாடும்பொழுது கல்வி சார்ந்த அல்லது பொதுப்படையான பயிற்சி என்பனவற்றில் எந்த வடிவத்தை மேற்கொள்கிறார் என்பதைப் பொறுத்து மாறுபடுகின்றன.

இந்தத் தேர்வில் கேட்பது, படிப்பது மற்றும் எழுதுவதற்கான பிரிவுகளின் மொத்தக் கால அளவு சுமார் 2 மணி 45 நிமிடங்கள் .

  • கேட்பது: 40 நிமிடங்கள் ; இதில் 30 நிமிடங்களுக்கு ஒரு ஒலிப்பதிவு மையமாக ஒலிபரப்பப்படும், ஓஎம்ஆர் பதில் தாளில் பதில்களை எழுதுவதற்குக் கூடுதலாக 10 நிமிடங்கள் அளிக்கப்படும்.
  • படிப்பது: 60 நிமிடங்கள்.
  • எழுதுவது: 60 நிமிடங்கள்.

பி.கு.: படிப்பது மற்றும் எழுதுவது ஆகிய பகுதிகளில் பதில்களை எழுதுவதற்காக கூடுதலான நேரம் அளிக்கப்படுவதில்லை.

கேட்பது, படிப்பது மற்றும் எழுதுவது ஆகிய முதல் மூன்று பிரிவுகளும் (எப்பொழுதும் அதே வரிசையில்தான் இவை நிகழ்த்தப்படும்) ஒரே நாளில் பூர்த்தி செய்யப்படுகின்றன; இன்னும் சொல்லப் போனால், ஒன்றிற்கும் அடுத்ததற்கும் இடைவெளி இல்லாமல் இவை நடத்தப்படுகின்றன. தேர்வு மையத்தின் தீர்மமான உரிமைப்படி பேசுவது தொடர்பான தேர்வு, பிற பிரிவுகளுக்கு ஏழு நாட்கள் முன்னதாகவோ அல்லது பிற்பட்டோ பெறப்படலாம். மொழியைப் பயன்படுத்தாதவர் துவங்கி மொழியின் நிபுணப் பயனர் வரையிலும் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளவர்களது திறனையும் மதிப்பிடும் வகையில் தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒருங்குக் கூட்டு மதிப்பெண்களின் அளவுகோல்

தொகு

ஐஈஎல்டிஎஸ் மதிப்பெண்கள் ஒன்பது-ஒருங்குக் கூட்டு மதிப்பெண் அளவுகோலைக் கொண்டு அளிக்கப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு ஒருங்குக் கூட்டும் தேர்வை நாடுபவர் ஆங்கிலத்தில் கொண்டுள்ள குறிப்பிட்ட திறனுக்குப் பொருந்துவதாக இருக்கும். ஒருங்குக் கூட்டு மதிப்பெண்களின் மொத்த எண்ணிக்கை முழுமைப்படுத்தப்பட்டு, மிக அருகில் உள்ள முழுமையான அல்லது பாதி ஒருங்கு கூட்டு மதிப்பெண்களாக வழங்கப்படுகின்றன.

சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக, முழுமையாக்கும் மரபானது கீழ்க்காணும் வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது: நான்கு திறன்களின் சராசரி 0.25ல் முடிந்தால், அது அடுத்த ஒருங்குக் கூட்டின் பாதியளவிற்கு முழுமையாக்கப்படும்; 0.75ல் முடிந்தால், அது அடுத்த முழு ஒருங்குக் கூட்டின் அளவிற்குக் முழுமையாக்கப்படும்.

ஒன்பது ஒருங்குக் கூட்டுக்களும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

9 நிபுணப் பயனர்

தொகு

இவர் மொழியின் உகந்த, துல்லியமான, சரளமான செயற்பாடுகளில் முழுமையான புரிதலுடன் பூரண ஆளுமை பெற்றுள்ளார்.

8 மிகச் சிறந்த பயனர்

தொகு

அவ்வப்போது முறையற்ற அல்லது துல்லியமல்லாத அல்லது உகந்ததல்லாத பிரயோகங்கள் ஏற்பட்டாலும், இவருக்கு மொழியில் சிறந்த செயற்பாடு ஆளுமை உள்ளது. பழக்கம் இல்லாத சூழ்நிலைகளில் இவர் மொழியைத் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலை உருவாகலாம். சிக்கலான, விரிவான வாதப் பிரதிவாதங்களை நன்றாகக் கையாளுகிறார்.

7 சிறந்த பயனர்

தொகு

இவருக்கும் சில சூழ்நிலைகளில் அவ்வப்போது வரக்கூடிய உகந்தவையல்லாத, பொருத்தமற்ற பிரயோகங்கள் மற்றும் தவறாகப் புரிந்து கொள்வது போன்றவை இருப்பினும், மொழியின் செயற்பாட்டில் ஆளுமை பெற்றுள்ளார். பொதுவாக, சிக்கலான மொழிப்பாடுகளைக் கையாளக் கூடியவர் மற்றும் விரிவான தர்க்க முறைமைகளைப் புரிந்து கொள்ளக் கூடியவர்.

6 திறன் கொண்ட பயனர்

தொகு

சில துல்லியமற்ற பொருந்தாத பிரயோகங்களை பயன்படுத்தினாலும், சில சூழல்களில் மொழியைத் தவறாகப் புரிந்து கொண்டாலும், இவருக்கு மொழியில் ஒரு பொதுவான ஆளுமைத் திறன் உண்டு. இவரால் குறிப்பான அறிமுகம் உள்ள சூழல்களில் சிக்கலான மொழியமைப்பைப் புரிந்து கொண்டு பயன்படுத்த இயலும்.

5 அளவான பயனர்

தொகு

இவருக்கு மொழியில் ஒரளவே ஆளுமை உண்டு. மொழியின் பயன்பாட்டில் பல தவறுகளைச் செய்தாலும், பெரும்பான்மையான சூழல்களில் மொழியின் பொதுவான பொருளைப் புரிந்து கொள்கிறார். இவர் தனது துறையில் தொடர்பு முறைமைகளைக் கையாள இயன்றவராக இருப்பார்.

4 குறைந்த அளவுப் பயனர்

தொகு

இவரது மொழித் திறன் பழக்கமான சூழல்களுக்கு மட்டுமேயானது. சிக்கலான மொழியமைப்பை பயன்படுத்துவதில் அடிக்கடி பிரச்சினைகளை எதிர் கொள்பவர்.

3 மிகக் குறைந்த அளவுப் பயனர்

தொகு

மிகவும் பழக்கமான சூழல்களில் மொழியின் பொதுப்படையான பொருளை மட்டுமே புரிந்து கொண்டு பதிலிறுப்பவர். இவருக்கு மொழித் தொடர்பு முறிதல் என்பதானது அடிக்கடி நிகழும்.

2 அவ்வப்போது பயன்டுத்தும் பயனர்

தொகு

பழக்கப்பட்ட சூழல்களில் உடனடி தேவைகளுக்காக பயன்படுத்தும், பிரிந்துபட்ட ஒற்றை வார்த்தைகள் அல்லது சிறிய சூத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட அடிப்படையான தகவல்கள் அன்றி வேறு தொடர்பு எதுவும் மேற்கொள்வது இவரைப் பொறுத்தவரை சாத்தியமில்லாதது.

1 பயன்படுத்தாதவர்

தொகு

சில ஒற்றைச் சொற்களைப் பயன்படுத்துவதற்கு அப்பால் மொழியைப் பயன்படுத்தும் திறன் முற்றிலும் அற்றவர்.

0 சோதனையை மேற்கொள்ளவில்லை

தொகு

மதிப்பீடு செய்ய இயலும் அளவில் தகவல்கள் அளிக்கப்படவில்லை.

உருமாற்று அட்டவணை

தொகு

கேட்பது மற்றும் படிப்பது ஆகியத் தேர்வுகளில் பண்படுத்தப்படாத மதிப்பெண்களை ஒருங்குக் கூட்டு மதிப்பெண்களாக உருமாற்றம் செய்வதற்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தலாம். இந்த விளக்க அட்டவணையானது ஒரு வழிகாட்டுதல் மட்டுமே, ஏனெனில், சில சமயங்களில் தேர்வு எத்தனை கடினமாக உள்ளது என்பதைப் பொறுத்து மதிப்பெண்கள் அமைக்கப்படும்.

ஒருங்கு கூட்டு மதிப்பெண்கள் 9.0 8.5 8-0 7-5 7.0 6.5 6.0 5.5 5-0 4.5 4.0 3.5 3.0 2.5 2.0 1.5 1.0 0.0
பண்படுத்தப்படாத மதிப்பெண்கள் 39 – 40 37 – 38 35 – 36 32 – 34 29 – 31 26 – 28 22 – 25 18 – 21 15 – 17 12 – 14 10 – 11 8 – 10 6-7 4-5 3 2 1 0

தேர்வு நடக்கும் இடங்களும் தேதிகளும்

தொகு

இந்தத் தேர்வானது ஒவ்வொரு வருடமும் 121 நாடுகளில் 500 இடங்களில் நடக்கிறது; மேலும், உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் ஆங்கில மொழித் தேர்வாகத் திகழ்கிறது. 1999 ஆம் ஆண்டு 80,000 ஆக இருந்த இந்தத் தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கையானது 2009 ஆம் ஆண்டில் 1,200,000க்கும் அதிகமாகி விட்டது.

2007 ஆம் ஆண்டு இந்தத் தேர்வு அதிகளவில் நடைபெற்ற முதல் மூன்று இடங்கள் :

ஒவ்வொரு ஆண்டும் 48 தேர்வுத் தேதிகள் வரை கிடைக்கப் பெறுகின்றன. ஒவ்வொரு தேர்வு மையமும், உள்ளூர் தேவைகளைப் பொறுத்து, ஒரு மாதத்திற்கு நான்கு முறைகள் வரை தேர்வு நடத்துகிறது. ஒருவருக்கு முன்னதாக குறைந்த பட்சமாக 90 நாட்கள் மறுதேர்வுக்கான கால இடைவெளி இருந்ததுண்டு. ஆனால் தற்போது அந்தக் கட்டுப்பாட்டை தள்ளுபடி செய்துவிட்டது.

உலக அளவில் தேர்வு மதிப்பெண்கள்

தொகு

மிக அதிக அளவில் சராசரி மதிப்பெண்களைக் கொண்டுள்ள நாடுகள்

தொகு

2007வது வருடம் ஐஈஎல்டிஎஸ் தேர்வின் கல்வி சார்ந்த பிரிவில் மிக அதிகமான சராசரி மதிப்பெண்களைப் பெற்ற நாடுகள்:[1]

  1. ஜெர்மனி
  2. மலேசியா
  3. பிலிப்பைன்ஸ்
  4. ரஷ்யா
  5. ஹாங்காங்

தேர்வு நாடுபவரின் முதல் மொழி வாரியான தேர்வு முடிவுகள்

தொகு

2007வது வருடம் ஐஈஎல்டிஎஸ் தேர்வின் கல்வி சார்ந்த பிரிவில் மிகச் சிறந்த தேர்வு முடிவுகளைப் பெற்ற முதன்மையான ஐந்து மொழி-பேசும் (அல்லது நாடு சார்ந்த)குழுக்கள்:[1]

  1. தகலாகு
  2. ஸ்பானிஷ்
  3. மலாய்
  4. இந்தி
  5. தெலுங்கு

கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தேவையான ஐஈஎல்டிஎஸ் தகுதி நிலை

தொகு

மொத்தத்தில் பாதிக்கும் சற்றே மேற்பட்டவர்கள்(51%) வெளி நாட்டில் உயர்க் கல்வி பெறுவதற்கான தேர்வுக்காக விண்ணப்பிக்கிறார்கள்.[1] கல்வி நிறுவனங்கள் தமது குறைந்த பட்சத் தகுதித் தேவையாக நிர்ணயிக்கும் ஐஈஎல்டிஎஸ் மதிப்பெண்கள் வேறுபடுகின்றன. பொதுவான ஒரு விதியாக, ஆங்கில மொழி பேசப்படும் நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அதிகமான ஐஈஎல்டிஎஸ் ஒருங்குக் கூட்டு மதிப்பெண் தேவைப்படுகிறது.

அமெரிக்கா

தொகு

ஒரு பல்கலைக் கழகத்திற்குத் தேவையான மிக அதிகமான ஐஈஎல்டிஎஸ் ஒருங்குக் கூட்டு 8.5.[2] இது கொலம்பியா பல்கலைக் கழக கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் படிப்பிற்கான தேவை. இந்த அளவு ஒருங்கு கூட்டைத் தேவைப்படுத்தும் ஒரே யூஎஸ் நிறுவனம் இதுதான்.

ஓஹியோ பல்கலைக் கழகத்தின் மோரிட்ஜ் காலேஜ் ஆஃப் லாவின் தேவையாக ஐஈஎல்டிஎஸ் தனது வலைத்தளத்தில் இட்டிருப்பது 8.5; பள்ளி பட்டியலிடுவது 8.[1] பரணிடப்பட்டது 2013-06-04 at the வந்தவழி இயந்திரம்

எம்ஐடிக்கான குறைந்த பட்ச மதிப்பெண் 7.

செயிண்ட் லூயி பல்கலைக்கழகத்திற்கான குறைந்த பட்ச மதிப்பெண் 6.

இங்கிலாந்து

தொகு

வார்விக் பல்கலைக்கழகம் அளிக்கும் சந்தைப்படுத்தல் பற்றிய படிப்பில் அறிவியல் முதுகலைப் பட்டத்திற்குத் தேவைப்படும் அதிக பட்ச ஐஈஎல்டிஎஸ் ஒருங்கு கூட்டு 8.[2]

பெரும்பான்மையான பல்கலைக் கழங்கள் தமது ஐஈஎல்டிஎஸ் தேவையாகக் குறிப்பிடுவது 5.5 மற்றும் 7.0க்கு இடையில் விழுகிறது. உதாரணம்:

பல்கலைக் கழகம் குறைந்த பட்ச ஐஈஎல்டிஎஸ் மதிப்பெண்கள்
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் 7.0[3]
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் 7.0[4]
கிளாஸ்கோ பல்கலைக் கழகம் 6.5 (பொது)/ 7.0 (கலை மற்றும் மானிடவியல்)[5]
பல்கலைக் கழக கல்லூரி, லண்டன் 6.5/7.0/7.5 (யூசிஎல்லின் தனிப்பட்ட ஆசிரியக் குழு/ பிரிவுத் தேவை ஆகியவற்றைப் பொருத்தது)
இம்பீரியல் காலேஜ் லண்டன் 6.5 (7.0 வாழ்க்கை அறிவியல் பிரிவு மற்றும் இம்பீரியல் வணிகப் பள்ளிக்கு)
எக்சிடர் பல்கலைக் கழகம் 6.5
லிவர்பூல் பல்கலைக் கழகம் 6.0[6]
பிர்மிங்ஹாம் பல்கலைக் கழகம் 6.0
எஸ்ஸெக்ஸ் பல்கலைக் கழகம் 5.5

ஜெர்மனி

தொகு

ஸ்டூட்கார்ட் பல்கலைக்கழகத்திற்கான குறைந்த பட்ச ஐஈஎல்டிஎஸ் தேவை 6.0. பெரும்பாலான ஜெர்மன் பல்கலைக் கழகங்கள் தமது முதுகலை மாணவர்களுக்கான நிர்ணயிக்கும் குறைந்த பட்ச ஐஈஎல்டிஎஸ் தேவை 6.0.

ஹாங்காங்

தொகு

ஹாங்காங் பல்கலைக்கழகம், ஹாங்காங் சீனப் பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங் நகரப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்பிக்கப்படும் சட்டத்தில் முதுகலைச் சான்றிதழ் படிப்பிற்காக விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சமாக 7.0 வாங்க வேண்டும் என்பது ஹாங்காங் சட்டத்துறைக் கழகத்தின் தேவையாகும்.

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "ஐஈஎல்டிஎஸ் தேர்வுகள் ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் நபர்களுக்கு நடத்தப்படுகின்றன". Archived from the original on 2009-02-17. பார்க்கப்பட்ட நாள் 2010-01-15.
  2. 2.0 2.1 ஹெச்டிடிபி://பேண்ட்ஸ்கோர்.ஐஈஎல்டிஎஸ்.ஓஆர்ஜி/சர்ச்/ஏஎஸ்பிஎக்ஸ்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம், ஆங்கில மொழிக்கான தேவைகள்
  4. கேம்ப்ரிட்ஜ் யூனிவர்சிடி, இளங்கலை சேர்க்கை: சர்வதேச மாணவர்களுக்கான நுழைவுத் தகுதிகள்
  5. "கிளாஸ்கோ யூனிவர்சிடி, ஒரு வேற்று நாட்டு மொழியாக ஆங்கிலம்". Archived from the original on 2009-08-22. பார்க்கப்பட்ட நாள் 2010-01-15.
  6. "லிவர்பூல் யூனிவர்சிடி ஆங்கில மொழி நுழைவுத் தேவைகள்". Archived from the original on 2009-02-22. பார்க்கப்பட்ட நாள் 2010-01-15.

புற இணைப்புகள்

தொகு