ஓமோசிட்ரிக் அமிலம்

ஓமோசிட்ரிக் அமிலம் (Homocitric acid) என்பது HOC(CO2H)(CH2CO2H)(C2H4CO2H) அல்லது C7H10O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சிலவகை நைட்ரசனேசு புரதங்களில் இரும்பு-மாலிப்டினம் இணைகாரணியாக இயற்கையிலேயே இந்த டிரைகார்பக்சிலிக் அமிலம் தோன்றுகிறது [1]. உயிர் வேதியியலாளர்கள் பெரும்பாலும் இந்த இணைகாரணியை ஓமோசிட்ரேட்டு எனக் குறிப்பிடுகின்றனர், இந்த இனங்களின் நடுநிலை நீர்த்த கரைசல்களில் ஆதிக்கம் செலுத்தும் இணைகாரங்களாக இவை உள்ளன.

ஓமோசிட்ரிக் அமிலம்
Homocitric acid.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சிபியூட்டேன்-1,2,4-டிரைகார்பாக்சிலிக் அமிலம்
வேறு பெயர்கள்
ஓமோ சிட்ரேட்டு
இனங்காட்டிகள்
3562-74-1 Yes check.svgY
ChEBI CHEBI:17852 N
ChemSpider 26392 N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01251 N
பப்கெம் 28371
பண்புகள்
C7H10O7
வாய்ப்பாட்டு எடை 206.15 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஓமோசிட்ரிக் அமில மூலக்கூறு சிட்ரிக் அமிலத்துடன் தொடர்புடையதாக உள்ளது. ஒரு மெத்திலீன் அலகு இதில் கூடுதலாக இருப்பதால் முன்னொட்டு "ஓமோ" சேர்க்கப்படுகிறது. சிட்ரிக் அமிலம் போலல்லாமல், ஓமோசிட்ரிக் அமிலம் ஒரு நாற்தொகுதி அமிலமாகும். இந்த அமிலம் லாக்டோனுடன் வேதிச் சமநிலையில் உள்ளது.

Homocitrate2.png

இவற்றையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Rees, Douglas C. (2002). "Great Metalloclusters in Enzymology". Annual Review of Biochemistry 71: 221–46. doi:10.1146/annurev.biochem.71.110601.135406. பப்மெட்:12045096. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமோசிட்ரிக்_அமிலம்&oldid=2461854" இருந்து மீள்விக்கப்பட்டது