ஓக்லா சரணாலயம்

ஓக்லா பறவைகள் சரணாலயம் (Okhla Bird Sanctuary) அதிகாரப்பூர்வமாக சாகீத் சந்தர் சேகர் ஆசாத் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. இது யமுனா ஆற்றின் குறுக்கே ஓக்லா தடுப்பணையில் உள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும் . இது டெல்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள கௌதம புத்த நகர் மாவட்டத்தில் நொய்டாவில் அமைந்துள்ளது. மேலும், இது 300 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், குறிப்பாக நீர் பறவைகளுக்கு புகலிடமாக அறியப்படுகிறது. [1] 1990 இல்,யமுனா நதியில் 3.5 சதுர கிலோமீட்டர் (1.4 சதுர மைல்) பரப்பளவு கொண்ட ஒரு பறவைகள் சரணாலயத்தை 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உத்தரபிரதேச அரசால் நிறுவப்பட்டது. யமுனா நதி உத்தரபிரதேசத்திற்குள் நுழையும் இடத்தில் இந்த தளம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தின் மிக முக்கியமான அம்சம், மேற்கு திசையில் ஓக்லா கிராமத்துக்கும் கிழக்கே கௌதம புத்தர் நகருக்கும் இடையில் அமைந்துள்ள நதியை அணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட பெரிய ஏரி ஆகும். ஓக்லா பறவைகள் சரணாலயம் சுமார் 4 சதுர கிலோமீட்டர் அளவு கொண்டது. உத்தரபிரதேசத்தின் கௌதம புத்தர் நகர் மாவட்டத்தில் நொய்டாவின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. தில்லி பிரதேசத்தை விட்டு வெளியேறி உத்தரப்பிரதேச மாநிலத்தில் யமுனா நதி நுழையும் ஒரு இடத்தில் இது அமைந்துள்ளது. இது மாநிலத்தின் பதினைந்து பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும்.

ஓக்லா சரணாலயம்
சாகீத் சந்தர் சேகர் ஆசாத் சரணாலயம்
ஓக்லா பறவைகள் சரணாலயத்தின் நுழைவு
Map showing the location of ஓக்லா சரணாலயம்
Map showing the location of ஓக்லா சரணாலயம்
Map showing the location of ஓக்லா சரணாலயம்
Map showing the location of ஓக்லா சரணாலயம்
அமைவிடம்நொய்டா, கௌதம புத்தா நகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
அருகாமை நகரம்நொய்டா
ஆள்கூறுகள்28°33′54″N 77°18′11″E / 28.565°N 77.303°E / 28.565; 77.303
பரப்பளவு3.5 சதுர கிலோமீட்டர்கள் (1.4 sq mi)
நிறுவப்பட்டது1990
நிருவாக அமைப்புஇந்திய அரசு

முள் புதர், புல்வெளி மற்றும் ஈரநிலத்தின் பறவை இனங்கள் சரணாலயத்தில் அதன் இருப்பிடத்தின் காரணமாக அதிகம் காணப்படுகின்றன. இந்த ஈரநிலம் ஓக்லா தடுப்பணையை உருவாக்கியதன் மூலம் உருவாக்கப்பட்டது. உத்தரப்பிரதேச அரசு 1990 ஆம் ஆண்டில் இதை ஒரு சரணாலயமாக நிறுவியது. இது இப்போது இந்தியாவின் 466 முக்கியமான பறவை பகுதிகளில் ஒன்றாகும்.

வரலாறு தொகு

 
ஓக்லா பறவைகள் சரணாலயத்தில் ஆண்டி வாத்து

1874 ஆம் ஆண்டில் இங்கிருந்து தொடங்கிய ஆக்ரா கால்வாய் கட்டப்பட்டதிலிருந்து, யமுனா நதியையும், அதனுடன் தொடர்புடைய சதுப்பு நிலங்களையும் உள்ளடக்கிய ஓக்லா குறுக்கு அணைய சுற்றியுள்ள பகுதிகள் பறவைக் கண்காணிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கின்றன. மேஜர்-ஜெனரல் எச். பி. டபிள்யூ. ஹட்சன் ஓக்லாவின் பறவைகளை தில்லி பிராந்தியத்தில் 1943 சூன் முதல் மே 1945 வரை தனது பறவையியல் ஆய்வுகளின் போது பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து, திருமதி உஷா கங்குலி இந்த தளத்திலிருந்து பறவைகளை தில்லி பகுதியின் பறவைகள் என்ற தனது புத்தகத்தில் வழிகாட்டியாக பதிவு செய்தார்.

 
ஓக்லா பறவைகள் சரணாலயத்திலிருந்து யமுனா நதியின் காட்சி

பல ஆண்டுகளாக, யமுனாவில் மாசு அதிகரித்து வருவதாலும், சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் வாழ்விடங்கள் சுருங்குவதாலும், பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. [2] சுற்றியுள்ள நகரங்களில் விரைவான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் காரணமாக சரணாலயத்தின் வாழ்விடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. [3] [4] 2013 ஆகஸ்ட் 14, அன்று, உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சரணாலயத்தின் 10 கி.மீ சுற்றளவில் தனியார் கட்டுமான நிறுவனங்களால் கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை நிறுத்துமாறு நொய்டா அதிகாரத்திற்கு உத்தரவிட்டது. இப்பகுதியில் புதிய நில அளவீடு நடத்த அதிகாரத்தையும் அது கேட்டுக்கொண்டது. [1] [5] அக்டோபர் 2013இல், தீர்ப்பாயம் ஒரு இடைக்கால உத்தரவை வெளியிட்டது. "ஓக்லா பறவைகள் சரணாலயத்தின் 10 கி.மீ சுற்றளவில் அல்லது சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் தூரத்திற்குள் செய்யப்பட்ட அனைத்து கட்டிட கட்டுமானங்களும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வழங்கிய அறிவிப்பால் பரிந்துரைக்கப்படவெண்டும். தேசிய வனவிலங்கு வாரியத்தின் முடிவு மற்றும் அதன் அனுமதி பெறப்படும் வரை, சம்பந்தப்பட்ட அதிகாரம் திட்டங்களுக்கு நிறைவு சான்றிதழ்களை வழங்கக்கூடாது" என்றது. அதன்பிறகு, ஜூன் 2014 இல், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை உறுதி செய்தது. [6] [7]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Stop constructions around Okhla sanctuary: Tribunal to Noida authority". Hindustan Times. 15 August 2013. Archived from the original on 2013-08-18. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Riot of colours returns to Okhla Bird Sanctuary". The Hindu. 3 Jan 2011. Archived from the original on 2011-01-19. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Petition to protect Okhla bird sanctuary". The Times of India. 12 Mar 2009. Archived from the original on 2013-08-15. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. Ananda Banerjee (28 July 2011). "Report from India: Where Have the Birds Gone?". ClimateStoryTellers.org. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15.
  5. "National Green Tribunal whammy to realty projects". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15.
  6. Anumeha Yadav (12 June 2014). "SC order on Noida projects puts ball back in National Board of Wildlife's court". பார்க்கப்பட்ட நாள் 2014-06-18.
  7. "SC refuses to hear real estate firm's plea against Okhla sanctuary curbs". Livemint. 10 June 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-06-18.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Okhla Bird Sanctuary
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓக்லா_சரணாலயம்&oldid=3739877" இலிருந்து மீள்விக்கப்பட்டது