ஐனான் முயல்

Bilateria

ஐனான் முயல் (ஆங்கிலப்பெயர்: Hainan Hare, உயிரியல் பெயர்: Lepus hainanus) என்பது சீனாவின் அய்னான் தீவில் காணப்படும் ஒருவகை முயல் இனம் ஆகும்.

ஐனான் முயல்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. hainanus
இருசொற் பெயரீடு
Lepus hainanus
ஸ்வின்ஹோ, 1870
ஐனான் முயலின் பரம்பல்

விளக்கம்

தொகு

இது ஒரு சிறிய முயலினம் ஆகும். இதன் உடலின் நீளம் 40 சமத மீட்டரை விடக் குறைவு. இதன் எடை வெறும் 1.5 கிலோகிராம் ஆகும். இதன் தலை சிறியதாகவும் உருண்டையாகவும் இருக்கும். இது நீளமான காதுகளைக் கொண்டிருக்கும். இதன் காதுகளின் நீளம் இதன் பின்னங்கால்களின் நீளத்தை விட அதிகம். வாலின் மேற்பகுதி கரு நிறத்திலும், கீழ்ப்பகுதி வெண்ணிறத்திலும் காணப்படும். மற்றப் பெரும்பாலான முயல்களை விட இதன் மயிர்கள் பல நிறங்களிற் காணப்படும். இதன் முதுகு பழுப்பான கறு வெள்ளை நிறத்திலும், வயிறு வெண்ணிறத்திலும், பக்கவாட்டு மயிர்கள் பழுப்பான மஞ்சளினதும் பழுப்பான வெண்ணிறத்தினதும் கலவையாகவும், இதன் கால்கள் அடர் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐனான்_முயல்&oldid=3839723" இலிருந்து மீள்விக்கப்பட்டது