ஐன்சுடைனியம் புளோரைடு
ஐன்சுடைனியம் புளோரைடு (Einsteinium fluoride) EsF3என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐன்சுடைனியமும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஐன்சுடைனியம்(III) புளோரைடு, ஐன்சுடைனியம் முப்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
99644-27-6 | |
ChemSpider | 64887117 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
EsF3 | |
வாய்ப்பாட்டு எடை | 309.00 g·mol−1 |
தோற்றம் | படிகங்கள் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஐன்சுடைனியம்(III) குளோரைடு கரைசல்கள் புளோரைடு அயனிகளுடன் வினைபுரியும் போது ஐன்சுடைனியம் புளோரைடு வீழ்படிவாக உருவாகிறது. ஐன்சுடைனியம்(III) ஆக்சைடுடன் குளோரின் முப்புளோரைடு (ClF3) அல்லது F2 வாயுவை 1-2 வளிமண்டல அழுத்தம் மற்றும் 300 முதல் 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து ஐன்சுடைனியம் புளோரைடு தயாரிப்பது மாற்று தயாரிப்பு செயல்முறையாகும்.[1][2][3]
இயற்பியல் பண்புகள்
தொகுகலிபோர்னியம்(III) புளோரைடு சேர்மத்தில் உள்ளதைப் போல ஐன்சுடைனியம் புளோரைடு அறுகோணப் படிக உருவத்தில் படிகமாகிறது. இங்கு Es3+ அயனிகள் புளோரின் அயனிகளால் ஈருச்சி முக்கோணப் பட்டகத்தில் 8 மடங்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் நீரில் கரையாது..[4]
வேதியியல் பண்புகள்
தொகுஇலித்தியம் உலோகத்தால் ஐன்சுடைனியம் புளோரைடு ஐன்சுடைனியமாக ஒடுக்கப்படுகிறது:[5][6]
- EsF3 + 3Li → Es + 3 LiF
மேற்கோள்கள்
தொகு- ↑ Ensor, D. D.; Peterson, J. R.; Haire, R. G.; Young, J. P. (1981). "Absorption spectrophotometric study of 253EsF3 and its decay products in the bulk-phase solid state". Journal of Inorganic and Nuclear Chemistry 43 (10): 2425–2427. doi:10.1016/0022-1902(81)80274-6.
- ↑ Greenwood, p. 1270
- ↑ Young, J. P.; Haire, R. G.; Fellows, R. L.; Peterson, J. R. (1978). "Spectrophotometric studies of transcurium element halides and oxyhalides in the solid state". Journal of Radioanalytical Chemistry 43 (2): 479–488. doi:10.1007/BF02519508.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
- ↑ Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1390. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3598-2. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
- ↑ Haire, Richard G. (2006). "Einsteinium". In Morss, Lester R.; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (PDF). Vol. 3 (3rd ed.). Dordrecht, the Netherlands: Springer. pp. 1577–1620. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/1-4020-3598-5_12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3555-5. Archived from the original (PDF) on 2010-07-17.