ஐதரசீன் நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

ஐதரசீன் நைட்ரேட்டு (Hydrazine nitrate) என்பது N2H4•HNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1989 ஆம் ஆண்டு செருமானியர்கள் இதைத் தயாரித்தார்கள். ஓர் ஆக்சிசனேற்றியாக நீர்மவெடிபொருள்களில் இது பயன்படுத்தப்படுகிறது. நிலையான α-வகை மற்றும் நிலைப்புத்தன்மையற்ற β-வகை என்ற இரண்டு படிக வடிவங்களில் ஐதரசீன் நைட்ரேட்டு காணப்படுகிறது. முதல்வகையே பெரும்பாலும் வெடிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது[1]. ஐதரசீன் நைட்ரேட்டு ஆல்ககாலில் குறைவாகவும் நீர் மற்றும் ஐதரசீனில் நன்றாகவும் கரைகிறது. வலிமையான ஆனால் அமோனியம் நைட்ரேட்டைக் காட்டிலும் குறைவான நீருறிஞ்சும் பண்பையும் ஐதரசீன் நைட்ரேட்டு பெற்றுள்ளது.

ஐதரசீன் நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஐதரசீனியம் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
13464-97-6
ChemSpider 145949
InChI
  • InChI=1S/H4N2.HNO3/c1-2;2-1(3)4/h1-2H2;(H,2,3,4)
    Key: AFEBXVJYLNMAJB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166817
  • NN.[N+](=O)(O)[O-]
பண்புகள்
வாய்ப்பாட்டு எடை 95.02
தோற்றம் தெளிவான நீர்மம்
அடர்த்தி 1.64 கி/செ.மீ3
உருகுநிலை 72°C
நீரில் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேலும் இச்சேர்மம் நல்ல வெப்ப நிலைப்புத்தன்மையைக் கொண்டுள்ளது. 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதன் எடை இழக்கும் வீதம் அமோனியம் நைட்ரேட்டைக் காட்டிலும் குறைவாகும். 307 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஐதரசீன் நைட்ரேட்டு வெடிக்கிறது. வெடிக்கும்போது 3829 மெகாயூல்/கிலோகிராம் வெப்பத்தை இது வெளியிடுகிறது. இச்சேர்மத்தில் கார்பன் உட்கூறுகள் இல்லாததால் வெடிக்கும் பொருட்கள் திண்மங்களாக இருப்பதில்லை மற்றும் இவற்றின் சராசரி மூலக்கூறு எடை குறைவானது.

மேற்கோள்கள் தொகு

  1. Liu, Jiping (2015). Liquid Explosives. Springer. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783662458464.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசீன்_நைட்ரேட்டு&oldid=2802902" இலிருந்து மீள்விக்கப்பட்டது