விசுவல் பேசிக்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரையானது மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ 6 அல்லது அதற்கு முந்திய பதிப்புக்களில் வந்த விசுவல் பேசிக்கைப் பற்றியதாகும். மைக்ரோசாப்ட் விசுவல் பேசிக் நெட் அல்லது அதற்குப் பின்னான பதிப்புக்களுக்கு விசுவல் பேசிக் நெட்-ஐப் பார்க்கவும்.
![]() | |
நிரலாக்கக் கருத்தோட்டம்: | பொருள் அடிப்படை மற்றும் நிகழ்வு அடிப்படை |
---|---|
வெளியிடப்பட்டது: | 1991 |
வடிவமைப்பாளர்: | மைக்ரோசாப்ட் |
வளர்த்தெடுப்பாளர்: | மைக்ரோசாப்ட் |
அண்மை வெளியீட்டுப் பதிப்பு: | 6.0 |
அண்மை வெளியீட்டு நாள்: | 1998 |
இயல்பு முறை: | நிலையான, மாறாத |
முதன்மைப் பயனாக்கங்கள்: | மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டூடியோ |
பிறமொழித்தாக்கங்கள்: | பேசிக் (நிரல் மொழி) |
இம்மொழித்தாக்கங்கள்: | விசுவல் பேசிக் நெட், கம்பாஸ், ரியல்பேசிக் மற்றும் பேசிக்4பிபிசி |
இயக்குதளம்: | மைக்ரோசாப்ட் வின்டோசு மற்றும் எம்எஸ்-டாஸ் |
இணையதளம்: | msdn |
விசுவல் பேசிக் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் நிரலாக்கல் மொழியாகும். இதன் முன்மாதிரியானது றூபித் திட்டத்திற்காக ஆலன் கூப்பரினால் வடிவமைக்கப்பட்டது. இதைப் பின்னர் மைக்ரோசாப்ட் வாங்கி மேம்படுத்திக் கொண்டது. விசுவல் பேசிக்கானது புதிய விசுவல் பேசிக் நெட் ஊடாக மாற்றப்பட்டுள்ளது. பழைய விசுவல் பேசிக்கானது பேசிக் மொழியிலமைந்த துரிதமாகப் பிரயோகங்களை விருத்திசெய்யும் வரைகலை பயனர் இடைமுகத்துடன் தகவற் தளங்களை அணுகுவதற்கு DAO, RDO, ADO மற்றும் ஆக்டிவ் எக்ஸ் பிரயோகங்களும்.
ஓர் நிரலாக்கரானவர் விசுவல் பேசிக்குடன் தரப்பட்ட பாகங்களை (Components) ஒன்றிணைப்பதன் மூலம் உருவாக்க முடியும். இத்துடன் விண்டோஸ் பிரயோகங்களுக்கான நிரலாக்கல் இடைமுகத்தினூடக முடியுமெனினும் வெளிப் பங்சன்ஸ் (function) வெளிப்படுத்தல் வேண்டும்.
வர்தகரீதியான நிரலாக்கலில் ஓர் மிகக் கூடுதலான பயனர்களைக் கொண்டதாக விளங்குகின்றது.
வழிவந்த மொழிகள் தொகு
மைக்ரோசாப்ட் பேஸிக் மொழியினூடாகப் பிரயோகங்களிற்கு ஸ்கிரிப்டிங் ஊடாக ஆரம்பத்தில் விசுவல் பேசிக்கூடாகவும் பின்னர் .நெட் ஊடாக மாற்றீடு செய்யப் பட்டுள்ளது.
- பிரயோகங்களிற்கான விசுவல் பேசிக்கானது மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற பிரயோகங்களில் மாத்திரம் அன்றி புவியியல் மென்பொருளன ஆர்க்ஜிஐஎஸ் (ArcGIS) இலும் ஒன்றிணைக்கப் பட்டுள்ளது. இப்பிரயோகங்களிற்கிடையே விசுவல் பேசிக்கானது நடைமுறைப் படுத்தப் பட்டுள்ள முறையில் வேறுபாடுகள் இருப்பினும் இவை பெரும்பாலும் விசுவல் பேசிக் 6 ஐயே அடிப்படையாக் கொண்டுள்ளன
- விபிஸ்கிரிப்ட் ஆக்டிவ் சேவர் பேஜிற்கான வழமையான மொழியாகும். இது விண்டோஸ் ஸ்கிரிப்டிங் மற்றும் சேவர் ஸ்கிரிப்டிங்கில் பாவிக்கக்கூடியது. இதன் இலக்கணமானது விசுவல் பேசிக்கை ஒத்திருந்தாலும் இது விண்டோஸ் ஸ்கிரிப்டிங் கோஸ்டினால் இயக்கப் படுகின்றது.hfdfghhjhgfdsdfghj
- விசுவல் பேசிக் நெட் மைக்ரோசாப்டினால் விசுவல் பேசிக்கின் வழிவந்த மொழியாகும். இது மைக்ரோசாப்ட்.நெட்டின் ஓர் அங்கமாகும். விசுவல் பேசிக்.நெட் ஓர் முழுமையானா புதிய கருவியாதலினால் பின்னோக்கியா ஒத்தியசைவு எதுவும் கிடையாது.
பலர் பயனார்கள் கருத்துப்படி தானியங்கி (Automated) முறையில் விசுவல் பேசிக்கில் இருந்து விசுவல் பேசிக்.நெட் இற்கு மாறுதல் நடைமுறையில் சாத்தியமில்லை ஆதனால் பெரும்பாலும் மனித முயற்சியைப் பாவித்தே மாற்றப்படுகின்றது. தவிர விசுவல் பேசிக் நிரலை விசுவல் பேசிக்.நெட் முறையில் மாற்றுவதானால் நீண்ட சோதனைகளுக்கு உட்படவேண்டும் என்பதால் அநேகமாக ஜாவா நிரலாக்கல் மொழி C# மற்றும் டெல்பியிலிருந்தே மாற்றங்கள் நிகழ்ந்தன.
மொழிவசதி தொகு
விசுவல் பேசிக்கானது இலகுவாகக் கற்றுப் பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்நிரலானது இலகுவாக வரைகலை இடைமுகங்களைப் பயனருக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல் சிக்கலான விண்டோஸ் நிரல்களையும் ஆக்க முடிகின்றது. இலகுவான நிரல்கள் பல வரிகளை எழுதாமல் உருவாக்கமுடியும். நிரல்கள் வினைத்திறனாது ஓர் பிரச்சினையாகவே ஆரம்பத்தில் இருந்தபோதிலும் வினைத்திறனான கணினிகளைப் பயன்படுத்தி வேகமாக பிரயோகங்களை உருவாக்கமுடியும்
பதிப்புக்கள் தொகு
- விசுவல் பேசிக் வேக்கிங் மாடல் எடிசன் (Visual Basic Working Model Edition) - இது மைக்ரோசாப்டின் இலவசமான மாணவர்களை விசுவல் பேசிக்கினைப் படிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இதிலுள்ள வசதிகள்விசுவல் பேசிக் புரொபெஷனலில் குறைவானதே. இதைத் தற்போது மைக்ரோசாப்டின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கமுடியாது. புதிய பதிப்பான விசுவல் பேசிக்.நெட் எக்ஸ்பிரஸ் எடிசன் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கூடியதாகக் கிடைக்கின்றது. விசுவல் பேசிக் வேக்கிங்க மாடல் எடிசனில் MSDN (MicroSoft Developer Network) உதவிகள்கிடையாது.
- விசுவல் பேசிக் புரொபெஷனல் - இது விஷ்வல் ஸ்ரூடியோவுடன் வந்தாகும் இதுவே மிகப் பெரிமளவில் விருத்தியாளர்களால் பாவிக்கப்படுகின்றது.
ஆரம்பித்தல் தொகு
இதன் நிரலாகம் கீழே தரப்படுகின்றது. இதில் முதாவது வரியும் கடைசி வரியும் மைக்ரோசாப்ட் விசுவல் பேசிக் தானே உருவாக்கியதாகும். இரண்டாவது வரி திரையில் காட்டப்படவேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றது. மூன்றாவது வரி சி நிரலாக்கல் மொழி போன்று இங்கும் print பாவிக்கப்படுவதை அவதானிக்கலாம். (அங்கு printf() பாவிக்கபடுகின்றது. இதன் நிரலாகம் கீழே தரப்படுகின்றது.
Private Sub Form_Load()
Form1.Show
Print "Welcome to Visual Basic"
End Sub
இபோது F5 (function key) அழுத்துவதன் மூலம் நிரலை இயக்கலாம்.
வெளியிணைப்புக்கள் தொகு
- விஷ்வல் பேஸிக் பயிற்சிகள் (ஆங்கிலம்)
- விஷ்வல் பேஸிக் வேக்கிங்க் மாடல் எடிசன் பதிவிறக்கம். (தமிழில்)
- விஷ்வல் பேஸிக் வேக்கிங்க் மாடல் எடிசன் பதிவிறக்கம் (ஆங்கில மொழியில்).