மலை ஓடை அயிரை
மலை ஓடை அயிரை | |
---|---|
பாலிடாரோபிசு சூலின்ஜெரி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரிபார்மிசு
|
குடும்பம்: | பாலிடோரிடே
|
பேரினம் | |
மலை ஓடை அயிரை (Hillstream loach) அல்லது ஆற்று அயிரை என்பது பாலிடோரிடே குடும்பத்தினைச் சார்ந்த சிறிய வகை மீன்களாகும்.[3] இவை தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா மற்றும் கிழக்காசியாவில் காணப்படுகின்றன. இக்குடும்பத்தில் சுமார் 202 சிற்றினங்கள் உள்ளன. இவை சில சமயங்களில் "பல்லி மீன்" அல்லது (ஜெர்மனியில்) "பிளாசுசென்சாங்கர்சு" என விற்கப்படுகின்றன. பல சிற்றினங்கள் நீர்வாழ் உயிரின காட்சி மீன்களாகப் பிரபலமாக உள்ளன. செவெல்லியா பேரின மீன்கள் பொதுவாக நீர்வாழ் காட்சி உயிரின வர்த்தகத்தில் அதிகமாக விற்கப்படும் மீனாக உள்ளன. இவை கோபிடிடேமீன்களுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. இவை வாயைச் சுற்றிக் காணப்படும் மீசை போன்ற பல முடிகளைக் கொண்டுள்ளன. இவற்றினை உருவ ஒற்றுமை உடைய லோரிகாரிட்களுடன் குழப்பமடையக்கூடாது, ஏனெனில் லோரிகாரிட் கெளிறு மீன் குடும்பத்தினைச் சார்ந்தவையாகும்.
பெரும்பாலான சிற்றினங்கள் வேகமாகச் செல்லும் நீரோடைகளிலும், தெளிவான மற்றும் நன்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட நீரோடைகளில் வாழ்கின்றன. இவற்றின் வயிற்றுப்புற துடுப்புகள் பாறைகளில் ஏறுவதற்கு ஏற்ற வகைகளில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.[4]
இதனுடைய துணைக்குடும்பமான நெமகெலினே சமீபத்தில் தனிக் குடும்பமாக (நெமகெலிடே) பிரிக்கப்பட்டது. பல்வேறு பேரினங்கள் பிரிக்கப்பட்டு கேசுட்ரோமைசூண்டிடே குடும்பத்தின்கீழ் வைக்கப்பட்டன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dienbienia". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
- ↑ 2.0 2.1 Randall, Z.S. & Page, L.M. (2015): On the paraphyly of Homaloptera (Teleostei: Balitoridae) and description of a new genus of hillstream loaches from the Western Ghats of India. Zootaxa, 3926 (1): 57–86.
- ↑ 3.0 3.1 Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). Archived 2013-02-11 at the Wayback Machine The Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
- ↑ Banister, K.E. (1998). Paxton, J.R. (ed.). Encyclopedia of Fishes. San Diego: Academic Press. pp. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-547665-5.