ஒ.டி.சி. அனுமன் கோயில், பாளையம்

ஒ.டி.சி. அனுமான் கோயில் அல்லது அதிகாரிகள் பயிற்சி மைய அனுமான் கோயில், இந்தியாவில் கேரளாவில் அதிக பக்தர்கள் செல்கின்ற அனுமன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் உள்ள பாளையத்தில் அமைந்துள்ளது.[1]

வரலாறு

தொகு

மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக்குப் பிறகு, திருவிதாங்கூரின் தலைநகரம் பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில், நாயர் படையின் தலைமையகம் பழைய தலைநகரில் இருந்து புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து அது கொல்லத்திற்கு மாற்றப்பட்டு, மறுபடியும் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. நாயர் வீரர்கள் தம்முடன் தம் பல தெய்வங்களை திருவனந்தபுரத்திற்கு கொண்டு வந்தனர். நாயர் படைப்பிரிவின் குதிரைப்படையினர் பழவங்காடி மற்றும் பாளையம் கோவில்களின் விநாயகர் சிலைகளை கொண்டு வந்தனர். அதே காலகட்டத்தில் அனுமனை திருவனந்தபுரத்திற்கு கொண்டு வந்தனர். இக்கோயில் இராணுவ வளாகத்தில் இருப்பதால் இக்கோயில் OTC (அதிகாரிகள் பயிற்சி முகாம்) அனுமன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

மூலவர், துணைத்தெய்வங்கள்

தொகு

இக்கோயிலில் மூலவராக அனுமன் உள்ளார். இங்கு சிவன், கணபதி, நாக தெய்வங்கள் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளன.

நிர்வாகம்

தொகு

இக்கோயில் தற்போது திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு