ஐசோபுரோப்பைல் அசிடேட்டு

எசுத்தர்

ஐசோபுரோப்பைல் அசிடேட்டு (Isopropyl acetate) C5H10O2 என்பது ஓர் எசுத்தர் ஆகும். அசிட்டிக் அமிலம் மற்றும் ஐசோபுரோப்பனால் சேர்மங்கள் ஈடுபடும் எசுத்தராக்கல் வினையில் ஐசோபுரோப்பைல் அசிடேட்டு உருவாகிறது. இது ஒரு தெளிவான, நிறமற்ற சிறப்பியல்பு பழ வாசனை கொண்ட திரவமாகும்.[3]

ஐசோபுரோப்பைல் அசிட்டேட்டு
Isopropyl acetate
Skeletal formula of isopropyl acetate
Ball-and-stick model of the isopropyl acetate molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்-2-யில் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
ஐசோபுரோப்பைல் அசிட்டேட்டு
2-அசிடாக்சிபுரோப்பேன்
2-புரோப்பைல் அசிட்டேட்டு
2-புரோப்பைல் எத்தனோயேட்டு
புரோப்பேன்-2-யில் எத்தனோயேட்டு
இனங்காட்டிகள்
108-21-4 Y
ChEMBL ChEMBL1608674
ChemSpider 7627 Y
EC number 203-561-1
InChI
  • InChI=1S/C5H10O2/c1-4(2)7-5(3)6/h4H,1-3H3 N
    Key: JMMWKPVZQRWMSS-UHFFFAOYSA-N N
  • InChI=1/C5H10O2/c1-4(2)7-5(3)6/h4H,1-3H3
    Key: JMMWKPVZQRWMSS-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7915
வே.ந.வி.ப எண் AI4930000
  • CC(OC(C)C)=O
UNII 1Y67AFK870 Y
UN number 1220
பண்புகள்
C5H10O2
வாய்ப்பாட்டு எடை 102.13 g·mol−1
அடர்த்தி 0.87 கி/செ.மீ3
உருகுநிலை −73 °C (−99 °F; 200 K)
கொதிநிலை 89 °C (192 °F; 362 K)
4.3 கி/100 மி.லி (27 °செல்சியசு)
ஆவியமுக்கம் 42 மி.மீபாதரசம் (20 °செல்சியசு)[1]
−67.04·10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H319, H336
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P280, P303+361+353, P304+340, P305+351+338, P312
தீப்பற்றும் வெப்பநிலை 2 °C (36 °F; 275 K)
Autoignition
temperature
460 °C (860 °F; 733 K)
வெடிபொருள் வரம்புகள் 1.8–7.8%
Lethal dose or concentration (LD, LC):
11,918 ppm (rat, 8 hr)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 250 ppm (950 mg/m3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
None established[1]
உடனடி அபாயம்
1800 ppm[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஐசோபுரோப்பைல் அசிடேட்டு பலவகையான உற்பத்திப் பயன்பாடுகளைக் கொண்ட ஒரு கரைப்பானாகும். மற்ற பெரும்பாலான கரிம கரைப்பான்களுடன் கலக்கக்கூடியதாகவும் தண்ணீரில் சிறிது கரையக்கூடியதாக்வும் உள்ளது. எத்தில் அசிடேட்டுடன் ஒப்பிடுகையில் இதனுடைய கரைதிறன் குறைவாகும். செல்லுலோசு, நெகிழி, எண்ணெய் மற்றும் கொழுப்புகளுக்கு இது கரைப்பானாகப் பயன்படுகிறது. சில அச்சு மைகள்[4] மற்றும் வாசனை திரவியங்களில் ஐசோபுரோப்பைல் அசிட்டேட்டு ஓர் அங்கமாக உள்ளது.

ஐசோபுரோப்பைல் அசிடேட்டு காற்றின் முன்னிலையில் எஃகுடன் தொடர்பு கொள்ளும்போது மெதுவாக சிதைந்து, அசிட்டிக் அமிலம் மற்றும் ஐசோபுரோப்பனாலை தருகிறது. ஆக்சிசனேற்றப் பொருட்களுடன் தீவிரமாக வினைபுரிகிறது மேலும் பல நெகிழிகளையும் தாக்குகிறது.[5]

ஐசோபுரோப்பைல் அசிடேட்டு அதன் திரவ மற்றும் நீராவி வடிவங்களில் நன்கு எரியக்கூடியதாகும். மேலும் இது விழுங்கப்பட்டாலோ அல்லது உள்ளிழுக்கப்பட்டாலோ தீங்கு விளைவிக்கும்.[6]

தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம், ஐசோபுரோப்பைல் அசிடேட்டைக் கையாளும் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர அளவுக்கு மில்லியனுக்கு 250 பகுதிகள் (950 மி.கி./மீ3) அளவை அனுமதிக்கப்பட்ட வெளிப்பாடு வரம்பாக நிர்ணயித்துள்ளது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0358". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. "Isopropyl acetate". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. "Isopropyl acetate". ChemViP. Archived from the original on 2012-07-15. பார்க்கப்பட்ட நாள் 2009-04-20.
  4. "Celanese - The chemistry inside innovation™". chemvip.com. Archived from the original on 15 July 2012. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  5. "ISOPROPYL ACETATE". International Chemical Safety Cards. Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2009-06-25.
  6. "Iso-propyl Acetate". Material Safety Data Sheets.
  7. "NIOSH Pocket Guide to Chemical Hazards - Isopropyl acetate". Centers for Disease Control and Prevention.