ஒஈவிசெ- டி ஆர்-111

ஒஈவிசெ-டி ஆர்-111 (OGLE-TR-111) என்பது கரினா ( மரக்கலம் ) விண்மீன் குழுவில் சுமார் 5,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு மஞ்சள் குறுமீனாகும் . இந்த தொலைவில் உள்ள மங்கலான விண்மீன் சுமார் 17 தோற்றப் பொலிவுப் பருமையைக் கொண்டு இன்னும் பட்டியலிடப்படவில்லை . [1] அதன் கோள்களில் ஒன்று மாறும்போது அதன் தோற்றப் பொலிவு மாறுவதால், இந்த விண்மீனுக்கு V759 கரினே என்ற மாறி விண்மீன் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

OGLE-TR-111
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Carina
வல எழுச்சிக் கோணம் 10h 53m 17.91s[1]
நடுவரை விலக்கம் -61° 24′ 20.3″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)16.96[1]
இயல்புகள்
விண்மீன் வகைG[1]
மாறுபடும் விண்மீன்planetary transit variable
வான்பொருளியக்க அளவியல்
தூரம்~5,000 ஒஆ
(~1,500 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)15.55
விவரங்கள்
திணிவு0.82 ± 0.15 M
ஆரம்0.831 ± 0.031 R
அகவை>1.1 பில்.ஆ
வேறு பெயர்கள்
OGLE-TR-111, V759 Carinae
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

கோள் அமைப்பு

தொகு

2002 ஆம் ஆண்டில் ஒளியியல் ஈர்ப்பு வில்லை செய்முறை (ஒஈவிசெ) கணக்கெடுப்பு, விண்மீனிலிருந்து வரும் ஒளியானது ஒவ்வொரு 4 நாட்களுக்கும் சிறிது சிறிதாக மங்குவதைக் கண்டறிந்தது, இது ஒரு கோளின் அளவிலான வான்பொருள் விண்மீனைக் கடப்பதைக் குறிக்கிறது. ஆனால் பொருளின் பொருண்மை அளவிடப்படாததால், அது ஒரு உண்மையான கோளா, குறைந்த நிறை கொண்ட செங்குறுமீனா அல்லது வேறு ஏதாவதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.[2]2004 ஆம் ஆண்டில் ஆர வேக அளவீடுகள் கடக்கும் பொருள் உண்மையில் ஒரு கோள் என்பதைக் காட்டியது.[3]

இந்தக் கோள் அருகிலுள்ள விண்மீன்களைச் சுற்றிவரும் கோள் " சூடான வியாழன் கோளை " மிகவும் ஒத்ததாக இருக்கலாம். இதன் பொருண்மை வியாழனை விட பாதி ஆகும். இது சூரியனில் இருந்து புவிக்கான 1/20 க்கும் குறைவான தொலைவில் விண்மீனைச் சுற்றி வருகிறது.

உறுதிப்படுத்தப்படாத கோள்

தொகு

2005 இல், மற்றொரு கடப்புநிலைக் கோளுக்கான சான்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கோள் "ஒஈவிசெ- டி ஆர்TR-111சி" என்பது விண்மீனைச் சுற்ரிவர வாய்ப்புள்ள புறக்கோள் ஆகும். ஒளியியல் ஈர்ப்பு வில்லைச் செய்முறை (ஒஈவிசெ) கணக்கெடுப்பின் தொடக்கச் சான்றுகளின் அடிப்படையில் 2005 ஆம் ஆண்டில்ல் இது முதலில் முன்மொழியப்பட்டது. இந்தக் கோளை உறுதிப்படுத்த கூடுதல் தரவு தேவை. இது உறுதிப்படுத்தப்பட்டால், OGLE-TR-111 ஓரிணை கடப்புநிலைக் கோல்களைக் கொண்ட முதல் விண்மீன்களில் ஒன்றாகும்.[4]

ஒஈவிசெ- டி ஆர்-111 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.53 ± 0.11 MJ 0.047 ± 0.001 4.0144479 ± 4.1e-06 0
c (உறுதிப்படுத்தப்படவில்லை) 0.7 ± 0.2 MJ 0.12 ± 0.01 16.0644 ± 0.0050 0


மேலும் காண்க

தொகு
  • ஒஈவிசெ-2005- பிஎல்ஜி-390 எல்
  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "SIMBAD query result: OGLE-TR 111 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-04-29.
  2. Udalski, A. et al. (2002). "The Optical Gravitational Lensing Experiment. Planetary and Low-Luminosity Object Transits in the Carina Fields of the Galactic Disk". Acta Astronomica 52 (4): 317–359. Bibcode: 2002AcA....52..317U. http://acta.astrouw.edu.pl/Vol52/n4/a_52_4_1.html. 
  3. Pont, F. et al. (2004). "The "missing link" : A 4-day period transiting exoplanet around OGLE-TR-111". Astronomy and Astrophysics 426: L15–L18. doi:10.1051/0004-6361:200400066. Bibcode: 2004A&A...426L..15P. 
  4. Minniti, Dante et al. (2007). "Millimagnitude Photometry for Transiting Extrasolar Planetary Candidates. III. Accurate Radius and Period for OGLE-TR-111-b". The Astrophysical Journal 660 (1): 858–862. doi:10.1086/512722. Bibcode: 2007ApJ...660..858M. 

வெளி இணைப்புகள்

தொகு
  • "OGLE-TR-111". Exoplanets. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-04-29.
 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒஈவிசெ-_டி_ஆர்-111&oldid=3829333" இலிருந்து மீள்விக்கப்பட்டது