ஐய்யுன்னி சாலக்கா
சி. ஆர். ஐயுன்னி (Iyyunni Chalakka) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருச்சூரைச் சேர்ந்த ஓர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி அரசியல்வாதியாவார்.[1] [2] 1952 முதல் 1957 ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர்-கொச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் [3] [4] [5]
சி. ஆர். ஐய்யுன்னி C. R. Iyyunni | |
---|---|
இந்தியர் நாடாளுமன்றம் திருச்சூர் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1952–1957 | |
முன்னையவர் | உருவாக்கப்பட்டது |
பின்னவர் | கே. கிருட்டிணன் வாரியார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 அக்டோபர் 1890 திருச்சூர், இந்தியா |
இறப்பு | 21 சனவரி 1961 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அண்ணி (குஞ்ஞன்னம்) ஐய்யுன்னி |
கல்வி | மகாராசா கல்லூரி, எர்ணாகுளம் |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஐயுன்னி சாலக்கா 1890 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி இராப்பாய் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். திருச்சூரில் உள்ள சிஎம்எசு உயர்நிலைப் பள்ளி, எர்ணாகுளம் மகாராசா கல்லூரி, மெட்ராசு கிறித்தவக் கல்லூரி, திருவனந்தபுரம் சட்டக் கல்லூரி ஆகியவற்றில் இவர் கல்வி பயின்றார்.
அரசியல் வாழ்க்கை
தொகுவட்டாரத்தில் காங்கிரசு கட்சி சார் நடவடிக்கைகளுடன் திருச்சூரில் வழக்கறிஞராக பணியாற்றினார். கத்தோலிக்க சிரியன் வங்கி , மலபார் வங்கி, கொச்சின் ரிசர்வ் வங்கி, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் வங்கி ஆணையம் போன்ற வங்கி நிறுவனங்களை மேம்படுத்துவதில் இவர் ஆற்றிய பங்கிற்காக புகழ் பெற்றார். திருச்சூர் நகராட்சித் தலைவர், திருச்சூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர், சிவில் உரிமை சங்கத் தலைவர், நிர்வாகக் குழுத் தலைவர், இந்தோ-மெர்கண்டைல் வங்கி, கொச்சி மாநில வருவாய்த் துறை அமைச்சர், கேரள பிரதேச காங்கிரசு கட்சி உறுப்பினர், கொச்சி மாவட்ட காங்கிரசு கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாரியம் மற்றும் திருவிதாங்கூர்-கொச்சி மாநில மக்கள் தொடர்புக் குழு உறுப்பினர் போன்ற பிற பதவிகளையும் வகித்துள்ளார். [6]
இறப்பு
தொகுஐயுன்னி 1961 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "1st Lok Sabha Election 1951–1952: Indian General Election result, Winning Party and Numbers of Seats". NewsX (in ஆங்கிலம்). 2019-04-22. பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
- ↑ Chalakka, Iyyunni. "Iyyunni Chalakka". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
- ↑ MP, Iyyunni Chalakka. "Iyyunni Chalakka MP". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
- ↑ MP, Iyyunni Chalakka. "Iyyunni Chalakka MP". www.latestly.com. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
- ↑ MP, Iyyunni Chalakka MP. "Iyyunni Chalakka MP". www.indiavotes.com. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
- ↑ MP, Iyyunni Chalakka. "Iyyunni Chalakka MP". பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.