ஐக்கிய நாடுகள் எசுப்பானியம் மொழி நாள்
ஐக்கிய நாடுகள் எசுப்பானிய மொழி நாள் (ஆங்கிலம்: UN Spanish Language Day; எசுப்பானியம்: Día del Idioma Español en las Naciones Unidas) ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது.[1] இந்த நிகழ்வு 2010-இல் ஐ. நாவின் பொதுத் தகவல் துறையால் நிறுவப்பட்டது. "பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் அத்துடன் அமைப்பு முழுவதும் இதன் ஆறு அதிகாரப்பூர்வ வேலை மொழிகளையும் சமமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கு" முயல்கிறது. ஹிஸ்பானிக் பாரம்பரிய தினமாகக் கொண்டாடும் வகையில் இந்த நாள் முதலில் அக்டோபர் 12 அன்று அனுசரிக்கப்பட்டது. சில எசுபானிய மொழி பேசும் நாடுகளில் அமெரிக்கக் கண்டத்தின் கண்டுபிடிப்பு நாளாக இது குறிப்பிடப்பட்டது. பின்னர், ஏப்ரல் 22, 1616 அன்று இறந்த எசுபானிய எழுத்தாளர் மிகெல் தே செர்வாந்தேஸ் சாவேத்ராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஏப்ரல் 23க்கு மாற்றப்பட்டது.[2]
ஐநா எசுப்பானிய மொழி நாள் UN Spanish Language Day Día del Idioma Español en las Naciones Unidas | |
---|---|
நாள் | 23 ஏப்பிரல் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
முதல் முறை | 12 அக்டோபர் 2010 |
தொடர்புடையன | பன்னாட்டுத் தாய்மொழி நாள், ஐ.நா. அரபு மொழி நாள், ஐநா சீன மொழி நாள், ஐ.நா. ஆங்கில மொழி நாள், ஐநா பிரான்சிய மொழி நாள், ஐநா போர்த்துக்கேய மொழி நாள், ஐ.நா. உருசிய மொழி நாள், ஐநா சுவாகிலி மொழி நாள் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ஐ. நா. எசுபானிய மொழி நாள் - அதிகாரப்பூர்வ தளம் (எசுப்பானியம்)