ஐ.எசு.ஓ 639

(ஐ.எசு.ஓ 639-4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐ.எசு.ஓ 639 என்பது .உலகின் பிரதான மொழிகளை அடையாளப் படுத்த பயன்படுத்தப்படும் சுருக்கக் குறிகளை பட்டியலிடும் சர்வதேச சீர்தர மொழிக் குறியீடுகளின் தொகுதியாகும். 1967 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 2002 இல் திரும்பப் பெறப்பட்ட மூல சீர்தரத்தின் பெயருமாகும்.

ஐ.எசு.ஓ 639 ஆறு பகுதிகளைக்கொண்டது; அதனில் நான்கு பகுதிகள் (முறையே 1,2,3 மற்றும் 5) ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. மற்றவை ஆய்வில் உள்ளன.[1]

சீர்தரத்தின் ஆறு பகுதிகள்

தொகு
சீர்தரம் பெயர் (மொழிகளைக் குறிக்க -- ...) முதல் பதிப்பு நடப்பு எண்ணிக்கை
ஐ.எசு.ஓ 639-1 பாகம் 1: ஆல்பா-2 குறி 1967 ( ஐ.எசு.ஓ 639 வாக) 2002 185
ஐ.எசு.ஓ 639-2 பாகம் 2: ஆல்பா-3 குறி 1998 1998 >450
ISO 639-3 பாகம் 3: ஆல்பா-3 மொழிகளின் முழுமையான குறி 2007 2007 7704 + உள்ளக அளவு
ஐ.எசு.ஓ/டிஐஎசு 639-4 பாகம்4: செயல்திட்ட கையேடு மற்றும் மொழிகளை சுருக்கி குறி தரும் கோட்பாடுகள் நவ.2008க்கு திட்டமிட்டது - -
ஐ.எசு.ஓ 639-5 பாகம் 5: ஆல்பா-3 மொழிக்குடும்பங்களுக்கும் தொகுதிகளுக்கும் குறிகள்' 2008-05-15 2008-05-15 114
ஐ.எசு.ஓ/சிடி 639-6 பாகம் 6: ஆல்பா-4 மொழியின் வெவ்வேறு வடிவங்களை முழுமையாகக் குறிக்க - 2008? -

சீர்தரத்தின் ஒவ்வொரு பகுதியும் அதற்கான பராமரிப்பு முகவாண்மையால் பேணப்படுகிறது. இவ்வாணயம் வேண்டும்போது குறிகளை சேர்த்தும் குறிகளின் நிகழ்நிலையை இற்றைப்படுத்தியும் வருகிறது.

தனி குறிகளின் பண்புகள்

தொகு

நோக்கங்கள்:

  • தனி மொழிகள்
  • பெருமொழிகள் (பாகம் 3)
  • மொழித்தொகுப்புகள் (பாகம் 1, 2, 5) (பாகம் ஒன்றில் ஒன்றே உள்ளது: bh; பாகம் இரண்டில் பெரும்பாலானவை உள்ளன, மற்றும் மேலும் சில பாகம் ஐந்தில் சேர்க்கப்பட்டன)
    • வகை தொகுப்பு
    • மற்ற தொகுப்பு
  • வட்டார வழக்குகள்
  • உள்ளக பயன்பாட்டிற்கு ஒதுக்கியுள்ளது (பாகம் 2, 3)
  • சிறப்பு நிலைமைகள் (பாகம் 2, 3)

வகைகள் (தனி மொழிகளுக்கு மட்டும்):

  • நடப்பிலுள்ள மொழிகள் (பாகம் 2, 3) (அனைத்து பெருமொழிகளும் நடப்பு மொழிகள்[2])
  • அழிந்த மொழிகள் (பாகம் 2, 3) (437[3],பாகம் 2ல் நான்கு chb, chg, cop, sam; பாகம் 1 இல் எதுவுமில்லை)
  • பழம் மொழிகள் (பாகம் 1, 2, 3) (112[4], 19-பாகம் 2இல்; மற்றும் 5 மொழிகள், ave, chu, lat, pli and san, பாகம் ஒன்றிலும் இந்த குறிகளைக் கொண்டுள்ளன: ae, cu, la, pi, sa)
  • வரலாற்று மொழிகள் (பாகம் 2, 3) (63[5], 16-பாகம் 2இல், பாகம் 1 இல் எதுவுமில்லை)
  • கட்டமைத்த மொழிகள் (பாகம் 2, 3) (19[6], 9 -பாகம் 2இல்: epo, ina, ile, ido, vol, afh, jbo, tlh, zbl; 5-பாகம் 1இல்: eo, ia, ie, io, vo)

நூற்பட்டியல் மற்றும் கலைச்சொற்களுக்கான குறிகள்

  • நூற்பட்டியல் (பாகம் 2)
  • கலைச்சொற்கள் (பாகம் 2)

ஐ எசு ஓ639 குறிகளின் பயன்பாடு

தொகு

ஐ எசு ஓ 639இன் வெவ்வேறு பகுதிகளில் வரையறுத்துள்ள குறிகள் நூலக மற்றும் கணினி/இணைய சூழலில் வட்டார தரவமைப்பில் முக்கியமான பங்காற்றுகிறது.தவிர விக்கிப்பீடியா போன்றவற்றில் வெவ்வேறு மொழி பதிப்புகளை இணையத்தில் முகவரியிட பயனாகிறது.

குறி வெளி

தொகு

ஆல்பா-2 குறி வெளி

தொகு

"ஆல்பா-2" குறிகளை ஐ.எசு.ஓ 639-1 பயன்படுத்துகிறது. இலத்தின் மொழியின் இரு எழுத்துக்களைக் கொண்டது.அதிகமாக   மொழிகளை குறிக்க முடியும். இதைவிட அதிக எண்ணிக்கை வேண்டி ஆல்பா -3 குறிகளைக் கொண்டு ISO 639-2 அமைக்கப்பட்டது.

ஆல்பா-3 குறி வெளி

தொகு

"ஆல்பா-3" குறிகளை ஐ.எசு.ஓ 639-2, ஐ.எசு.ஓ 639-3 மற்றும் ஐ.எசு.ஓ 639-5 பயன்படுத்துகின்றன. இலத்தின் மொழியின் மூன்று எழுத்துக்களைக் கொண்டது.. இதனைக் கொண்டு   மொழிகளையும் மொழித்தொகுதிகளையும் குறியிடலாம்.

ஆல்பா-3 குறிகள் மேற்கண்ட மூன்று பகுதிகளுக்கும் பொதுவாக இருப்பதால் சற்று ஒருங்கிணைப்பு தேவை.

பாகம் 2 நான்கு சிறப்பு குறிகளை வரையறுத்துள்ளது: mul, und, mis, zxx, ஒரு ஒதுக்கப்பட்ட அளவை qaa-qtz (20 × 26 = 520 குறிகள்) மற்றும் 23 இரு பதிப்பு (the B/T codes). இதனால் 520 + 23 + 4 = 547 குறிகளை மற்ற பாகங்களில் பயன்படுத்த இயலாது. மீதம் 17,576 – 547 = 17,029 மட்டுமே பயனிற்கு உள்ளன.

உலகில் தற்சமயம் ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் மொழிகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.[7]. ஆகையால் இந்த 17,029 குறிகள் போதுமானவையாகும்.

ஆல்பா-4 குறி வெளி

தொகு

"ஆல்பா-4" குறிகளை ஐ.எசு.ஓ 639-6 பயன்படுத்த திட்டமுள்ளது. இலத்தின் மொழியின் நான்கு எழுத்துக்களைக் கொண்டது. அதிகமாக   மொழிகளையும் மொழித்தொகுதிகளையும் குறியிடலாம்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "ISO catalogue search for ISO 639". பார்க்கப்பட்ட நாள் 2008-11-23.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-10. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-10. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-10. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-10. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-10. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  7. http://www.ethnologue.com/ethno_docs/distribution.asp?by=family

வெளி இணைப்புகள்

தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.எசு.ஓ_639&oldid=3546712" இலிருந்து மீள்விக்கப்பட்டது