ஒற்றைக்கோணம்
வடிவவியலில் ஒற்றைக்கோணம் (Monogon) என்பது ஒரு விளிம்புடனும், ஒரு உச்சியுடனும் கூடிய பல்கோணமாகும். இது சிலாப்லி குறியீடு {1}-ஐக் கொண்டுள்ளது.[1]
ஒற்றைக்கோணம் | |
---|---|
வட்டம் ஒன்றில், ஒற்றைக்கோணம் என்பது ஒற்றை உச்சியுடனும், ஒரு 360-பாகை வில் விளிம்புடனும் கூடிய ஒரு பின்னல் அடுக்கு ஆகும். | |
வகை | ஒழுங்கு பல்கோணி |
விளிம்புகள் மற்றும் உச்சிகள் | 1 |
சிலாஃப்லி குறியீடு | {1} அல்லது h{2} |
கோஎக்சிட்டர்-டின்க்கின் படம் | அல்லது |
சமச்சீர் குலம் | [ ], Cs |
இருமப் பல்கோணம் | Self-dual |
யூக்ளிடியன் வடிவவியலில்
தொகுயூக்ளிடியன் வடிவவியலில் ஒற்றைக்கோணம் என்பது ஒரு சிதைவு பல்கோணமாகும், ஏனெனில் அதன் இறுதிப்புள்ளிகள் எந்த யூக்ளிடியக் கோட்டுத் துண்டுகளையும் போலல்லாமல் ஒன்றி இணைந்திருக்க வேண்டும். யூக்ளிடிய வடிவவியலில் பல்கோணத்தின் பெரும்பாலான வரையறைகள் ஒற்றைக்கோணம் என்பதை ஏற்கவில்லை.
கோள வடிவியலில்
தொகுகோள வடிவியலில், ஒரு பெரு வட்டத்தில் (நிலநடுக் கோடு) உச்சியாக ஒரு ஒற்றைக்கோணத்தை உருவாக்க முடியும். இது ஒரு 360° விளிம்பையும் ஒரு உச்சியையும் பகிர்ந்து கொள்ளும் இரண்டு அரைக்கோள ஒற்றைக்கோண முகங்களுடன் {1,2} என்ற இருதளவுருவை உருவாக்குகிறது. அதன் இருமமான, ஒரு {2,1} என்ற ஓசோகெட்ரான் (hosohedron ), துருவங்களில் ஒரு 360° பிறை முகத்தையும், இரண்டு உச்சிகளுக்கிடையே ஒரு விளிம்பையும் கொண்ட இரண்டு காலெதிர்ப் புள்ளிகளைக் கொண்டுள்ளது.[1]
ஒற்றைக்கோண இருதளவுரு, {1,2} |
ஒற்றைக்கோண ஓசோகெட்ரான், {2,1} |
மேற்கோள்கள்
தொகு- Herbert Busemann, The geometry of geodesics. New York, Academic Press, 1955
- Coxeter, H.S.M; Regular Polytopes (third edition). Dover Publications Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-61480-8