ஒருசோடியம் சிட்ரேட்டு
ஒருசோடியம் சிட்ரேட்டு (Monosodium citrate) என்பது NaC6H7O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட, சிட்ரிக் அமிலத்தினுடைய அமில உப்பு வகையைச் சேர்ந்த ஒரு சேர்மமாகும். மிகச்சரியாகச் சொல்வதென்றால் இதை சோடியம் ஈரைதரசன் சிட்ரேட்டு என்று கூறலாம். இரு சோடியம் சிட்ரேட்டு மற்றும் முச்சோடியம் சிட்ரேட்டு போன்ற சேர்மங்களும் அறியப்படுகின்றன. நீர்த்த சோடியம் பை கார்பனேட்டு கரைசலை பகுதி நடுநிலையாக்கல் மூலம் அல்லது சிட்ரிக் அமிலத்துடன் கார்பனேட்டைச் சேர்ப்பதன் மூலம் ஒருசோடியம் சிட்ரேட்டைத் தயாரிக்கலாம்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சோடியம் ஈரைதரசன் 2-ஐதராக்சிபுரொபேன்-1,2,3-முக்கார்பாக்சிலேட்டு
| |
இனங்காட்டிகள் | |
18996-35-5 | |
ChEBI | CHEBI:53258 |
ChemSpider | 27304 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23662352 |
| |
பண்புகள் | |
C6H7NaO7 | |
வாய்ப்பாட்டு எடை | 214.10 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
NaHCO3 + C6H8O7 → NaC6H7O7 + CO2 + H2O
ஒரு சோடியம் சிட்ரேட்டு நீரில் நன்கு கரையக் கூடியதாகவும் எத்தனாலில் கரையாத சேர்மமாகவும் விளங்குகிறது. தானம் செய்யப்பட்ட இரத்தம் திரிதலை தடுக்கும் எதிர்ப்பொருளாக இச்சேர்மம் பயன்படுகிறது [1].
மேற்கோள்கள்
தொகு- ↑ Clinical Hematology: Theory and Procedures, Mary Louise Turgeon