ஒயார்சின்னக்குளம்


ஒயார்சின்னக்குளம் (Oyarsinnakkulam) இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் தாண்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் வவுனியா பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும்.[1]

ஒயார்சின்னக்குளம்

ஒயார்சின்னக்குளம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - வவுனியா
அமைவிடம் 8°47′14″N 80°28′41″E / 8.78729°N 80.47802°E / 8.78729; 80.47802
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2015)
360 (113 குடும்பங்கள்)

மக்கள்

தொகு

2015 ஆம் ஆண்டுத் தரவுப்படி ஆண்கள் 175 பேரும் பெண்கள் 185 பேருமாகவும் சிறுவர்கள் 108 பேருமாக 113 குடும்பங்கள் உள்ளன. 4 பேர் விசேட தேவைகளுக்கு உட்பட்டவர்களும் உள்ளனர். இக் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் வேளாண்மையில் ஈடுபடுகின்றனர் சிலர் அரசபணிகளிலும் உள்ளனர். இக்கிராமத்தில் வயற்காணிகளும் உண்டு

பொது வசதிகள்

தொகு

இக்கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், மாதர் சங்கம், மகளிர் அமைப்பு ஆகிய அமைப்புக்கள் உள்ளன. இவ்வூரில் உள்ளவர் அருகில் உள்ள தாண்டிக்குளம் பிரிமண்டு பாடசலையிலும் ஏனைய நகர்ப் பாடசலைகளிலும் கல்வி கற்கின்றனர். இக்கிராமத்தில் பெரும்பாலானவர்களிடம் மலசலகூடம் உள்ளது. இக்கிராமத்தில் மழைக்காலத்தில் நீர் வடிந்தோடாமையே பெரும் பிரச்சினையாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Grama Niladhari Divisions - Vavuniya". Vavuniya Divisional Secretariat. 1 பெப்ரவரி 2012. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 15 அக்டோபர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Vavuniya - Disaster Risk Reduction and Preparedness Plan" (PDF). UN-Habitat Sri Lanka. p. 91. Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒயார்சின்னக்குளம்&oldid=3928384" இலிருந்து மீள்விக்கப்பட்டது