ஐந்திணைச் செய்யுள்
ஐந்திணைச் செய்யுள் என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது, புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து உரிப்பொருட்களும் விளங்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய ஐந்து திணைகளையும் கூறுவது[1].
ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஐந்திணைச் செய்யுள்கள்.
குறிப்புகள்
தொகு- ↑ முத்துவீரியம் பாடல் 1043
உசாத்துணைகள்
தொகு- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் பரணிடப்பட்டது 2010-07-16 at the வந்தவழி இயந்திரம்