பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம்

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் (Pandit Deendayal Upadhyaya Institute of Archaeology) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மேற்கில், தில்லியை ஒட்டி அமைந்த கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள பெருநகர நொய்டாவில் அமைந்துள்ள்து. இத்தொல்லியல் கல்வி நிலையத்தை 9 மார்ச் 2019 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.[1][2][3]தொல்லியல் படிப்பில் முதுகலை பட்டயப் படிப்பு கற்றுத் தரும் இத்தொல்லியல் வளாகம் ரூபாய் 289 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் 1000 பேர் அமரக்கூடிய கூட்ட அரங்கம், திறந்த வெளி அரங்கம், தொல்லியல் அருங்காட்சியகத்துடன் கூடியது. இந்நிறுவனம் தொல்லியல் மற்றும் அகழ்வாய்வு படிப்புகளில் பட்டமேற்படிப்பு பட்டயக் கல்வி ((Post Graduate Diplom) வழங்குகிறது. இந்நிறுவனத்தின் இயக்குநராக வி. என். பிரபாகர் உள்ளார்.[4]இந்நிறுவனம் இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம்
Parent institutionஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
Founder(s)இந்திய அரசு
Established9 மார்ச் 2019
இயக்குநர்வி. என். பிரபாகர்
Ownerஇந்திய அரசு
Locationநொய்டா பெருநகர், நொய்டா, உத்தரப் பிரதேசம், கௌதம புத்தா நகர் மாவட்டம்
Websitehttp://asiegov.gov.in/webapi/ioa/

முதுநிலை பட்டயப் படிப்பு தொகு

இந்நிறுவனம் தொல்லியல் மற்றும் அகழ்வாய்வு படிப்பில் 2 ஆண்டு கால முதுநில பட்டயப் படிப்பு வழங்குகிறது.[5] இதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு சூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வேலைவாய்ப்பு செய்திகளில் வெளியிடப்படுகிறது. விண்ணப்பம் பெற கடைசி நாள் சூலை மூன்றாவது அல்லது நான்காவது வாரம் ஆகும். விண்ணப்பத்தின் ஆய்வு மற்றும் தகுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் இரண்டாவது / மூன்றாவது வாரத்தில் நடைபெறும் எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து, தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். பட்டியல் சமூத்தவர் & பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து அல்லது வேலை செய்யும் இடத்திலிருந்து இருந்து புதுதில்லிக்குச் செல்ல இரண்டாம் வகுப்பு இரயில் அல்லது பேருந்து கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது. மத்திய அல்லது மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பரிந்துரைக்கப்பட்ட துறைகள் வழியாக அனுப்ப வேண்டும். எழுத்து மற்றும் வாய்வழி தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களின் இறுதி தேர்வு செய்யப்படுகிறது.

கல்வித் தகுதி தொகு

சேர்க்கைக்கான தகுதிகள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பண்டைய அல்லது இடைக்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகியவற்றில் முதுகலை பட்டம் அல்லது சமஸ்கிருதம், தமிழ் மொழி, கன்ன்ட மொழி, தெலுங்கு மொழி பாலி மொழி, பிராகிருத மொழி, அரபு மொழி அல்லது பாரசீக மொழி அல்லது புவியியல் படிப்புகளில் முதுகலை பட்டப் படிப்புகளில் குறைந்தபட்ச மதிப்பெண் 55% பெற்றிருக்க வேண்டும்.[6][7] ஆனால் பட்டியல் சமூத்தவர் & பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குறைந்தபட்ச மதிப்பெண் 50% ஆகும். மேலும் இந்திய அரசு அல்லது இந்திய மாநில அரசுகளின் தொல்லியல் துறைகளில் மற்றும் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைகளில் பணிபுரியும் வேட்பாளர்கள் குறைந்தபடசம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

கூட்டுறவுத் திட்டங்கள் தொகு

தொல்லியல் துறையில் அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான அகழ்வாராய்ச்சி மாதிரியின் அறிவியல் பகுப்பாய்வுகள், பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம், புனேவில் உள்ள டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், ஐதராபாத் தேசிய தொலைநிலை உணர்திறன் நிறுவனம், டேராடூன் இந்திய தொலைதூர உணர்திறன் நிறுவனம், லக்னோ சகானி பாலியோபொட்டனி நிறுவனம மற்றும் அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகியவற்றுடன் இந்நிறுவனம் கூட்டு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. நொய்டா விரிவாக்கப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
  2. Prime Minister inaugurates the new Pandit Deendayal Upadhyaya Institute of Archaeology at Greater Noida in UP
  3. PM inaugurates NBCC built Pandit Deendayal Upadhyaya Institute of Archaeology in Greater Noida
  4. WHO'S WHO
  5. COURSE OF STUDY FOR PGDA
  6. தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் மொழி சேர்ப்பு- மத்திய அரசு அறிவிப்பு
  7. தொல்லியல் துறை படிப்புக்கு தகுதி அளவுகோலானது தமிழ் மொழி

வெளி இணைப்புகள் தொகு