ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு
ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு (Vienna Convention for the Protection of the Ozone Layer) என்பது பன்னாட்டுச் சுற்றுச்சூழல் உடன்படிக்கையைக் குறித்தது ஆகும். இவ்வொப்பந்தம் 1985ஆம் ஆண்டு நடைபெற்ற வியன்னா மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டு 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. பொதுமை நோக்கில், நாடுகளுக்கிடையிலான அனைத்து காலத்திற்கும் உகந்த மிகவும் வெற்றிகரமான உடன்படிக்கைகளில் வியன்னா உடன்படிக்கையும் ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் அவையின் 197 உறுப்பு நாடுகள் அனைத்தும் இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட்டு உறுதிசெய்துள்ளன. மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமாகக் கருதப்படும் திரு ஆட்சிப்பீடம், தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியுவே மற்றும் குக் தீவுகள் போன்ற அமைப்புகளும் இவ்வுடன்படிக்கையை உறுதி செய்துள்ளன[1]
கையெழுத்திட்டது | 22 மார்ச்சு 1985 |
---|---|
இடம் | வியன்னா |
நடைமுறைக்கு வந்தது | 22 செப்டம்பர் 1988 |
நிலை | 20 நாடுகள் உறுதி செய்தன |
கையெழுத்திட்டோர் | 28[1] |
அங்கீகரிப்பவர்கள் | 197[1] |
வைப்பகம் | செயலர், ஐ.நா |
மொழிகள் | அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் |
ஓசோன் படலத்தைப் பாதுகாக்க, சர்வதேச அளவிலான முயற்சிகளை ஒரு கட்டமைப்புடன் இவ்வுடன்படிக்கை செயல்படுகிறது. எனினும், ஓசோன் அடுக்கு பாதிப்பிற்குக் காரணமான பிரதான இரசாயன முகவரான சி.எப்.சி எனப்படும் குளோரோபுளோரோகார்பன்[2] நுகர்வைக் கட்டுப்படுத்தும் இலக்குடைய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதும் இவ்வுடன்படிக்கையில் உறுதி செய்யப்படவில்லை. இந்த இலக்குகளையும் உடன்சேர்த்து மாண்ட்ரியல் உடன்படிக்கை தீட்டப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Vienna Convention for the Protection of the Ozone Layer". United Nations Treaty Series. Archived from the original on 10 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Nolan, C.V.; Amanatidis, G.T. (1995). "European commission research on the fluxes and effects of environmental UVB radiation". Journal of Photochemistry and Photobiology B: Biology 31 (1–2): 3–7. doi:10.1016/1011-1344(95)07161-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1011-1344.
- ↑ Slaper, H.; Velders, G. J. M.; Daniel, J. S.; de Gruijl, F. R.; van der Leun, J. C. (1996). "Estimates of ozone depletion and skin cancer incidence to examine the Vienna Convention achievements" (in En). Nature 384 (6606): 256–258. doi:10.1038/384256a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:8918873.
புற இணைப்புகள்
தொகு- The Vienna Convention for the Protection of the Ozone Layer at The Ozone Secretariat at the United Nations Environment Programme
- UNEP: The Ozone Secretariat website பரணிடப்பட்டது 2007-05-24 at the வந்தவழி இயந்திரம்
- Ratifications பரணிடப்பட்டது 2011-09-10 at the வந்தவழி இயந்திரம்
- Treaty text
- Introductory note by Edith Brown Weiss, procedural history note and audiovisual material on the Vienna Convention for the Protection of the Ozone Layer in the Historic Archives of the United Nations Audiovisual Library of International Law
- Vienna Convention for the Protection of the Ozone Layer பரணிடப்பட்டது 2016-03-09 at the வந்தவழி இயந்திரம், Treaty available in ECOLEX-the gateway to environmental law (English)