ஐதராபாத்து தாவரவியல் பூங்கா

கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி தாவரவியல் பூங்கா அல்லது ஐதராபாத் தாவரவியல் பூங்கா (Hyderabad Botanical Garden) என்பது ஒரு தாவரவியல் பூங்கா ஆகும். இது தெலங்காணாவின் ஐதராபாத்தின் கொத்தகுடா என்ற இடத்தில் அமைந்துள்ளது. [1] மாணவர்களுக்குக் கல்வி மற்றும் விழிப்புணர்வுணர்வினையும், ஆராய்ச்சியாளர் மற்றும் தாவரவியலாளர்கள், விலங்கியல் வல்லுநர்களுக்கு "வாழ்க்கை ஆய்வகமாக" இருப்பதற்காக இந்தப் பூங்கா தெலங்காணா மாநில வனத்துறையால் உருவாக்கப்பட்டது. இது ஐதராபாத் தொடருந்து நிலையத்திலிருந்து ஐதராபாத்-மும்பை பழைய நெடுஞ்சாலையில் 16 கிலோமீட்டர் (10 மைல்) தொலைவில் உள்ள மாதாபூரின் அருகில் உள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் கோட்லா விஜய பாஸ்கர ரெட்டியின் பெயர் இந்தப் பூங்காவுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தாவரவியல் பூங்கா
தாவரவியல் பூங்காவில்பச்சைப் பஞ்சுருட்டான்
வகைநகரப் பூங்கா
அமைவிடம்கொத்தகுடா, ஐதராபாத்து
ஆள்கூறு17°27′18″N 78°21′25″E / 17.455°N 78.357°E / 17.455; 78.357
பரப்பு270 ஏக்கர்
நிலைஅனித்து நாட்களிலும் திறந்திருக்கும்

தோட்டம் தொகு

தாவரவியல் பூங்கா நவீன தாவரவியல் பூங்காவின் வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தோட்டம் 274 ஏக்கர் (1.11 கிமீ 2) நிலப்பரப்பில் பரவியுள்ளது. [2] இங்கு 'வங்கள்' என்ற பெயரில் 19 பிரிவுகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஐந்து பிரிவுகளை நிறைவுசெய்து பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. பிரிவுகளில் மருத்துவத் தாவரங்கள், மரங்கள், பழ மரங்கள், அலங்காரத் தாவரங்கள், நீர்வாழ் தாவரங்கள், மூங்கில் போன்றவை அடங்கும். இந்தப் பூங்கா பெரிய நீர்நிலைகள், வளமான புல்வெளிகள், இயற்கைக் காடுகள், நேர்த்தியான பாறை அமைப்புகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூலை 2018 இல், தெலங்கானா அமைச்சர் கே. டி. ராமராவ், தாவரவியல் பூங்காவில் புதிதாக உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு வசதிகளான நட்சத்திர வனம், ராசி வனம், நவக்கிரக வனம் போன்றவற்றை திறந்து வைத்தார். [3]

இடம் தொகு

சூழலியல் சுற்றுலாத் தலமான இந்தத் தாவரவியல் பூங்கா ஐதராபாத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் ஹைடெக் நகரத்திற்கு அருகிலுள்ள கோந்தாபூரில் உள்ள கொத்தகுடாவில் உள்ளது. இங்கு தங்கும் விடுதிகள் கிடைக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "Archive News". தி இந்து. 2008-12-18. Archived from the original on 2009-02-15. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Botanical Garden set for re-launch today".
  3. KV, Moulika (11 July 2018). "Botanical garden in Hyderabad reopens after renovations". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/botanical-garden-in-hyderabad-reopened-after-renovations/articleshow/64949804.cms. பார்த்த நாள்: 21 February 2020. 

வெளி இணைப்புகள் தொகு