ஒசூர் வன உயிரியல் சரணாலயம்

ஒசூர் வன உயிரியல் சரணாலயம் என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் காடுகளில் உள்ள வன உயிரினங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட ஒரு உயிரியல் சரணாலயமாகும்.[1]

வரலாறு

தொகு

ஒசூர் வனக்கோட்டத்தில் பல்வேறு வன விலங்குகள் வாழ்கின்றன. இவற்றைப் பாதுகாக்கும் வகையில் ஒசூர் வனக்கோட்டத்தில் உயிரியல் சரணாலயம் அமைக்கவேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி 2014 ஆம் ஆண்டு ஒசூர் வன உயிரியல் சரணாலயம் உருவாக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்தன. அதன்படி ஒசூர் வனக்கோட்டத்தில் இருந்த மொத்தம் 1,50,000 ஹெக்டேர் பரப்பில், ஏறக்குறைய 47,000 ஹெக்டேர் வனப்பரப்பு தனியாக பிரிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு கிருட்டிணகிரி வனக்கோட்டமாக மாற்றப்பட்டது. மீதமுள்ள 1,03,000 ஹெக்டேர் பரப்பளவில் 50433 ஒசூர் வன உயிரியல் சரணாலயம் உருவாக்கபட்டுள்ளது. இந்த வன உயிரியல் சரணாலயமானது ஒரு குறிப்பிட்ட விலங்குகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வன விலங்குகளுக்குமான ஒரு சரணாலயமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.[2]

இடம்பெறும் பகுதிகள்

தொகு

இந்த உயிரியல் சரணாலமானது தேன்கனிக்கோட்டை, ஒசூர், அஞ்செட்டி, ஜவலகிரி ஆகிய நான்கு வனச்சரகங்களில் உள்ள 24 காப்புக்காடுகளைக் கொண்டுள்ளது.

விலங்குகள்

தொகு

இந்த சரணாலயத்தில் 200 முதல் 250வரையிலான யானைகள் வசித்துவருகின்றன. மேலும் சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை, முயல், மயில், காட்டுப்பன்றி, நரி, சாம்பல் நிற அணில், மலைப்பாம்பு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்கின்றன.[3] குறிப்பாக அஞ்செட்டி மற்றும் உரிகம் காப்புக்காடுகளில் சாதாரண அணிலைவிட உருவத்தில் பெரியதான சாம்பல் சிற அணில்கள் மிகுதியாக காணப்படுகின்றன. இந்த சரணாலயத்தில் மான்களில் புள்ளி மான், சாம்பல்நிற மான் உள்ளிட்ட நான்குவகை மானினங்கள் உள்ளன. மேலும் பலவகையான பட்டாம்பூச்சிகளும் உள்ளன.

பாதுகாப்பு

தொகு

இந்த சரணாலயத்தில் வன விலங்குகளைப் பாதுகாக்கும் வகையில் 20க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 40 முதல் 50வரையிலான காவலர்கள் விலங்குகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ஜோதி ரவிக்குமார் (சூன் 20 2018). "ஒசூர் வனக்கோட்டம் இரண்டாக பிரிப்பு புதியதாக கிருஷ்ணகிரி வனக்கோட்டம், ஒசூர் வன உயிரியல் சரணாலயம் உதயம் வன விலங்குகள் பாதுகாப்பு அதிகரிக்க வாய்ப்பு". தி இந்து தமிழ். 
  2. ஜோதிரவிக்குமார் (சூலை 6 2018). "ஒசூர் வன உயிரியல் சரணாலயத்தில் வன விலங்குகளைப் பாதுகாக்க 20 வேட்டை தடுப்பு முகாம்கள் மாவட்ட வன அலுவலர் தகவல்". இந்து தமிழ்: 3. 
  3. "ஓசூர், தருமபுரி பகுதிகளில் வன உயிரினங்கள் 2021 கணக்கெடுப்புப் பணி தொடக்கம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-03-17.