ஒ. என். சுந்தரம்

ஒ. என். சுந்தரம் (O. N. Sundaram) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தினைச் சேர்ந்தவர். சுந்தரம் திண்டுக்கல் தூய மேரி உயர்நிலைப் பள்ளியிலும், திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். இவர் 1971ஆம் ஆண்டு திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் நிறுவன காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 திண்டுக்கல் நிறுவன காங்கிரசு 27,775 39.80[2]

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 395. 
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ._என்._சுந்தரம்&oldid=3483196" இலிருந்து மீள்விக்கப்பட்டது