ஐங்குவார்க்கு

ஐங்குவார்க்கு (Pentaquark) என்பது ஒன்றாகப் பிணைக்கப்பட்ட நான்கு குவார்க்குகளையும் ஓர் எதிர்க்குவார்க்கையும் கொண்ட ஒரு கருதுகோள் அணுவடித்துகள் ஆகும்.

மரபு ஐங்குவார்க்கு. இங்கு q என்பது குவார்க்கைக் குறிப்பிட, q என்பது எதிர்க்குவார்க்கைக் குறிப்பிடும். அலைக்கோடுகள் பசையன்களைக் (gluons) குறிப்பிடும். இவை குவார்க்குகளிடையே வலிய இடைவினையை ஏற்படுத்துகின்றன. நிறங்கள் குவார்க்குகளின் பல்வேறு நிற ஊட்டங்களைக் காட்டுகின்றன. இங்கு மூன்று குவார்க்குகளில் சிவப்பு, பச்சை, நீல நிறங்கள் கட்டாயம் அமைந்திருக்க வேண்டும். எஞ்சியுள்ள குவார்க்கும் எதிர்க்குவார்க்கும் உரிய நிறத்தையும் எதிர்நிறத்தையும் பகிர்ந்து கொள்ளும். இங்கு நீலம், எதிர்நீலம் (மஞ்சளாகக் காட்டப்பட்டுள்ளது) ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு குவார்க்கின் பேரியான் எண் +13 ஆகவும் ஓர் எதிர்க்குவார்க்கின் பேரியான் எண் −13 ஆகவும் உள்ளதால் ஓர் ஐங்குவார்க்கின் மொத்தப் பேரியான் எண் மதிப்பு 1 ஆகும். எனவே இது ஒரு புறணி பேரியான் ஆகும். முக்குவார்க்கு எனும் வழமையான பேரியான் மூன்று குவார்க்குகளைப் பெற்றிருப்பதால் அதன் பேரியான் எண்ணும் 1 ஆகும். பெண்டாக்குவார்க்கு (Pentaquark) என்ற ஆங்கிலப் பெயர் ஹாரி ஜே. லிப்கின் என்பவரால் முன்மொழியப்பட்டதாகும்.[1][2]

இவற்றின் நிலவுகைக்கான சாத்தியக்கூறு குறித்துச் சில பத்தாண்டுகளுக்கு முன்பே எதிர்வுகூறப்பட்டாலும் இவற்றைக் காணமுடியாதுள்ளது பெருவியப்பைத் தந்துவந்தது. சில இயற்பியலாளர்கள் இவை உருவாவதை இயற்கையின் இனந்தெரியாத விதி ஒன்று தடுப்பதாக முன்மொழியும் அளவுக்குச் சென்றுவிட்டனர்.[3]

2000களின் நடுவில் ஐங்குவார்க்கு நிலைகள் நிலவுவதாகப் பல செய்முறைகள் தெரிவித்தன.[4] பிறகு பல செய்முறைகள் செய்து மீளாய்வு செய்தபோது அவை புள்ளியியல் விளைவுகளேயன்றி உண்மையான துகள் ஒத்திசைவுகள் அல்ல என உறுதிசெய்யப்பட்டது.[5]

2015 சூலை 13இல் அடிமட்ட இலாம்டா பேரியான்களின் அழிவின்போது தொடர்பொருந்தலான ஐங்குவார்க்கு நிலைகள் விளைந்துள்ளதாக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வகத்தின் கூட்டு அறிவித்துள்ளது. 0
b
).
[2] இந்த முடிவுகள் இன்னமும் இணைதிற ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

நொதுமி உடுக்களிலும் ஐங்குவார்க்குகள் உருவாக்கப்படலாம்.

பின்னணி

தொகு

குவார்க்கு என்பது பொருண்மையும் மின்னூட்டமும் நிற ஊட்டமும் நறுமணமும் உள்ள ஓர் அடிப்படைத் துகள் ஆகும். இங்கு நறுமணம் என்பது குவார்க்கின் வகைமையைச் சுட்டும். அதாவது மேல், கீழ், வியன், நயன், உச்சி, அடி ஆகியவற்றுள் ஒரு வகைமையைக் குறிக்கும். நிறச் செறிப்பு (color confinement) என்ற விளைவால் குவார்க்கு தனியாக நிலவாது. ஆனால், குவார்க்குகள், வன்மிகள் எனும் கூட்டுத்துகள்கள்களைத் தோற்றுவிக்கும். வன்மிகள், ஒரு குவார்க்கும் ஓர் எதிர்க்குவார்க்கும் சேர்ந்து மேசான்கள் ஆகவோ மூன்று குவார்க்குகள் ஒன்று சேர்ந்து பேரியான்கள் ஆகவோ உருவாகின்றன. இந்த ஒழுங்கான வன்மிகள் (ஏட்ரான்கள்) அவற்றின் பண்புகளோடு கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், கோட்பாட்டியலாக இவற்றைவிடப் பெரிய உயர்வன்மிகள் உருவாகும் வாய்ப்பு நிலவுவதைத் தவிர்க்கும் கோட்பாடேதும் இல்லை. எனவே இவை இரு குவார்க்குகளும் இரண்டு எதிர்க்குவார்க்குகளும் சேர்ந்து நாற்குவார்க்குகளாகவோ, நான்கு குவார்க்குகளும் ஓர் எதிர்க்குவார்க்கும் சேர்ந்து ஐங்குவார்க்குகளாகவோ உருவாகலாம்.[3]

கட்டமைப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. H. J. Lipkin (1987). "New possibilities for exotic hadrons — anticharmed strange baryons". Physics Letters B 195 (3): 484–488. doi:10.1016/0370-2693(87)90055-4. Bibcode: 1987PhLB..195..484L. 
  2. 2.0 2.1 R. Aaij et al. (LHCb collaboration) (2015). "Observation of J/ψp resonances consistent with pentaquark states in Λ0
    b
    →J/ψK
    p decays". arXiv:1507.03414 [hep-ex].
     
  3. 3.0 3.1 H. Muir (2 July 2003). "Pentaquark discovery confounds sceptics". New Scientist. பார்க்கப்பட்ட நாள் 2010-01-08.
  4. K. Hicks (23 July 2003). "Physicists find evidence for an exotic baryon". ஒகையோ பல்கலைக்கழகம். Archived from the original on 2016-11-11. பார்க்கப்பட்ட நாள் 2010-01-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. See p. 1124 in C. Amsler et al. (Particle Data Group) (2008). "Review of particle physics". Physics Letters B 667 (1-5): 1. doi:10.1016/j.physletb.2008.07.018. Bibcode: 2008PhLB..667....1A. http://pdg.lbl.gov/2008/download/rpp-2008-plB667.pdf. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐங்குவார்க்கு&oldid=4025226" இலிருந்து மீள்விக்கப்பட்டது