கௌதம புத்தா நகர் மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

கௌதம புத்தா நகர் மாவட்டம் (Gautam Budh Nagar district, இந்தி: गौतम बुद्ध नगर ज़िला, உருது: گوتم بدھ نگر ضلع‎) அல்லது ஜிபி நகர், வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் மாவட்டமாகும். பெரும்பாலும் புறநகர்ப் பகுதிகளாலான இந்த மாவட்டம்[2] தில்லியின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ளது. மாவட்டத் தலைநகரமாக நொய்டா விளங்குகிறது. 2011 கணக்கெடுப்பின்படி கடந்த பத்தாண்டுகளில் 51.52% மக்கள்தொகை கூடியுள்ள இந்த மாவட்டம் இந்தியாவின் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரப்பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.[3]

கௌதம புத்தா நகர் மாவட்டம்
गौतम बुद्ध नगर ज़िला
گوتم بدھ نگر ضلع
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கௌதம புத்தா நகர் மாவட்டம் அமைவிடம்
மாநிலம்உத்தரப் பிரதேசம்,  இந்தியா
Administrative divisionமீரட் கோட்டம்
தலைநகரம்நொய்டா
பரப்பளவு1,442 km2 (557 sq mi)
மக்கள்தொகை1,674,714 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,306/ச.கி.மீ (3,382.5/ச.மீ)
படிப்பறிவு89.78 சதவீதம்[1]
மக்களவைத் தொகுதிகௌதம புத்தா நகர்
அலுவல் இணையதளம்

இம்மாவட்டத்தின் நொய்டா பகுதியில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் 2019-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

அமைவிடம்

தொகு

மேற்கே அரியானா மாநிலத்திலிருந்தும் தில்லியிலிருந்தும் யமுனை ஆறு இந்த மாவட்டத்தைப் பிரிக்கிறது. வடக்கே காசியாபாத் மாவட்டமும் கிழக்கே புலந்த்ஷயர் மாவட்டமும் தெற்கில் அலிகர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

வரலாறு

தொகு

இந்த மாவடம் காசியாபாத் மற்றும் புலந்த்ஷயர் மாவட்டங்களின் சில பகுதிகளைக் கொண்டு சூன் 9, 1997ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இதன் மொத்தப் பரப்பளவு 1354 கிமீ2ஆகும். தில்லியில் அண்மையில் இருப்பதாலும் சிறந்த கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதாலும் பல முதன்மையான வணிக நிறுவனங்களும் தொழிலகங்களும் இங்கு அமைந்துள்ளன. தொழிற்பேட்டை நகரங்களான நொய்டா, நொய்டா பெருநகர், தாத்ரியும் தாஜ் விரைவு நெடுஞ்சாலையை அடுத்தப் பகுதிகளும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.

மக்கள்தொகையியல்

தொகு

2011 கணக்கெடுப்பின்படி கௌதம புத்தா நகர் மாவட்டம் 1,674,714 கொண்டு,[4] roughly equal to the nation of கினி-பிசாவு நாட்டிற்கிணையாகவும் [5] அமெரிக்க மாநிலம் இடாகோவிற்கு இணையாகவும்.[6] விளங்குகிறது. 640 இந்திய மாவட்டங்களில் 294ஆம் நிலையில் உள்ளது.[4] மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்த்தி சதுர கிமீக்கு 1252 |ஆக உள்ளது.[4] 2001-2011 பத்தாண்டுகளில் மக்கள்தொகை 39.32 % கூடியுள்ளது.[4] இந்த மாவட்டத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 852 பெண்களாக உள்ளது.[4] கல்வியறிவு விகிதம் 82.2 % ஆகும்.[4]

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
  2. http://gbnagar.nic.in/profile/profiletest.htm
  3. "Ghaziabad, GB Nagar hub of high literacy, falling sex ratio". The Times Of India. 2011-04-06 இம் மூலத்தில் இருந்து 2014-01-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140110000314/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-06/lucknow/29388339_1_ghaziabad-population-gautam-budh-nagar. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  5. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Guinea-Bissau 1,596,677 July 2011 est. {{cite web}}: line feed character in |quote= at position 14 (help)
  6. "2010 Resident Population Data". U. S. Census Bureau. Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30. Idaho 1,567,582 {{cite web}}: line feed character in |quote= at position 6 (help)