ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்

ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் (MS Oasis of the Seas) உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஆகும். இது பின்லாந்து நாட்டில் உள்ள தூர்கு தளத்தில் கட்டப்பட்டது. 360 மீட்டர் நீளமும் 16 அடுக்கு மாடிகளையும் கொண்டது. 2700 அறைகளை கொண்டுள்ளது. இதில் ஓரே சமத்தில் 6,300 பேர் பயணம் செய்யலாம். 2100 பேர் இக்கப்பலில் பணிபுரிகின்றனர். இது ரூ.7500 கோடி செலவில் கட்டப்பட்டது. இதில், 7 நீச்சல் குளங்கள், கைப்பந்து, கூடைப் ந்து, விளையாட்டு மைதானங் களும் உள்ளன. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்க கூடிய பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளன.[2]

MS ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ், நசவ், பஹாமாஸ்; ஜனவரி 2010
கப்பல்
பெயர்: ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்
உரிமையாளர்: ராயல் கரீபியன் சர்வதேச நிருவனம்
இயக்குனர்: Royal Caribbean International
பதியப்பட்ட துறைமுகம்: பகாமாசு Nassau, பகாமாசு
வழி: கரிபியன்
பணிப்பு: February 2006
கட்டியோர்: STX Europe, Turku, பின்லாந்து
செலவு: ஐஅ$1.4 billion (2006)
துறையெண்: 1363
துவக்கம்: 12 நவம்பர் 2007
வெளியீடு: 21 நவம்பர் 2008 (float-out)
பெயரிடப்பட்டது: 30 நவம்பர் 2009
நிறைவு: 28 அக்டோபர் 2009
கன்னிப்பயணம்: 5 டிசம்பர் 2009
அடையாளம்: Call sign: C6XS7
IMO number: 9383936
MMSI number: 311020600
நிலை: சேவையில் உள்ளது.
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:Oasis-வகுப்பு cruise ship
நிறை:2,25,282 GT
2,42,999 NT
15,000 DWT[1]
நீளம்:361.6 m (1,186.5 அடி) overall
வளை:47 m (154 அடி) waterline
60.5 m (198 அடி) max beam
உயரம்:72 m (236 அடி) above water line
Draught:9.3 m (31 அடி)
ஆழம்:22.55 m (74 அடி)
தளங்கள்:16 பயணிகள் தளம்
பொருத்திய வலு:3 × 13,860 kW (18,590 hp) Wärtsilä 12V46D
3 × 18,480 kW (24,780 hp) Wärtsilä 16V46D
உந்தல்:3 × 20 MW (27,000 hp) ஏபிபி Azipod,
    all azimuthing
4 × 5.5 MW (7,400 hp) Wärtsilä CT3500
    bow thrusters
விரைவு:22.6 knots (41.9 km/h; 26.0 mph)
கொள்ளளவு:5,400 ஒரு நேரத்தில் பயணிகள் வசதி முதல் அதிகபட்சம்மாக
6,296 வரை
பணியாளர்:2,165 on maiden voyage
2,394 as of சூலை 2012

சிறப்புகள்

தொகு

கப்பல்களிலேயே பிரமாண்டத்திற்கு குறைவில்லாத கப்பல் இதுதான். இதன் எடை 2 லட்சத்து 25 ஆயிரம் டன்கள் கொண்டது. இதன் உள்ளே 150 மைல்கள் பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மின்சார தேவைக்காக 3 ஆயிரத்து 300 மைல்கள் ஒயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பயணம் ஒன்றின் போது 6,300 பேர் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் பதினாறு மாடிகள் உள்ளன மற்றும் இதில் 7 சிறிய நகரங்கள், 11 விடுதிகள், ஒரே நேரத்தில் 780 பேர் அமரக்கூடிய கலை அரங்கமும் உள்ளது. குழந்தைகள் விளையாட திடலும், கைப்பந்து மைதானமும், மற்றும் கோல்ஃப் மைதானமும் கொண்டு ஒரு சிறிய தீவு போல் காட்சி அளிக்கிறது.[3]

மேற்கோள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Oasis of the Seas (ship, 2009)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒயாசிஸ்_ஆஃப்_தி_சீஸ்&oldid=3237236" இலிருந்து மீள்விக்கப்பட்டது