ஐதராபாத்து பல்லுயிர் பூங்கா

பல்லுயிர் பூங்கா (Biodiversity park ) என்பது அயல் சூழலில் தாவரங்களைப் பாதுகாக்கும் தாவரவியல் பூங்கா ஆகும். இது தெலங்காணாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இது 2012இல் நடைபெற்ற உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டின் போது நிறுவப்பட்டது. இது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நினைவுச் சின்னத்துடன் திறந்து வைத்தார். [1] இது சனவரி 19, 2015 முதல் காச்சிபௌலியில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. [2] தெலங்காணா மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழகம் தளவமைப்புக்குள் ரூ. 2 கோடி செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்கா இராய்துர்க் மெற்றோ நிலையத்திலிருந்து 1.6 கி.மீ. தூரத்திலுள்ளது.

ஐதராபாத்து பல்லுயிர் பூங்கா
பூங்காவின் பிரதான நுழைவு வாயில்
வகைபொதுப் பூங்கா
அமைவிடம்காச்சிபௌலி, ஐதராபாத்து, இந்தியா
ஆள்கூறு17°25′43″N 78°22′31″E / 17.4286°N 78.3752°E / 17.4286; 78.3752
நிலைவருடத்தின் அனைத்து நாட்களும் திறந்திருக்கும்

நினைவுச் சின்னம் தொகு

32 அடி உயரமுள்ள நீள்வட்ட நினைவுச்சின்னம் சுண்ணாம்புக் கற்களால் ஆனது. மேலும்,உயிரினங்களின் பரிணாமத்தை சித்தரிக்கிறது (ஒரு அணு, அணுக்கள், புரதங்கள் தொடங்கி, பல்வேறு வகையான வாழ்க்கையின் புத்திசாலித்தனமான மனிதர்களாக உருவாகிறது). இந்த தூணில் இயற்கையின் ஐந்து கூறுகளை (பூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் வானம்) குறிக்கும் வட்டங்கள் உள்ளன.[3] கருங்கல்லின் வட்ட பாதை பல்வேறு இனங்களின் பெயர்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது. தீ வளையம் சிவப்பு கிரானைட் மற்றும் மஞ்சள் சுண்ணாம்புகளால் வரையப்பட்டுள்ளது. கீழே உள்ள "ஈதர்" வளையம் நீலக் கடல் நீரைக் கொண்ட உலக வரைபடத்தைக் காட்டுகிறது. சின்னத்தின் மேற்புறத்தில் டி.என்.ஏவைக் குறிக்கும் இரட்டை குறியீடுகள் உள்ளது.

பூங்காவிலுள்ள தாவர இனங்களின் வகைகள் தொகு

வரிசை எண் நாடுகளின் பெயர்கள் தாவர இனம் ஆங்கிலப் பெயர்
1. இந்தியா ஆல் Banyan tree
2. அல்சீரியா கொன்றை Indian Laburnum tree
3. ஆர்மீனியா மகாகனி Large-leaved Mahogany
4. ஆத்திரேலியா கூந்தற்பனை Fish-tail palm
5. பெலருஸ் ஏழிலைப்பாலை Devil's tree
6. பெல்ஜியம் வகுளம்/கதலி (மலர்)
7. பெலீசு உலங்காரை Rudraksha
8. பெனின் முள்முருக்கு Indian coral tree
9. பூட்டான் மலைச் சவுக்கு Silver oak tree
10. பொலிவியா நெல்லி Indian gooseberry tree
11. பொசுனியா எர்செகோவினா காட்டு சம்பகம் Ylang-ylang tree
12. பிரேசில் மரச் சுரைக்காய் Sausage tree
13. புரூணை பொந்தன்புளி Monkey-bread tree
14. பல்காரியா வெண் மருது Arjuna tree
15. புர்க்கினா பாசோ கடம்பு Kadamba tree
16. புருண்டி ஆல் Banyam tree
17. கேப் வர்டி குருகிலை White Fig tree
18. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு சீமை ஆல் Indian Rubber tree
19. சிலி வெள்ளால் Weeping Fig tree
20. கொலம்பியா பலா Jackfruit tree
21. கோட் டிவார் வாகை East Indian Walnut, Siris
22. சைப்பிரசு புன்னை Alexandrian Laurel
23. வட கொரியா இந்திய மா Mango tree
24. சீபூத்தீ குருகிலை White Fig tree
25. டொமினிக்கன் குடியரசு வகுளம் Indian Medlar, Bakul
26. எல் சால்வடோர் கொடுக்காய்ப்புளி Monkeypod, Jangle Jalebi
27. எரித்திரியா உவா மரம் Elephant Apple tree
28. ஐரோப்பிய ஒன்றியம் வகுளம் Indian Medlar, Bakul
29. பிஜி நாகமரம் Iron Wood
30. பிரான்சு தேன் (தாவரம்) Singapore Cherry
31. காபோன் ஈரப்பலா Bread Fruit tree
32. காம்பியா பவழமல்லி Coral Jasmina
33. ஜெர்மனி வாகை East Indian Walnut, Siris
34. கானா கோங்கம் Yellow Silk-Cotton
35. கிரெனடா நாகமரம் Iron Wood
36. கினி வேம்பு Margosa, Neem
37. கயானா நாகலிங்கம் (மரம்) Cannon Ball tree
38. எயிட்டி செந்தணக்கு Gum Karaya tree
39. ஒண்டுராசு பெருங்கொன்றை Copper-pod tree
40. ஐசுலாந்து தான்றி Belleric Myrobolan tree

பூங்கா தொகு

பல்லுயிர் பூங்கா 13 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியது. மேலும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான தாவர இனங்கள் உள்ளன . அவை ஒவ்வொன்றும் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும், உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஒரு விஞ்ஞானியால் நடப்படுகின்றன. இது தற்போது தெலங்கானா வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பூங்காவிற்குள் நுழைய அனுமதி தரப்பட்டுள்ளது.

புகைப்படத் தொகுப்பு தொகு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Geetanath, V. (16 October 2013). "Gachibowli’s Bio-Diversity Park remains out of bounds for visitors". The Hindu. https://www.thehindu.com/news/cities/Hyderabad/gachibowlis-biodiversity-park-remains-out-of-bounds-for-visitors/article5237894.ece. பார்த்த நாள்: 9 October 2018. 
  2. "Biodiversity Park open to public". The Hindu. 19 January 2015. https://www.thehindu.com/news/cities/Hyderabad/more-lung-space/article6800746.ece. பார்த்த நாள்: 9 October 2018. 
  3. "Bio Diversity Park, Hyderabad". Odysseystone. Archived from the original on 2020-06-12. பார்க்கப்பட்ட நாள் 2020-06-12.

வெளி இணைப்புகள் தொகு