ஒல்லியான கல் அயிரை
ஒல்லியான கல் அயிரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரிபார்மிசு
|
குடும்பம்: | பாலிடோரிடே
|
பேரினம்: | |
இனம்: | பே. மைசோரென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
பேலிதோரா மைசோரென்சிசு கோரா, 1941 |
ஒல்லியான கல் அயிரை (Slender stone loach)(பேலிதோரா மைசோரென்சிசு) என்பது மலை-ஓடை அயிரை மீன் சிற்றினமாகும்.[2] இது இந்தியாவில் கேரளா, மகாராட்டிரம் மற்றும் கருநாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது. இது கொட்டும் நீரோடைகளில் பாறைகள், கற்கள் மற்றும் கற்பாறைகளுடன் காணப்படும் அகணிய உயிரியாகும்.
ஒல்லியான கல் அயிரை மீன் 5.0 cm (2.0 அங்) நீளம் வரை வளரக்கூடியது.
ஒல்லியான கல் அயிரை மீன் பன்னாடு மீன் வணிகத்திற்காகச் சேகரிக்கப்படுகிறது. சில ஆறுகளில், தோட்டங்களிலிருந்து வரும் மாசுபாடு மற்றும் அழிவுகரமான மீன்பிடி நடைமுறைகளால் இந்த சிற்றினம் அச்சுறுத்தப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ali, A.; Raghavan, R. (2011). "Balitora mysorensis". IUCN Red List of Threatened Species 2011: e.T172476A6899940. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T172476A6899940.en. https://www.iucnredlist.org/species/172476/6899940. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Eschmeyer, W. N. (2 June 2015). "Catalog of Fishes". California Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 17 June 2015.