ஒசாமா (திரைப்படம்)

'ஒசாமா (ஆங்கிலம்: Osama, பாரசீக மொழி: (اسامه‎) என்பது பாரசீக மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2003 ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் இயக்குனர் சித்திக் பார்மாக் என்பவரால் இயக்கப்பட்டது. இத்திரைப்பட இருவாக்கத்திற்கு ஈரானிய இயக்குனர் மோசன் மக்மால்பஃப் உதவி புரிந்தார்.

ஒசாமா
ஒசாமா சுவரொட்டி
இயக்கம்சித்திக் பார்மாக்
கதைசித்திக் பார்மாக்
வெளியீடுமே 20, 2003 (2003-05-20)
ஓட்டம்83 நிமிடங்கள்[1]
மொழிபாரசீக மொழி
ஆக்கச்செலவு$46,000[2]
மொத்த வருவாய்$3,888,902[2]

கதைதொகு

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்த போது பெண்கள் வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. இச்சூழ்நிலையில் மூன்று பெண்களை மட்டுமே கொண்ட குடும்பம் ஒன்று வாழ்க்கையை நடத்த சிரமப்பட்டது. பாட்டி, அம்மா, மகள் ஆகியோரைக் கொண்ட குடும்பம் அது. பாட்டியின் கணவரும், அம்மாவின் கணவரும் ஆஃப்கானில் சோவியத் ஊடுருவல் போரின் போது கொல்லப்பட்டனர். சிறுமியான மகள் ஆண் வேடமிட்டு வேலைக்குச் செல்கிறார். தாலிபான்கள் தங்களின் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது சிறுமியைப் பெண் எனக் கண்டு பிடித்து அவளை ஏற்கனவே மூன்று மனைவிகள் உள்ள ஒரு முதியவரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தண்டனை வழங்குகின்றனர்.

நடிகர்கள்தொகு

 • ஒசாமாவாக மரியா கோல்பாஹ்ரி ( Marina Golbahari)
 • ஆரிப் ஹிராடி
 • கோல் ரஹ்மான் கோர்பண்டி
 • ஸுபைதா சாகர்
 • முகம்மத் ஹாரீஃப் ஹாராட்
 • முகம்கத் நாடர் காத்ஜே
 • க்வாஜா நாடர்
 • ஹமிதா ரேஃபே

விருதுகள்தொகு

 • பிரடிஸ்லாவா சர்வதேச திரைப்பட விழா (2003)
 • கான்ஸ் திரைப்பட விழா (2003)
 • சினிமானிலா சர்வதேச திரைப்பட விழா (2004)
 • கோல்டன் க்ளோப் (2004)
 • கோல்டன் சேட்டிலைட் விருது (2004)
 • கோல்டன் ட்ரைலர் விருது
 • லண்டன் திரைபட விழா (2004)
 • மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழா (2003)
 • புஷான் சர்வதேச திரைப்பட விழா (2003)
 • வல்லோடிட் சர்வதேச திரைப்பட விழா (2003)
 • யங் ஆர்ட்டிஸ்ட் விருது (2004)

திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப் பெற்றது.

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. "OSAMA (12A)". British Board of Film Classification. 2003-12-12. 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-19 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 பாக்சு ஆபிசு மோசோவில் Osama
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசாமா_(திரைப்படம்)&oldid=3546867" இருந்து மீள்விக்கப்பட்டது