ஒற்றப்பாலம் தொடருந்து நிலையம்

கேரளத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம்


ஒற்றப்பாலம் தொடருந்து நிலையம் (Ottapalam railway station, நிலைய குறியீடு: OTP[2]) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG–3 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[2] இது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றப்பாலம் என்ற ஊரில் உள்ளது.[3]

ஒற்றப்பாலம்
இந்திய இரயில்வே நிலையம்
ஒற்றப்பாலம் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தொடருந்து நிலைய சாலை, ஒற்றப்பாலம், பாலக்காடு மாவட்டம், கேரளம்
இந்தியா
ஆள்கூறுகள்10°46′12″N 76°22′40″E / 10.76991°N 76.37765°E / 10.76991; 76.37765
ஏற்றம்கடல் மட்டத்திலிருந்து 33 மீட்டர் உயரம்
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்ஜோலார்பேட்டை-ஷோரனூர் வழிப்பாதை
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைAt–grade
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டின்
நிலையக் குறியீடுOTP
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) பாலக்காடு
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1904; 120 ஆண்டுகளுக்கு முன்னர் (1904)[1]
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
ஒற்றப்பாலம் is located in இந்தியா
ஒற்றப்பாலம்
ஒற்றப்பாலம்
இந்தியா இல் அமைவிடம்
ஒற்றப்பாலம் is located in கேரளம்
ஒற்றப்பாலம்
ஒற்றப்பாலம்
ஒற்றப்பாலம் (கேரளம்)

வரலாறு

தொகு

ஒற்றப்பாலம் நிலையம் 1904 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1]

இப்பகுதியின் வரலாறு, பண்பாடு, கட்டடக்கலை, ஓற்றப்பாலத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க மக்களைச் சித்தரிக்கும் பல சுவரோவியங்களுடன் இந்த நிலையம் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாற்றம் கண்டது. சுவரோவியங்களை தேவா கிரியேசன்சின் ஓவியர்களான அம்பிலி தெக்கெடத், டி. எஸ். சானு ஆகியோர் உருவாக்கினர். நிலையத்தின் சுவரோவியங்களில் சி. சங்கரன் நாயர், வி. பி. மேனன், கே. ஆர். நாராயணன், செம்பை வைத்தியநாத பாகவதர், மணி மாதவ சாக்கியர், பி. குஞ்ஞிராமன் நாயர், குஞ்சன் நம்பியார் ஆகியோர் இடம்பெற்றுள்ளர். மேலும் வரிக்காசேரி மனா, பழைய ஒற்றப்பாலம் நீதிமன்ற கட்டடம், சின்னகத்தூர் பூரன் போன்ற உள்ளூரின் முதன்மையான திருவிழாக்கள் போன்றவற்றை சித்தரிக்கும் சுவரோவியங்கும,், கதகளி மற்றும் ஓட்டன் துள்ளல் போன்ற கலை வடிவங்களின் சித்தரிப்புகளும் இடம்பெற்றன. மேலும் 1921 ஆம் ஆண்டு ஒற்றப்பாலத்தில் நடைபெற்ற கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முதல் மாநாட்டை சித்தரிக்கும் சுவரோவியமும் உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Ottapalam railway station gets a mural makeover". 1 February 2021. https://timesofindia.indiatimes.com/city/kochi/ottapalam-rly-stn-gets-a-mural-makeover/articleshow/80617384.cms. 
  2. 2.0 2.1 "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 4. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
  3. "Arrivals at OTP/Ottappalam". India Rail Info.