ஐலவ்யூ
ஐலவ்யூ (ILOVEYOU) அல்லது இலவு இலெற்றர் (Love Letter) என்பது கிறீன்விச்சு இடைநிலை நேரப்படி, 2000ஆம் ஆண்டு மே 4ஆம் நாள் அன்றும் அதன் பின்னரும் மில்லியன் கணக்கிலான விண்டோசுக் கணினிகளைத் தாக்கிய கணினிப் புழு ஆகும்.[1] இது "ILOVEYOU" என்ற தலைப்புடன் "LOVE-LETTER-FOR-YOU.txt.vbs" என்ற இணைப்பைக் கொண்ட மின்னஞ்சலால் பரவியது.[2] இவ்விணைப்பைத் திறக்கும்போது ஒரு விசுவல் பேசிக்கு நிரல் செயற்படத் தொடங்கும்.[3] இந்நிரல் கணினியில் படிமக் கோப்புகளை மேலெழுதி விடுவதுடன், விண்டோசு முகவரிப் புத்தகத்திலுள்ள அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கும் தனது படியை அனுப்பி விடும்.[2] மேலும், இது கடவுச்சொற்களைத் திருடும் மென்பொருளையும் தரவிறக்கம் செய்கின்றது.[1] இப்புழுவின் 82 வகைகளைக் கண்டறிந்துள்ளதாகச் சிமாண்டெக்கு கூறுகின்றது.[1]
பொதுப் பெயர் | இலவு இலெற்றர் |
---|---|
வகை | கணினிப் புழு |
பாதிக்கப்பட்ட இயக்கு தளங்கள் | மைக்குரோசாபிட்டு விண்டோசு |
எழுதப்பட்ட மொழி | வி. பி. கிறிட்டு |
தாக்கம்
தொகுஇப்புழுவால் உலக அளவில் 5.5-8.7 பில்லியன் அமெரிக்கத் டெலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டதாகக் கணிக்கப்பட்டது.[4] இதனை நீக்குவதற்கு 15 பில்லியன் அமெரிக்கத் தொலர் செலவாகியிருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டது.[5] அத்துடன், இணையத்துடன் இணைக்கப்பட்ட கணினிகளின் பத்து விழுக்காட்டு அளவிலான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டது.[6]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Eric Chien (12 மார்ச் 2002). "VBS.LoveLetter.Var". Symantec. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 2.0 2.1 "VBS/Loveletter@MM". McAfee. பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Deborah Galea (11 மே 2015). "The ILoveYou legacy--how malware has changed in the past 15 years". BetaNews. பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ George Garza. "Top 10 worst computer viruses". Catalogs. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2015.
- ↑ Jason Buckland. "The 'love' bug". MSN Tech & Gadgets. Archived from the original on 2011-10-27. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்பிரல் 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Język angielski i niemiecki". Gazeta Edukacja: pp. 1. 2008 ஏப்பிரல் 19-20.