ஒலிம்பசு மலை

(ஒலிம்பசு மலைச்சிகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒலிம்பசு மலை அல்லது ஒலிம்பிய மலை என்பது கிரேக்க நாட்டில் உள்ள உயரமான மலை ஆகும். இது ஒலிம்பசு மலைத்தொடரில் தெசாலி மற்றும் மாகெடோனியா ஆகிய இரு பகுதிகளின் இடையே உள்ள எல்லையில் அமைந்துள்ளது. கிரேக்கத் தொன்மவியலில் ஒலிம்பசு மலை ஒலிம்பிய கடவுள்களின் வீடாகக் கூறப்படுகிறது. 2,918 மீட்டர் உயரம் கொண்ட மிடிகாசு என்ற சிகரம் ஒலிம்பசு மலையின் மிக உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரமே ஒலிம்பிய கடவுள்களின் சந்திப்பு இடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஒலிம்பசு மலை
ஒலிம்பசு மலை
உயர்ந்த புள்ளி
உயரம்2,918 m (9,573 அடி)[1]
புடைப்பு2,355 m (7,726 அடி)[2]
ஆள்கூறு40°05′08″N 22°21′31″E / 40.08556°N 22.35861°E / 40.08556; 22.35861
புவியியல்
அமைவிடம்கிரேக்க நாடு
மூலத் தொடர்சலோனிகா வளைகுடாவின் அருகில் உள்ள மகடோனியா மற்றும் தெசாலி
ஏறுதல்
முதல் மலையேற்றம்2 ஆகத்து 1913
கிறிசுடோசு ககலோசு, பிரட்ரிக் போய்சொன்னாசு மற்றும் டேனியேல் பாட்-போவி
மிடிகாசு, ஒலிம்பசு மலையின் உயரமான சிகரம்

ஒலி்ம்பசு மலையில் 52 சிகரங்களும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும் அரியவகை பல்லுயிரிகளும் இருக்கின்றன. இந்த மலையில் செழிப்பான பல வகைத் தாவரங்களும் இருக்கின்றன. இந்த மலை கிரேக்க நாட்டின் தேசிய பூங்காவாகவும் உலகின் பல்லுயிர் வலயங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.[1]

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றைக் காண்பதற்கும், மலைச்சரிவுகளில் பயணம் செய்யவும், சிகரத்தை அடையவும் வருகின்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட புகலிடங்கள் மற்றும் மலையேற்றத்திற்காக ஏறும் வழிகள் ஆகியன இந்த மலையை ஆராய வருபவர்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் இந்த மலையை ஏறுவதற்கு தொடக்கப் புள்ளியாக கிழக்கு அடிவாரத்தில் அமைந்துள்ள லிட்டோகோரோ நகரம் இருக்கிறது. இந்த இடத்தில் தான் ஒவ்வொரு கோடைக் காலத்திலும் நடைபெறும் ஒலிம்பசு மராத்தான் நிறைவடையும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "General Information". Olympus National Park. Management Agency of Olympus National Park. Archived from the original on 14 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 30 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Europe Ultra-Prominences". peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 31 December 2010.
  3. "Course Description". olympus-marathon.com. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிம்பசு_மலை&oldid=3928402" இலிருந்து மீள்விக்கப்பட்டது