ஓம் பிரகாசு காந்தி

இந்திய நாட்டைச் சேர்ந்த சமூக சேவகர்

ஓம் பிரகாசு காந்தி (Om Prakash Gandhi) பெண் குழந்தை கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்திய நாட்டின் மாநிலமான அரியானாவைச் சேர்ந்த சமூக சேவகர் ஆவார். இவரது அதிகாரப்பூர்வ பெயர் ஓம் பிரகாசு போசுவால் ஆகும். இவரது பிறந்த நாள் 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி ஆகும்.

அரியானா மாநிலத்தில் உள்ள யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள மதோபன்சு கிராமத்தில் குர்சார் விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், ரடௌர் நகராட்சியில் உள்ள முகந்த் லால் மூத்த மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இளநிலை இயற்பியல் பட்டம் பெற்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டம் பெற்ற பிறகு, உத்தரபிரதேசத்தின் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் மணிகரனில் உள்ள குர்சார் டிகிரி கல்லூரியில் (கோச்சர் மகாவித்யாலயா என மறுபெயரிடப்பட்டது) விரிவுரையாளராக சேர்ந்தார். கல்லூரியில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, பெண்கள் சார்ந்த கல்வித் துறையில் பணியாற்றுவதற்காக தனது வேலையை துறந்தார். 1984 ஆம் ஆண்டு காத்ரி கிராமத்தில் பெண்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக கன்யா வித்யா பிரச்சார்னி சபா என்ற சமூகத்தை உருவாக்கினார். மேலும் சபாவின் கீழ் அரியானாவில் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள தேவதார் கிராமத்தில் குர்சார் கன்யா வித்யா மந்திர் பள்ளியை நிறுவினார். சபா, குர்ஜர் கன்யா குருகுல மகாவித்யாலயா, யமுனா நகர் பெண்களுக்கான உயர் கல்வி நிறுவனத்தையும் நிறுவியுள்ளது. 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று, அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ஓம் பிரகாசு காந்தியின் ஆதரவின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனமான சாம்ராட் மிகிர் போசு குருகுல வித்யாபீடத்திற்கு அடிக்கல் நாட்டினார். [1] [2]

அங்கீகாரம்: பத்மசிறீ

தொகு

2022 ஆம் ஆண்டில், சமூகப் பணித் துறையில் ஓம் பிரகாசு காந்தியின் சிறந்த சேவைக்காக இந்திய அரசாங்கம் பத்மசிறீ விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [3] "பெண் குழந்தைகளின் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரியானா சமூக சேவகர்" என்ற அவரது சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. Shiv Kumar Sharma. "Social worker Om Prakash Gandhi conferred the Padma Shri". Dainik Tribune. பார்க்கப்பட்ட நாள் 4 March 2022.
  2. Tribune News Service. "Khattar lays stone of Jagadhri Samrat Mihir Bhoj Vidyapeeth". Dainik Tribune. பார்க்கப்பட்ட நாள் 4 March 2022.
  3. "Padma Awards 2022" (PDF). Padma Awards. Ministry of Home Affairs, Govt of India. Archived from the original (PDF) on 2022-01-25. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
  4. "Padma Awards 2022". Padma Awards. Ministry of Home Affairs, Govt of India. Archived from the original on 2022-01-29. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_பிரகாசு_காந்தி&oldid=3764685" இலிருந்து மீள்விக்கப்பட்டது